Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

அறிவியல் சாரல் (21)
- டாக்டர் இரா. விஜயராகவன்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 276

4 செப்டம்பர் 2006


Astrology
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

<<<<<சென்றவாரம்

8உடலில் அடிபட்டால் (Injury) சில பகுதிகளில் இரத்தம் வருவதும், சில பகுதிகள் வீங்கிப் போவதும் ஏன்?

உடலின் எப்பகுதியிலாவது, காயம் அல்லது அடிபட்டால், தோலில் சிராய்ப்பு உண்டாகி, அங்குள்ள இரத்தக்குழாய்கள்(Blood vessels) சேதமடைந்து இரத்தம் ஒழுகுவதுண்டு; ஆனால் எப்போதும் இச்செயல் நடைபெறவேண்டும் என்பதில்லை. கூர்மையற்ற பொருளால் உடலில் அடிபடும்போது, அடிபட்ட இடத்தில் இரத்தம் கசியாமல், வீக்கம் மட்டுமே ஏற்படுவதுண்டு. இரத்ததை எடுத்துச் செல்லும் மெல்லிய தந்துகிகள் (Capillaries) அடியின் காரணமாகச் சேதமடைந்து விடுவதால் அடிபட்ட பகுதியிலுள்ள திசுக்களுக்கு (Tissues) இரத்தம் செல்வதில் தடையேற்படுகிறது. மேலும் தந்துகியிலிருந்து வெளியேறும் ஓரளவு இரத்தம் அடிபட்ட திசுப் பகுதியில் தோலுக்குக் கீழ் சேகரிக்கப்பட்டு வீக்கமாகத் தோன்றுகிறது. அடுத்து, இரத்த ஓட்டத்தின் காரணமாக மேலும் மேலும் இரத்தம் வந்து அவ்விடத்தில் சேர்கிறது; அதே நேரத்தில் குறைந்த அளவு இரத்தமே அப்பகுதிக்கு வெளியே எடுத்துச் செல்லப்படுகிறது; இதன் காரணமாக வீக்கம் குறிப்பிட்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். சில சமயம் அடிபட்ட பகுதியிலுள்ள திசுக்களின் சாறும் (Juice from tissues) அப்பகுதியில் சேகரிக்கப்பட்டு வீக்கம் மிகுதியாவதற்குக் காரணமாக அமைவதுண்டு. தந்துகிகள் சரியாகி, இரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு வந்தவுடன், வீக்கம் குறைந்துவிடும்.

8மிதிவண்டியின் முன் கவடு (Front fork) வளைந்தும், பின் பக்கக் கவடு நேராகவும் இருப்பதன் காரணம் என்ன?

மிதிவண்டியின் முன்கவடு நேராக இல்லாமல் வளைந்திருப்பது இரு காரணங்களுக்காக வரவேற்கப்படுகிறது. முதலாவது இ•து ஓர் அதிர்வுத் தாங்கியாகப் (Shock absorber) பணி புரிகிறது எனலாம். முன்பக்கமுள்ள கவடு வளைந்து இருப்பதால் வண்டிக்கு ஏற்படும் அதிர்ச்சி கைப்பிடியைச் (Handle) சென்று சேராமல் பெருமளவு தவிர்க்கப்பட்டு விடுகிறது. மிதிவண்டி ஓட்டுபவரின் எடை, வண்டி ஓடும்போது ஏற்படும் உராய்வு (Friction), இவ்விசைகளுக்கான எதிர்வினை (Reaction) ஆகிய இவைகளுக்கிடையே உண்டாகும் பல்வேறு விசைகளும் சக்கரம் தரையைத் தொடுமிடத்தில் வெளியேறுவதற்கு, வளைந்த முன்பக்கக் கவடு துணை புரிகிறது. இதனால் முன்சக்கரம் மேடுகளில் ஏறி இறங்கும்போது பக்கவாட்டில் திரும்பி விடாமல் வண்டி உறுதியாக நிலைத்து இருப்பதற்கு வழி செய்யப்படுகிறது. எனவே முன் பக்கத்தில் வளைந்த கவடு இருப்பது, மிதிவண்டி உறுதியாக நிலைத்து நிற்கவும், அதனை எளிதாக, வசதியாக ஓட்டுவதற்கும் துணை புரிகிறது.

8இரத்தக் காயம் ஏற்பட்ட பகுதியில் படிகாரத்தை (Alum) வைத்தால் இரத்தக் கசிவு நின்றுவிடுவது ஏன்?

காயம்பட்ட இடத்திலிருந்து இரத்தம் கசிவதற்கு, அவ்விடத்திலுள்ள இரத்தக் குழல்கள் (Blood vessels) வெட்டப்படுவதே காரணம். இரத்தக் குழலில் வெட்டு சிறு அளவில் இருப்பின் இயற்கையான பாதுகாப்பு எதிர்வினையால் சிறிது நேரத்தில் இரத்தம் வெளியேறுவது நின்றுபோய் உறைகட்டி (Clotting) யாகிவிடும். இரத்தத்திலுள்ள சில காரணிகள் (Factors) அதிலுள்ள புரோட்டீனை நூலிழையாலான வலை போன்ற நுண்ணிய அமைப்பாக மாற்றுகிறது. இதுவே இரத்தக் கசிவைத் தடுக்கிறது. சில சமயங்களில் மேற்கூறிய வலைபோன்ற மாற்றம் சில வேதிப் பொருள்களால் குறிப்பாக உலோக அயனிகளால் (Metallic ions) உருவாக்கப்படும். படிகாரம் என்பது அலுமினியம் பொட்டாசியம் சல்பேட் எனப்படும் அணைவு உப்பு (Complex salt). படிகாரத்திலுள்ள பொட்டாசியம் இரத்தத்தின் உறைவை விரைவுபடுத்தி கசிவைத் தடுக்கிறது. மேலும் படிகாரத்தின் துவர்ப்பு (Astringent) காரணமாக இரத்தக் குழல் சுருங்கியும் இரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது

8களைப்படைந்த கை கால் தசைகளை, யாரேனும் அமுக்கிவிட்டால் இதமாக இருப்பது ஏன்?

மிகுதியான வேலை அல்லது கடின உடற்பயிற்சி செய்தால் களைப்பு காரணமாக தசைகளில் வலி உண்டாகிறது. தசைகளுக்கு சாதாரண நிலையில் ஆற்றலை வழங்கும் அமைப்பு முறையால், அவை அதிக அளவு பணி செய்யும்போது போதுமான ஆற்றலை வழங்க முடிவதில்லை. இந்நிலையில் தசை உயிரணுக்கள் (Muscle cells) சர்க்கரைச் சிதைவு (Glycolysis) என்ற மாற்று முறையைக் கைக்கொள்கின்றன; இம்மாற்று முறையின்போது உடலிலுள்ள சர்க்கரை, லாக்டிக் அமிலமாக(Lactic acid) மாற்றமடைந்து தசைகளில் சேமிக்கப்படுகிறது. இந்த அமிலமே மிகுதியான வேலை அல்லது கடின உடற்பயிற்சிக்குப் பின்னர் தசைகளில் வலி ஏற்படக் காரணமாக அமைகிறது. வலியின் காரணமாக அவதியுறும் தசைகளை உருவி மென்மையாக அமுக்கி விட்டால், இரத்த ஓட்டம் அதிகரித்து சேமிக்கப் பெற்ற லாக்டிக் அமிலம் வெளியேற்றப்படுவதுடன் தேவையான உயிர்வளியும் (Oxygen) தசைகளுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் அவ்வாறு அழுத்திவிடுவதன் வாயிலாக, தசைகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் நரம்பு முனைகள் செயலூக்கம்பெற்று, அவை மூளையிலுள்ள உயிரணுக்களுடன் தொடர்பு கொண்டு வலி நீக்கத்திற்கான வேதிப் பொருட்களை வெளிக் கொணர்கின்றன. இம்முறைகளில் தசைகள் வலியும், களைப்பும் நீங்கப்பெற்று இதமான உணர்வைப் பெறுகின்றன.

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews