|
<<<சென்ற
வாரம்
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில்
தர இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா
சித்தார்த் அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு
ஜோதிடக் கலையைப் பயிற்றுவித்திருக்கிறார்.
வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம், ரசவாதம் போன்றவற்றில்
வல்லுநரான இவருக்கு மூட நம்பிக்கைகளை ஒழித்து
இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம். இவரது கார்த்திகா
ஜோதிடப் பயிற்சி மையம் மூலம் ஒவ்வொரு வருடமும்
5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம் பெறுகிறார்கள்.
கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற அமைப்பையும்
இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன்
மூலம் கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம் கேளுங்கள்'
பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை இடம்
பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்விகள்:
Just
few words about my future? In general how
will be my career? How will be my future
life? Will I study more?
-
Sathya
இறைவனுள்
அன்புடைய செள. சத்யா,
எமது நல்லாசிகள்.
காளயுக்தி வருடம் மார்கழி மாதம் 29 ஆம் தேதி 14.1.1979 ஞாயிற்றுக் கிழமை பிறந்த தங்களின் நட்சத்திரம் பூசம். கடக ராஸி. விருச்சிக லக்னம். ஜனன காலத்தில் சனி தசை இருப்பு 14 வருடம் 11 மாதம் 28 நாட்கள். தற்பொழுது தங்களுக்கு புதன் தசை நடந்து வருகிறது. இந்த புதன் தசை இன்னும் 4 வருடம் 7 மாதம் 21 நாட்கள் வரை இருக்கும்.
லக்னாதிபதி உச்சம் பெற்று இருப்பதாலும் 2 ஆம் இடத்து அதிபதியாகிய குருவும் 9 இல் உச்சம் பெற்று ஆனால் வக்ர கதியில் இருப்பதாலும், தங்களுடைய எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். தற்பொழுது தங்களுக்கு ஏழரை சனி நடந்து வருகிறது. இன்னும் நான்கு ஆண்டுகள் சென்ற பின்னர் ஏழரை சனி முழுமையாக விலகிவிடும். கோட்சார ரீதியாக 5 இல் குரு வரும் காலம் அதாவது வரும் அக்டோபர் 20 ஆம் தேதிக்கு மேல் மிகச் சிறப்பான நல்ல பலன்களைச் சந்திப்பீர்கள். குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே அமையும். தற்பொழுது அதிகமாக செலவும் அலைச்சலும், வீண் அபவாதங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. கல்வியால் முழுமையான பலனைப் பெறாத தங்களுக்கு இவ்வாண்டு கல்வி தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே, ஏற்கனவே விட்டுப்போன கல்வியை மீண்டும் இவ்வாண்டு தொடர்வீர்கள்.
ஏழரை சனி நடந்து கொண்டு இருப்பதால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வாருங்கள். தெய்வ வழிபாடு மூலம் இவ்வாண்டு அரிய சாதனையை செய்து வெற்றி பெறுவீர்கள்.
எமது நல்லாசிகள்.
***
Till
this time I have no business, what type
of businesses will be the best for me?
-
Velayoudam
இறைவனுள்;
அன்புடைய சிரஞ். வேலாயுதம்,
எமது நல்லாசிகள்.
ஜய வருடம் புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 10.10.1954 காலை 9-25 மணிக்குப் பிறந்த தங்களின் நட்சத்திரம் பூரட்;டாதி 2 ஆம் பாதம். கும்ப ராஸி விருச்சிக லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்களின் ஜாதகத்தில் குருவும் சனியும் உச்சமாகி உள்ளார்கள். ஜனன காலத்தில் குரு தசை இருப்பு 10 வருடம் 6 மாதம் 8 நாட்கள் இருந்த தங்களுக்கு தற்பொழுது கேது தசை நடந்து வருகிறது. கேது தசை இன்னும் 1 வருடம் 10 மாதம் 17 நாட்கள் வரை இருக்கும். 10 க்கு உரிய சூரியன் 11 இல் லாப ஸ்தானத்தில் இருப்பதால் தங்களுக்கு உத்யோக மேன்மைதான் சிறப்பாக இருக்கும். சுய தொழிலில் மிகுந்த லாபத்தை இக்காலத்தில் பெற இயலாது. நிலம் சம்பந்தப்பட்ட விவசாயம், நிலத்தை வாங்கி விற்றல், கமிஷன் அடிப்படையில் உள்ள டீலர்ஷிப், ஏஜென்சீஸ், ஸ்டாக்கிஸ்ட், கொடுக்கல் வாங்கல், ஏலம் எடுத்து விற்பனை செய்தல், ஒப்பந்த அடிப்படையில் மென்பொருட்களை கையாளுதல் போன்ற தொழில்களில் தாங்கள் ஈடுபட்டால் லாபகரமாக இருக்கும். இந்த முயற்சியை கேது தசை முடிந்தவுடன் வரும் சுக்கிர தசையில் கூட்டாளிகள் இல்லாமல் சுயமாக செய்தீர்கள் என்றால் தொழில் மிகச் சிறப்பாக இருக்கும். தற்பொழுது கேது தசை நடந்து வருவதால் தூ;க்கை அம்மன் வழிபாடு, சர்ப்ப கிரஹத்திற்கு ப்ரீதி போன்ற பரிகாரத்தை செய்தால் தெய்வ ஆசீர்வாதம் கிடைக்கும். |