Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

அறிவியல் சாரல் (24)
- டாக்டர் இரா. விஜயராகவன்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 279

25 செப்டம்பர் 2006


Crazy Mohan
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

<<<சென்றவாரம்

8குவார்ட்ஸ் கடிகாரம் (Quartz clock) அப்பெயரால் வழங்கப்படுவதற்கு என்ன காரணம்?

குவார்ட்ஸ் என்பது ஒருவகைப் படிகக் (Crystal) கல் அல்லது பளிங்குக் கல்; இதனைக் குவார்ட்ஸ் கடிகாரங்களின் இதயம் என்று கூறலாம். இப்படிகம் பீசோ மின்சாரம் (Piezo electricity) எனும் பண்பைக் கொண்டுள்ளது. இதன்படி மாறு மின்னோட்டம் செலுத்தப்படும் போது மேற்கூறிய படிகம் நிலையான அதிர்வெண்ணில் அதிரும். சாதாரண சுவர் மற்றும் கைக் கடிகாரங்களில் சுருள்வில்லால் (spring) இயக்கப்படும் சமநிலை அலைவுச் சக்கரம் (Balanced oscillating wheel) உள்ளது. இச்சக்கரம் கடிகார முள் நகர்வதற்கும், சரியான நேரத்தைக் காட்டுவதற்கும் காரணமாக அமைகிறது. குவார்ட்ஸ் கடிகாரங்களில் அப்பணியைச் செய்வதற்கு குவார்ட்ஸ் படிகங்கள் பயன்படுத்தப் பெறுகின்றன. இதிலுள்ள அலைவு மின்சுற்றில் (Oscillating electric circuit) படிகங்களின் இயல்பு அதிர்வெண்ணுக்கு இணையான அதிர்வெண்களைக்கொண்ட அலைவு நிகழ்த்தப் பெறுகிறது. இதனால் கடிகாரத்தின் முழு அமைப்பும் படிகத்தின் அதிர்வுக்கு இணையான அதிர்வெண்களைக் கொண்டதாக அமையும். இவ்வாறு நிலையான அதிர்வைப் பெறுகிற படிக அமைப்பின் அலைவு மின்னழுத்தத்தால் பற்சக்கரத் தொடரில் (Gear train) இணைக்கப்பட்டுள்ள மிகச் சிறு அளவிலான மோட்டார் இயக்கப்பெறுகிறது. இம்மோட்டார் நொடி, நிமிடம், மணி ஆகிய வற்றைக் காட்டுகின்ற கடிகார முள்களை நகர்த்தி கடிகாரத்தை ஓடச் செய்கிறது. இதனாலேயே இவ்வகைக் கடிகாரம் குவார்ட்ஸ் கடிகாரம் என்று அழைக்கப்படுகிறது.

8குளிர் காலங்களில் நமது கை, கால், உதடுகளில் வெடிப்பு உண்டவது ஏன்?

புலன்களின் உணர்வுகளைப் பற்றி அனைவரும் நன்கு அறிவோம்; எனினும் அவற்றின் சில செயல்பாடுகள் அறிஞர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. அவற்றுள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மாறுபட்ட சுவையுணர்வும் ஒன்றாகும். இதற்கான காரணம் இன்னும் சரியாக விளங்கவில்லை; எனினும் சுவையுணர்வு பற்றி இதுவரை அறிந்தவற்றின் அடிப்படையில் சில யூகங்களை மேற்கொள்ளலாம். நாக்கில் சுவைமுகிழ்ப் பகுதிகள் (Taste buds) உள்ளன; இவற்றின் அடிப்பகுதியில் சுவை நரம்புகள் (Taste nerves) உண்டு; நமது உடலின் சாதாரண வெப்ப அளவு நிலையில் (Temperature) இந்நரம்புகள் மிகவும் உணர்திறன் (Sensitivity) கொண்டதாக இருக்கும். மாறாக இயல்பு வெப்ப நிலையிலிருந்து மிக அதிகமாகவோ அல்லது மிகவும் குறைந்தோ வெப்ப அளவு இருப்பின் அந்நிலையில் சுவை நரம்புகளின் உணர்திறன் குறைந்துவிடும். காய்ச்சல் அடிப்பவரின் உடல் வெப்ப நிலை இயல்பு நிலைக்கு மிகுதியாக இருப்பது, உணவின் சுவையுணர்வு மாறுபாட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

8அழுக்கான துணியை வெளுக்கும்போது கல் அல்லது தரை மீது அடித்துத் துவைப்பது ஏன்?

அழுக்குத் துகள்கள், எண்ணெய் அல்லது பிசுபிசுப்பான பொருள்களுடன் சேர்ந்து நமது ஆடைகளில் ஒட்டிக்கொள்வதால் துணிகள் அழுக்கடைகின்றன. தண்ணீரில் துணியை நனைப்பதனால் மட்டுமே இந்த அழுக்குகள் நீக்கப்பெறுவதில்லை. சோப்பு, சலவைத்தூள், சலவை சோடா போன்றவற்றைப் பயன்படுத்தியே அழுக்குகளை நீக்க இயலும். சோப்புக்கட்டி அல்லது சலவைத்தூளைப் பயன்படுத்துவதன் வாயிலாக தண்ணீருக்கும் பிசுபிசுப்புப் பொருட்களுக்கும் இடையேயுள்ள பரப்பு இழுவிசை (Surface tension) குறைக்கப்படுகிறது; இதன் விளைவாக பிசுபிசுப்புப் பொருளும் அதனுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குத் துகள்களும் துணியிழைகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இருப்பினும் துணியிழைகளுக்கு இடையே தங்கியிருக்கும் அழுக்குத் துகள்களை அவ்வளவு எளிதாக நீக்க முடிவதில்லை. கல் அல்லது தரை மீது அடித்துத் துவைக்கும்போதுதான் துணியில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்குத் துகள்கள் எளிதாக வெளியேற்றப்படுகின்றன.

8காரம், நெடி மிகுந்த உணவை உண்ட பின்னர், சூடான பால், தேனீர் ஆகியவற்றை அருந்தினால், சூடும், காரமும் மிகுதியாக உணரப்படுவது ஏன்?

உப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நான்கும் அடிப்படைச் சுவைகள். இவற்றிற்கான சுவை முகிழ்ப் பகுதிகள் (Taste buds) நாக்கின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இனிப்பிற்கான சுவை முகிழ்ப் பகுதி நாவின் நுனியிலும், பிறவற்றிற்கான சுவைமுகிழ்ப் பகுதிகள் நாவின் பின்புறப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. மிளகாய் போன்றவற்றின் சற்று கடுமையான காரச் சுவை நாவின் பின்பகுதியில் அமைந்துள்ள வலி உணர் நரம்புகளின் (Pain sensitive nerves) தூண்டுதலால் (Stimulation) உண்டாகிறது. மிளகாய் மற்றும் மசாலா கலந்த உணவை உண்ணும்போது காரச் சுவை மேலோங்கி இருக்கும்; இந்நிலையில் உடனே சூடான தேனீர், பால் போன்ற பானங்களை அருந்தினால் ஏற்கனவேயுள்ள சுவையுணர்வு மேலும் ஊக்குவிக்கப்பெற்று மிகுந்த காரத்தை உணர்கிறோம்.

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide