|
<<<சென்ற
வாரம்
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர
இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த்
அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப்
பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம்,
ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட
நம்பிக்கைகளை ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம்.
இவரது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி மையம் மூலம்
ஒவ்வொரு வருடமும் 5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம்
பெறுகிறார்கள். கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற
அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம்
கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை
இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்வி:
என்னுடய
எதிர்கால வாழ்கை எப்படி இருக்கும்? என்னுடய
கல்யாண வாழ்கை எப்படி இருக்கும்?
P. KALPANA
இறைவனுள் அன்புடைய செள. பி. கல்பனா,
எமது நல்லாசிகள்.
தங்களுடைய
நட்சத்திரம் மிருகசீஷம் 2 ஆம் பாதம். ரிஷப
ராஸி. துலாம் லக்னம். தங்களுக்குத் தற்பொழுது
ராகு தசை நடந்து வருகிறது. இந்த ராகு தசை
இன்னும் 1 வருடம் 5 மாதம் 12 நாட்கள் வரை
இருக்கும். லக்னாதிபதி 2இல் சூரியன், புதன்,
சனி என்ற கிரஹங்களுடன் கிரஹ யுத்தம் செய்கிறார்.
எனவே, சுக்கிரனுக்கு உறவான ராகு தசை முடிய
தங்கள் ஜாதகப்படி தசா புக்திகள் சிறப்பாகக்
கை கொடுக்கின்றன. கற்ற கல்வி நன்றாகப் பயன்
தரும். ஆனாலும், தங்களின் பிறந்த இடத்தை விட்டுத்
தள்ளி இருந்து சிறப்படையும் வகையில் தங்கள்
ஜாதகம் அமைந்துள்ளது. தங்களுடைய எதிர்கால
வாழ்க்கை மிகச் சிறப்பாகவே இருக்கும். கோட்சார
ரீதியாக தற்பொழுது 6இல் குரு மறைந்து உள்ளார்.
வரும் அக்டோபர் மாதத்தில் ஏற்படும் குரு பெயர்ச்சிக்குப்
பின்னர் தங்களுடைய எதிர் காலம் மேலும் சிறப்படையும்.
தங்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது. திருமண
வாழ்க்கைத் துணையை இதற்குத் தக்கவாறு தோந்தெடுத்துக்
கொள்ளுதல் நல்லது. மண வாழ்க்கை தாங்கள் விரும்பியவாறு
இருக்கும்.
எமது நல்லாசிகள்.
எனக்கு திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். நான் வேலைக்கு செல்கிறேன். என் கணவருக்கு ஆரோக்யம் அடிக்கடி தொல்லை கொடுக்கிறது. என் எதிர்காலம் எப்படி உள்ளது?
- APARNA
இறைவனுள் அன்புடைய செள. அபர்ணா
எமது நல்லாசிகள்.
புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராஸி, மேஷ லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்களுக்குத் தற்பொழுது சனி தசை நடக்கிறது. இந்த சனி தசை இன்னும் 4 வருடம் 10 மாதம் வரை நடக்கும். கோட்சார ரீதியாக தற்பொழுது தங்களுக்கு ஏழரை சனி நடந்து வருகிறது. இந்த ஏழரை சனி இன்னும் ஒன்றரை வருடம் தொடர்ந்து இருக்கும். தங்களுடைய ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளது. களத்திர பாவகாதிபதி பகை பலம் பெற்று இருப்பதால் தங்கள் கணவருக்கு இன்னும் 6 மாத காலம் உடல் ஆரோக்யம் கெடும். நல்ல வைத்தியமும் தெய்வ வழிபாடும் அதிகமாகத் தேவைப்படுகின்றன. எனவே, வெள்ளிக் கிழமை தோறும் தூர்க்கை அம்மன் வழிபாடும் சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு அர்ச்சனையும் ஒன்றரை வருட காலம் தொடர்ந்து செய்து வர எல்லாம் சுபமாகும். தங்களுடைய எதிர்காலம் மேற்கூறப்பட்ட காலத்திற்கு மேல் நன்றாகவே இருக்கும். கவலைப்பட வேண்டாம்.
எமது நல்லாசிகள். |