|
<<<சென்ற
வாரம்
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில்
தர இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா
சித்தார்த் அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு
ஜோதிடக் கலையைப் பயிற்றுவித்திருக்கிறார்.
வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம், ரசவாதம் போன்றவற்றில்
வல்லுநரான இவருக்கு மூட நம்பிக்கைகளை ஒழித்து
இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம். இவரது கார்த்திகா
ஜோதிடப் பயிற்சி மையம் மூலம் ஒவ்வொரு வருடமும்
5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம் பெறுகிறார்கள்.
கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற அமைப்பையும்
இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன்
மூலம் கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம் கேளுங்கள்'
பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை இடம்
பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்வி:
திருமண வாழ்க்கைபற்றி சொல்லவும்
K. MOHANA RANGAN
இறைவனுள் அன்புடைய
K. MOHANA RANGAN
எமது நல்லாசிகள்.
தங்களுடைய நட்சத்திரம் பூரம் 3, சிம்ம ராஸி, கடக லக்னம். தற்பொழுது தங்களுக்கு ராகு தசை நடந்து வருகிறது. ராகு தசை தொடங்கி 3 வருடங்கள் ஆகின்றன. தற்பொழுது தங்களுக்கு ஏழரை சனி தொடங்கி உள்ளது. குரு கோட்சாரத்தில் 3இல் உள்ளார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் காலம் இது இல்லை. இன்னும் ஏழு மாதங்கள் கழித்த பின்னர் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். அமாவாசைக்கு அடுத்த நாள் ஜனனமான தங்களுக்கு உடன் பிறப்புகளும் தாய் தந்தையரும் தங்களின் குடும்ப வாழ்க்கைக்கு உதவிகரமாக இருப்பது சற்றுக் கடினமே. சுயமாக முடிவெடுத்து வெற்றி பெறும் ஜாதகம் தங்களுடையது. இதற்கேற்ப நடந்து கொள்ளுதல் என்றும் சிறப்புடையதாகும். சனி பகவானுக்கு சனிக்கிழமை தோறும் தொடர்ந்து அர்ச்சனை செய்து வாருங்கள். கிரஹ அனுகூலம் கிடைக்கும்.
எமது நல்லாசிகள்.
எனது திருமனம் எப்பொழுது? மேலும் எனது மன வாழ்க்கை எப்படி இருக்கும்?
JEYANTHI PERIYASAMY
இறைவனுள் அன்புடைய
JEYANTHI PERIYASAMY
எமது நல்லாசிகள்.
மிருகசீ¡ஷம் நட்சத்திரம்,
¡ஷப ராசி, மிதுன லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்களுடைய ஜாதகப்படி தற்பொழுது ராகு தசை நடந்து வருகிறது. இந்த ராகு தசை இன்னும் 1 வருடம் 4 மாதம் நடக்கும். லக்னத்தில் ராகு நிற்பதும் களத்திராதிபதி 6இல் மறைவதும் தற்பொழுது நடக்கும் ராகு தசைக்கு உகந்தது அல்ல. மேலும், கோட்சார ரீதியாக குரு 6இல் இருப்பதும் திருமண காலத்திற்கு உ¡¢யது இல்லை. எனவே, வரும் ஐப்பசி மாதம் முடிய திருமணத்திற்கு முயற்சி செய்வது சிறப்புடையது அல்ல. 2006ஆம் ஆண்டு முடிந்த பின்னர் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். வடகிழக்கு திசையில் இருந்து வரன் அமையும். படித்த உத்யோகத்தில் உள்ள கணவன் அமைவார். தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளது. அதற்கு ஏற்றவாறு திருமணப் பொருத்தம் பார்த்துக் கொள்வது நல்லது. தங்களுடைய திருமண வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். கவலை வேண்டாம்.
எமது நல்லாசிகள்.
|