Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

அறிவியல் சாரல் (25)
- டாக்டர் இரா. விஜயராகவன்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 280

02  அக்டோபர் 2006


Wanted Freelancers!
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

<<<<<சென்றவாரம்

8உயிருள்ள உடல் தண்ணீரில் மூழ்குவதும், இறந்த உடல் நீரில் மிதப்பதும் ஏன்?

இறந்த உடலை நீரில் எறிந்த உடனே, முதலில் அதுவும் மூழ்கத்தான் செய்யும். இறந்த உடலில் வளர்சிதைமாற்றம் (Metabolism) நின்றுபோய் உடல் சிதையத் (Decomposition) துவங்குகிறது. இந்நிலையில் சில வாயுக்கள் (Gases) இறந்த உடலின் பள்ளமான குழிவுப் பகுதிகளில் சேர்கின்றன. இதன் விளைவாக உடல் எடை குறைந்து இலேசானதாகிறது. ஆனால் உடல் ஊதிப்போகும். இப்போது இறந்த உடலால் வெளியேற்றப்படும் தண்ணீரின் எடை அவ்வுடலின் எடையைவிட மிகுதியாக இருப்பதால், அது நீர்ப் பரப்புக்கு மேலே வந்து மிதக்கிறது. ஆனால் உயிரோடிருப்பவர் தண்ணீரில் இருக்கும்போது அவர் உடலின் எடையைவிட வெளியேற்றப்படும் தண்ணீரின் எடை குறைவாக இருப்பதால் உடல் நீரில் மூழ்குகிறது. எனவே மூழ்குவதைத் தவிர்ப்பதற்கு உயிரோடிருப்பவர் நீச்சலடித்து நீர்ப் பரப்புக்கு மேலே மிதக்கக் கற்றுக்கொள்ள வேண்டியதாகிறது.

8பல ஆண்டுகள் விண்வெளியில் மிதக்கும் விண்கலங்களுக்கு (Space crafts) வேண்டிய ஆற்றல் எவ்வாறு அளிக்கப்படுகிறது?

கோள்களுக்கு அனுப்பப்படும் விண்கலங்கள் மற்றும் துணைக்கோள்கள் (Satellites) ஆகியவற்றிற்குத் தேவையான ஆற்றல் பொதிகள் (Energy packages) அவைகளுடன் சேர்த்தே அனுப்பப்படுகின்றன. இப்பொதிகள் கதிரியக்க ஐசோடோப் வெப்ப மின் இயற்றிகள் (Radioisotope thermoelectric generators) வடிவத்தில் இருப்பவை. புளுடோனியம் (Plutonium), ஸ்ட்ரோண்டியம் (Strontium) போன்ற கதிரியக்கத் தனிமங்களைச் (Radioactive elements) சிதைத்து வெப்பம் உண்டாக்கப்படுகிறது; இவ்வெப்பத்தைப் பயன்படுத்தி ஈய-டில்லுரைட் கலப்புலோகம் (lead-telluride alloy), சிலிகான்-ஜெர்மானியம் கலப்புலோகம் (silicon-germanium alloy) போன்ற வெப்ப இரட்டை வரிசைகளில் (Thermo couple series) மின் ஆற்றல் பெறப்படுகிறது. ஸ்ட்ராண்டியம் _ 90 போன்ற கதிரியக்க ஐசோடோப்புகளின் ஆயுள் பத்தாண்டுக்கும் மேற்பட்டது; பல ஆண்டுகள் தொடர்ந்து மின்னியற்றியாகப் (Generators) பணி புரியக்கூடியது. எனவே தொடர்ந்து பல ஆண்டுகட்குத் தேவையான ஆற்றல் இதன் வாயிலாகப் பெறப்படுகிறது. ஆளில்லாத விண்கலமாக இருப்பின் இவற்றிற்கு மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவைப்படுவதில்லை. கதிரவனுக்கு அருகில் இருக்கும் செவ்வாய், புதன் போன்ற கோள்களுக்கு அனுப்பப்படும் விண்கலங்களாக இருப்பின் அவற்றிற்குத் தேவையான ஆற்றலை கதிரவ மின்கலங்கள் (Solar cells) வாயிலாக சூரியக் கதிர்களைப் பயன்படுத்திப் பெற்றுக்கொள்ள முடியும்.

8தலையில் முடி நீண்டு வளர்வது போன்று உடற்பகுதியில் ஏன் வளர்வதில்லை?

மனித இனம், பல இலட்சம் ஆண்டுகளாக, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, பல்வேறுபட்ட தனித்தன்மை வாய்ந்த பண்புக் கூறுகளை (distinct traits) உருவாக்கிக்கொண்டு வந்துள்ளது. இப்படிப்பட்ட பண்புகளுள் ஒன்றுதான் மண்டையில் நீண்ட முடி வளர்வதும், உடலின் பிற பகுதிகளில் குறைவான முடி வளர்வதுமாகும். மண்டையில் வளரும் முடி சூரிய ஒளியின் நேரடித் தாக்கத்திலிருந்து தலைப் பகுதியைக் காக்கிறது. பல இலட்சம் ஆண்டுகளாக மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியில் உருவான தலையில் நீண்ட முடி வளர்தல் எனும் இப்பண்புக்கூறு, மாறிவரும் சூழலுக்கிடையே மரபுவழிப்பட்டதாக இன்றும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மரபுவழியின் அடிப்படை அலகான மனித மரபணுக்கள் (Human genes) இன்று மனித உடலின் முடி வளர்ச்சியில் தமது கட்டுப்பாட்டைச் செலுத்தி வருகின்றன எனலாம்; இதன் விளைவே மண்டையில் நீண்ட முடி வளர்வதும், உடலின் பிற பகுதிகளில் நுண்ணியதாக முடி வளர்வதும் அல்லது முடியே இல்லமலிருப்பதுமாகும்.

8குளிர்ந்த நீரைவிட சூடான நீர் விரைவாக உறைந்து போவது ஏன்?

ஒரு பொருளின் குளிர்ச்சி வீதம் (Rate of Cooling) அப்பொருளின் வெப்பநிலைக்கும் அதன் சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் அமையும் __ இது நியூட்டனின் குளிர்ச்சி விதியாகும் (Newton’s Law of Cooling). இவ்விதியின்படி சூடான பொருள் குளிர்ந்த பொருளைவிட விரைவாக உறைநிலையை (Freezing point) அடைந்து உறைந்துபோகும். மேலும் சூடான நீர் உயர்ந்த வெப்பநிலையில் இருப்பதால், ஆவியாதல் நிகழ்ச்சியின் (Evaporation) வாயிலாக குளிர்ந்த நீரைவிட விரைவாகத் தனது நிறையை (Mass) இழக்கும் வாய்ப்பை அடைகிறது. இதன் காரணமாகச் சூடான நீர் உறைநிலையை அடையும் நேரத்தில் குளிர்ந்த நீரைவிட நிறை குறைந்து இருக்கும். எனவே நிறை குறைந்த சூடான நீரை உறைய வைப்பதற்கு குறைவான வெப்பத்தையே வெளியேற்ற வேண்டும்; மாறாக நிறை மிகுந்த குளிர்ந்த நீரை உறைய வைக்க மிகுதியான வெப்பத்தை வெளியேற்றவேண்டும். இதன் காரணமாகச் சூடான நீர், குளிர்ந்த நீரைவிட விரைவில் உறைந்து போகிறது.

***

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide