|
<<<சென்ற
வாரம்
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர
இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள் இதுவரை 22000
மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப் பயிற்றுவித்திருக்கிறார்.
வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம், ரசவாதம் போன்றவற்றில்
வல்லுநரான இவருக்கு மூட நம்பிக்கைகளை ஒழித்து
இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம். இவரது கார்த்திகா
ஜோதிடப் பயிற்சி மையம் மூலம் ஒவ்வொரு வருடமும்
5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம் பெறுகிறார்கள்.
கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற அமைப்பையும்
இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன்
மூலம் கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம் கேளுங்கள்'
பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை இடம்
பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்வி:
என்
திருமணம் எப்பொழுது? நான் விரும்பும் ஒருவரை திருமணம்
செய்ய முடியுமா?
- ஸ்ரீதேவி
இறைவனுள் அன்புடைய செள.
ஸ்ரீதேவி,
எமது நல்லாசிகள்.
தங்களின்
ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தோம். ஆயில்யம்
நட்சத்திரம் கடக ராஸி மீன லக்னம். தற்பொழுது
தங்களுக்கு சந்திரன் தசை தொடங்கி 2 மாதங்கள் ஆகின்றன.
7 ஆம் இடத்து அதிபதி நீச்சம் பெற்றுவிட்டார். தங்கள்
ஜாதகப்படி ஏற்கனவே தங்களுக்கு 2 முறை குரு பலன்
வந்துபோய் இருக்கிறது. திருமண யோகம் குறைவாக உள்ளது
உங்கள் ஜாதகத்தில். தெய்வ பரிகாரங்கள் பலவற்றை செய்த
பின்னரே தங்களின் விருப்பத்திற்கிணங்க திருமணம்
நடைபெறும். மூன்றாவது முறையாக வரும் ஐப்பசி மாதம் 3
ஆம் தேதிக்கு மேல் குருபலன் வருகிறது. சுயம்வரா
பார்வதி ஹோமம் ஒன்றிற்கு சிறந்த வைதீகர்களைக் கொண்டு
ஏற்பாடு செய்து பரிபா¢காரம் செய்து கொள்ளுங்கள்.
மேற்கண்ட தேதிக்குப் பின்னர் தாங்கள் விரும்பும்
ஒருவரை திருமணம் செய்து கொள்வீர்கள்.
எமது நல்லாசிகள்.
Dear sir, how will be my future sir?
- கிருஷ்ணமூர்த்தி
இறைவனுள் அன்புடைய சிரஞ். கிருஷ்ணமூர்த்தி,
எமது நல்லாசிகள்.
தங்களின் நட்சத்திரம் திருவோணம். மகர ராஸி விருச்சிக
லக்னம். தங்களின் ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உள்ளது.
தங்களுடைய 31 வயது 4 மாதம் 7 நாள் வரை ராகு தசை
நடக்கும். இப்பொழுதும் ராகு தசை தான் நடந்து வருகிறது.
கோட்சார ரீதியாக 10 இல் குரு அவ்வளவு சிறப்பானதாகவும்
இல்லை. கற்ற கல்வி முழுமையாகப் பயன்படும். கவலைப்பட
வேண்டாம். வரும் தை மாதம் 12ஆம் தேதிக்குப் பின்னர்
தொழில் முன்னேற்றமும், பண வரவும் பழைய சிக்கல்களில்
இருந்து தீர்வும் கிடைத்து விடும். நடந்த சில கவலை
தரும் விஷயங்களை மறந்து விடுங்கள். வெள்ளிக்கிழமை
தோறும் ராகு வழிபாடும் சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர்
வழிபாடும் செய்துவர புதிய மனிதர் ஒருவரின் உதவியால்
நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்வீர்கள். வாழ்க்கை
வாழ்வதற்கே. தங்கள் வாழ்வில் சிறப்படையும் காலமும்
விரைவில் வரும். கவலை வேண்டாம்.
எமது நல்லாசிகள்.
******* |