Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

ஜோதிடம் கேளுங்கள்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

   


comedy dvds
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

<<<சென்ற வாரம்

குருஜி கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல் வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர இசைந்துள்ளார்.

பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த் அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப் பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம், ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட நம்பிக்கைகளை ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம். இவரது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி மையம் மூலம் ஒவ்வொரு வருடமும் 5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம் பெறுகிறார்கள். கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.

கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின் இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம் கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள் 'ஜோதிடம் கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.


இந்த வாரக் கேள்விகள்:
I get married on June month year2001. We have no child.When will child birth to us? - Glory Mercy

இறைவனுள் அன்புடைய செள. குளோரி மெர்சி,
எமது நல்லாசிகள்.

தங்களின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தோம். 

பூராடம் நட்சத்திரம் தனுர் ராஸி துலாம் லக்னம் என்ற அமைப்பைக் கொண்;ட தங்களுக்கு தற்பொழுது 4 ஆவது தசையாக செவ்வாய் தசை நடக்கிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி வக்ர கதியாகவும் பஞ்சம ஸ்தானத்தில் குரு சம பலம் பெற்றும் இருப்பதால் தங்களுக்கு கடுமையாக புத்திர தோஷம் உள்ளது. சுக ஸ்தானத்தில் புதனும் சுக்கிரனும் இணைவு பெற்றுள்ளதால் தங்களுக்கு 32 வயது முடிந்து 4 மாதம் ஆகி 4 நாட்களும் முடிந்த உடன் நல்ல மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் எந்தக் குறையும் இல்லாத ஆண் குழந்தை பிறக்கும். தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு மூன்று குழந்தைகள் உண்டு எனினும் அதில் இரண்டு மட்டும் நிலைத்து நிற்கும். தற்பொழுது தங்களுக்கு அஷ்ட்டம சனி நடந்து வருவதால் குடும்பத்திற்குள் சிற்சில பிரச்சனைகள் தோன்றி மறையும். இவை அனைத்தையும் தெய்வ வழிபாட்டால் சரி செய்து கொள்ள முடியும். தங்களின் சம்பிரதாயப்படி செவ்வாய் மற்றும் சனிக்கிழமை தோறும் மாலைப் பொழுதில் தெய்வ வழிபாட்டினை தொடர்ந்து செய்து வாருங்கள். தங்களின் குடும்ப வழிபாட்டு முறைகள் தளர்த்தப்படும் நிலையில் சனிக்கிழமை தோறும் சனி பகவானையும் புத்திர பாக்கியம் வேண்டி வியாழக் கிழமை தோறும் குரு பகவானையும் வேண்டி அர்ச்சனை செய்து வாருங்கள். புத்திர பாக்கியத்தோடு தாங்கள் சிறப்பான வாழ்க்கை பெறுவீர்கள்.

***

என் குடும்பம் இப்போது பணக்கஷ்டத்தில் உள்ளது. எப்போது நிலை மாறும். அதிர்ஷ்ட எண் எதாவது உண்டா -ஜெயஸ்ரீ

இறைவனுள் அன்புடைய செள. ஜெயஸ்ரீ,
எமது நல்லாசிகள்.

உத்திராடம் நட்சத்திரம் மகர ராஸி மிதுன லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்களுக்கு தற்பொழுது செவ்வாய் தசை நடந்து வருகிறது. இந்த செவ்வாய் தசை இன்னும் 1 வருடம் 10 மாதம் 12 நாட்கள் வரை நடக்கும். லக்னத்தில் செவ்வாய் கல்வி ஸ்தானத்தில் சந்திரன் என்ற அமைப்பு தங்களுடைய கல்வியைக் குறைக்கும். மாத்ரு பாவகாதிபதி 12இல் மறைவதாலும் 9 க்கு உடைய சனி சப்தம கேந்திரத்தில் உள்ளதாலும் தங்களுடைய பெற்றோர் நிலை வருமானக் குறைவுடன் சற்று மந்தமான கால நிலையையே கொண்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்டுள்ள செவ்வாய் தசை காலம் வரை இந்த நிலை தொடரும். அதன் பின்னர் தங்களின் குடியிருப்பு மாறும் சூழ்நிலை ஒன்று உருவாகும். அந்த சூழ்நிலை நல்ல திருப்பத்தை உண்டாக்கும். பொருளாதார சூழ்நிலை சீராகிவிடும். தங்களுடைய ஜாதகத்தில் பித்ரு சாபம் மூன்று தலைமுறையாய் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்து வேத சாஸ்திரப்படி இது பரிகாரத்திற்கு உட்பட்டதாகும். இருப்பினும் முறையான தெய்வ வழிபாட்டினால் சிரமமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்று விட முடியும். தங்களுடைய அதிர்ஷ்ட எண் 1 மற்றும் உப அதிர்ஷ்ட எண் 5. இந்த எண்களை அதிர்ஷ்ட எண்களாகக் கொண்ட நபர்களை நண்பர்களாகக் கொள்வது நல்லது. 1,5 ஆகிய தேதிகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி காண்பீர்கள். தாங்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

***

எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? என் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவர்? - வளர்மதி

இறைவனுள் அன்புடைய செள. வளர்மதி்,
எமது நல்லாசிகள்.

ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராஸி விருச்சிக லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்களின் ஜாதகத்தில் சந்திரனும் சனியும் உச்சத்தில் உள்ளார்கள். 2 இல் புதன் வக்ரமாக உள்ளார். தற்பொழுது தங்களுக்கு ராகு தசை நடந்து வருகிறது. கோட்சார ரீதியாக சுப கிரஹமாகிய குரு 6 இல் மறைந்துள்ளார். தைரிய ஸ்தானத்தில் சனியும் பகையாக உள்ளார். 

தற்பொழுதுள்ள கிரஹ நிலைகளின்படி தங்களின் ஜாதகத்தில் சற்று மந்தமான பலன்களே நடந்து வருகிறது. கல்வியால் குறைந்த பலத்தைக் கொண்ட தங்களின் ஜாதகத்தில் வக்ர புதன் கல்வித் தடையை ஏற்படுத்தி விடுவார். 4 இல் சுக்கிரன், செவ்வாய் ஆகிய இரண்டு கிரஹங்கள் இணைந்து உள்ளது. தங்களின் மண வாழ்க்கை தாங்கள் விரும்பியவருடனேயே இருக்கும். தற்பொழுது நடந்து வரும் ராகு தசையின் மத்தியப் பகுதியிலேயே அதாவது இன்னும் 9 மாதம் 12 நாள் சென்ற உடனேயே தங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணும். பொருளாதார சூழ்நிலை சிறப்பாக இருக்கும். மண வாழ்க்கை ராகு தசை காலத்திற்குள்ளேயே மிகச் சிறப்பாக அமைந்துவிடும். தெற்கு திசை மற்றும் கிழக்கு திசையில் இருந்தும் நல்ல படிப்பைக் கொண்டவராகவும் நற்குணங்களை உடையவராகவும் உத்யோக அமைப்பை உடையவராகவும் உள்ள மணமகன் அமைவார். தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதால் இது போன்ற அமைப்பை உள்ள வரனையே தேர்ந்தெடுப்பது நல்லது. வரும் 20.10.2006 க்குப் பின் ஒரு வருட காலத்திற்குள் மணவாழ்க்கை சிறப்பாக அமையும். தங்களை நன்கு புரிந்து கொண்டவராகவும் அவர் இருப்பார். எதிர்காலத்தில் தாங்கள் சிறப்புற வாழ எமது நல்லாசிகள்.

***

Vanakam sir.i'm a student and studying BBA I want know how is my future and my life partner. Now i'm admire with someone and he is an army man. He born on 01/03/1981.I want ur advice for this.he is suitable or not.thank you sir.i'm wait for ur answer. - Kalaivani

இறைவனுள; அன்புடைய செள. கலைவாணி,
எமது நல்லாசிகள்.

பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராஸி கன்யா லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்கள் ஜாதகத்தில் 2 இல் சனி வக்ரமாகவும் இதே சனி உச்சமாகவும் உள்ளார். குரு தசையில் பிறந்த தங்களுக்கு தற்பொழுது சனி தசை நடந்து வருகிறது. 4 இல் குரு சுக பலத்துடன் அமைந்துள்ளார். 2க்கு உரிய சுக்கிரன் சந்திரனுடன் இணைவு பெற்று நட்பாக சஞ்சாரம் செய்கிறார். தங்களின் கல்வி சிறப்பாக இருக்கும். அதன் பயனாய் தனியார் நிறுவனம் ஒன்றில் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை கிடைக்கும். களத்திர ஸ்தானத்தில் சூரியன் நட்புடன் அமைந்திருப்பதால் தாங்கள் விரும்பிய நபரையே திருமணம் செய்து கொள்வீர்கள். தாங்கள் குறிப்பிட்டுள்ள நபரின் ஜாதகமும் தங்களுக்கு பொருத்தமாக உள்ளது. இருப்பினும் தங்களின் விருப்பத்தை பெரியவர்களிடம் தெரிவித்து அவர்களின் அனுமதியுடன் திருமண முயற்சி செய்யுங்கள். வெற்றிகரமாக அமையும். திருமணத்தை ஊக்குவிக்கும் குருபலன் தற்பொழுது இல்லை. வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் தேதிக்குப் பின்னர் திருமண வாய்ப்பு அதிகமாக உள்ளது. கிரஹ நிலைகளை அனுசரித்து எதிர்காலத்தை அமைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். சிறப்பான வாழ்க்கை பெற எமது நல்லாசிகள்.

***

When will be my marriage in my life. My mum and dad are looking for a girl now. Can i go for marriage now? Is my marriage nearing? Please clarify me - Venkat Raghavan

இறைவனுள் அன்புடைய சிரஞ். வெங்கட்ராகவன்,
எமது நல்லாசிகள்.  

புனர்பூசம் நட்சத்திரம் மிதுன ராஸி மிதுன லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்களுடைய ஜாதகத்தில் செவ்வாயும் சனியும் உச்சம் பெற்றுள்ளார்கள். குரு தசையில் காப்ப செல் போக இருப்பு 12 வருடம் 4 மாதம் 4 நாள். தற்பொழுது தங்களுக்கு சனி தசை நடந்து வருகிறது. கோட்சார ரீதியாக ஏழரை சனியும் நடந்து வருகிறது. 5 இல் குரு, திருமண வாழ்க்கையை ஊக்கம் செய்யும் வகையில் குரு பலனுடன் உள்ளார். லக்னத்தில் ராகுவும் 7 இல் கேதுவும் இருப்பது களத்திர தோஷம் ஆகும். மேலும், தங்கள் ஜாதகத்தில் புத்தர தோஷமும் உள்ளது. 8 இல் செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதாலும் நவாம்சத்தில் சுக்கிரனில் இருந்து 12 இல் செவ்வாய் இருப்பதாலும் செவ்வாய் தோஷம் பரிகாரம் பெறாமல் தோஷத்துடனேயே நின்றுவிட்டது. எனவே, திருமணத்திற்கான வது செவ்வாய் தோஷத்துடன் கூடியவராகவே இருத்தல் அவசியம். கிழக்கு திசையில் இருந்து பெண் அமையும். அவர் படித்தவராக இருப்பார். தங்களுடைய ஜாதகத்தை நன்கு ஆராய்ந்ததில் இருதாரமுள்ள ஜாதகமாக இருப்பதால் மிக கவனமாக மணப்பெண்ணை தேர்ந்தெடுத்தல் மிகவும் அவசியம். பொருத்தம் இல்லாத ஜாதகரை மணமுடித்தல் என்பது எதிர்காலத்தில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் திருமணத்திற்கு அவசரப்படாமல் நல்ல ஜாதகத்தை தேர்ந்தெடுத்து திருமண வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். வரும் ஆவணி மாதம் 18 ஆம் தேதிக்கு மேல் திருமண முயற்சியை மேற்கொள்ளுதல் நல்லது. தங்களின் மகிழ்வான மணவாழ்விற்கு இறைவனை பிரார்த்திக்கிறோம். எமது நல்லாசிகள்.

           
New Page 1

 மேலும் பல..... 


ஜோதிடம் குறித்த உங்கள் கேள்விகள்

பெயர் *

பிறந்த தேதி மற்றும் நேரம் *

பிறந்த ஊர் *

மின்னஞ்சல் முகவரி (Email-Id) *

Note: Email-Id will not be published
 

'ராசி' can be typed as 'raasi' in english

உங்கள் கேள்விகளை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your questions in English)


(உதாரணம்: 'ராசி்' என்பதை
'raasi' என தட்டச்சு செய்யவும்)