Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

அறிவியல் சாரல் (20)
- டாக்டர் இரா. விஜயராகவன்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 275

28 ஆகஸ்ட் 2006


7th Sense
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

<<<<<சென்றவாரம்

8உயர் அழுத்த மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகளில் இருந்து ஒரு வகை ஒலி உண்டாவது ஏன்?

உயர் அழுத்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகளை உடைய கோபுரக் கம்பங்களின் அருகே நின்றால் ஒரு வகை ஒலி கேட்பது உண்மையே. இவ்வொலி உண்டாவதற்கு கம்பியில் செல்லும் மின்னோட்டம் காரணமல்ல. நரம்பிசைக் கருவிகளில் உள்ள தந்திகளில் தடையுண்டாகும்போது ஒலி எழும்புவதை நாம் அறிவோம். கோபுரங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பிகள் மிக விரைந்து வீசும் காற்றின் காரணமாக ஒத்ததிர்வுக்கு (Resonant vibration) ஆட்படுகின்றன. இந்த நிலையில் மின்கம்பிகளில் ஒலி உண்டாகிறது. இவ்வொலியே வண்டுகள் ரீங்காரம் செய்யும் ஒலியைப் போல நமக்குக் கேட்கிறது

8மின்னணு வளிமத் தீப்பொறிக் கருவியை (Electronic gas lighter) இயக்கும் போது, கருவியின் நுனிப்பகுதியில் கை வைத்தால் மின் அதிர்ச்சி (shock) ஏற்படுவது ஏன்?

தீப்பொறிக் கருவியில் உண்டாகும் பொறி உயர் அழுத்த மின்சாரத்தால் (high voltage electricity) உண்டாக்கப் பெறுகிறது. மேற்கூறிய கருவியில் அழுத்த மின்னியல் படிகம் (Piezo electric crystal) பயன்படுத்தப் பெறுகிறது. கருவியின் முன்பக்கத்திலுள்ள குமிழை (Knob) அழுத்தினால் படிகமும் அழுத்தப்பெற்று அதனால் மின் அழுத்தம் (Voltage) உண்டாகிறது. கருவியினுள் அமைந்துள்ள மின்னணுச் சுற்றினால் (Electronic circuit) இம்மின்னழுத்தம் மேலும் பெருக்கமடைந்து நுனிப்பகுதியில் அமைந்துள்ள இரு மின்முனைகளுக்கு (Electrodes) இடையே உள்ள சிறு சந்தில் செல்லும்போது மிகவும் திறன் வாய்ந்த தீப்பொறி உண்டாகிறது. அவ்வாறின்றி, குமிழை அழுத்தும்போது கருவியின் நுனியில் கைவிரலை வைத்தால், மின்னூட்டம் தீப்பொறியை உண்டாக்காமல், மாறாகக் கைவிரல் வழியே பாய்ந்து மின் அதிர்ச்சியை உண்டாக்குகிறது.

8மிகப் பெரிய ஒலியைக் கேட்கும்போது நாம் கண்களைச் சிமிட்டுவது ஏன்?

மிகப் பெரிய ஒலியை, அல்லது பேரிரைச்சலைப் பொதுவாக யாரும் விரும்புவதில்லை. இத்தகைய ஒலி நமது செவி நரம்புகள் ஊடே நாம் விரும்பாத தூண்டல்களை (Impulses) உண்டாக்குகிறது; மேலும் இதன் தொடர்ச்சியாக உடலுக்கு ஏதோ அபாயம் உண்டாகப் போகிறது என்ற ஓர் எச்சரிக்கையும் நமது நரம்பு மண்டலத்திற்கு அனுப்பப்படுகிறது. இந்த அபாயத்தின் அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் கண்கள் உடனே மூடிப் பின்னர் திறக்கின்றன; அதாவது கண்கள் சிமிட்டுகின்றன. இ•து ஓர் அனிச்சைச் செயல் (Reflex action); உணர்வு நரம்புகளுக்கும் (Sensory nerves) இயக்க நரம்புகளுக்கும் (Motor nerves) இடையே நடைபெறும் நேரடிச் செய்திப் பரிமாற்றத்தின் மூலம் இச்செயல் நடைபெறுகிறது. இயக்க நரம்புகள் செய்தி வந்தவுடனே மூளையுடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமல் உடனடியாக இந்த அனிச்சைச் செயலை மேற்கொள்ளுகின்றன.

8சாதாரண நிலையில் ஓடத் துவங்காத தானியங்கி வாகனம், பின்னாலிருந்து தள்ளினால் ஓடத் துவங்குவது ஏன்?

வாகனத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறு பொத்தானை அழுத்தினால், துவக்கும் மோட்டார் (Starter Motor) என அழைக்கப்படும் மின் மோட்டார் இயங்குகிறது. மோட்டாரின் இயக்கத்தினால் பொறியிலுள்ள (Engine) வணரி (Crank) திரும்பி, எரிபொருளின் எரியூட்டுதல் சுழற்சி (Combustion cycle) துவங்குகிறது. மின்மோட்டார் இவ்விதமாக இயங்காவிடிலோ, அல்லது மின்கல அடுக்கில் (Battery) திறன் குறைந்திருந்தாலோ வாகனம் இயங்க மறுக்கும். பொறியிலுள்ள பல்வேறு உந்துதண்டுகள் (Pistons) தமது இறுதி நிலையில் இருப்பினும் வாகனம் இயங்க மறுக்கலாம். இத்தகு நிலைகளில் வணரியை எப்படியாவது திருப்பிவிட்டால் பொறியும் அதைத் தொடர்ந்து வாகனமும் இயங்கத் துவங்கும். இச்செயலை பற்சக்கர (Gear) இழுவையுடன் இணைக்கப்பெற்ற நிலையில் வாகனத்தைத் தள்ளுவதன் மூலம் எளிதாக நிறைவேற்றலாம். வாகனத்தைத் தள்ளுவதனால் சக்கரங்கள் சுழல்கின்றன; இச்சுழற்சி பற்சக்கர அமைப்பையும் தாக்கிச் சுழல்விக்கிறது; பற்சக்கர அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள வணரித் தண்டும் (Crank shaft) இதனால் திரும்பப்பெற்றுப் பொறியை இயங்கச் செய்கிறது. எனவேதான் வாகனத்தைப் பின்னாலிருந்து தள்ளிப் பொறியை இயக்குவிக்கிறோம். வாகனம் பற்சக்கர அமைப்பில் சேராமல் இருப்பின் பொறியை இயக்குவிக்க முடியாது. ஏனெனில் அந்நிலையில் சக்கரங்கள் வணரித் தண்டுடன் சேர்ந்து சுழலாமல் தாம் மட்டுமே சுழன்று கொண்டிருக்கும். இதனால் வாகனம் ஓடாமல் சக்கரங்கள் மட்டுமே சுழலும்.

****

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide