Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

ஜோதிடம் கேளுங்கள்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

   


Yoga DVD
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

<<<சென்ற பகுதி்

குருஜி கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல் வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர இசைந்துள்ளார்.

பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த் அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப் பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம், ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட நம்பிக்கைகளை ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம். இவரது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி மையம் மூலம் ஒவ்வொரு வருடமும் 5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம் பெறுகிறார்கள். கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.

கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின் இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம் கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள் 'ஜோதிடம் கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.


இந்த வாரக் கேள்வி:


எங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? எனது காதலர் பிறந்தது 27.4.1977 மதியம் 1.25. கடக ராசி, ஆயில்யம் நட்சத்ரம். என்னுடைய ராசி மீனம் ரேவதி நட்சத்ரம்.
- சித்ரா

இறைவனுள் அன்புடைய செள. சித்ரா,

எமது நல்லாசிகள்.

நள வருடம் ஆனி மாதம் 7 ஆம் தேதி (21.6.1976) திங்கட்கிழமை பகல் 12-47 மணிக்குப் பிறந்த தங்களின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தோம். ரேவதி நட்சத்திரம் மீன ராஸி துலாம் லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்களுக்கு தற்பொழுது சுக்கிரன் தசை நடந்து வருகிறது. தங்களின் அன்புக்குரியவரின் ஜாதகத்தையும் கணித்துப் பார்த்தோம். கடக ராஸி ஆயில்யம் நட்சத்திரம் என்ற அமைப்பைக் கொண்ட அவரின் ஜாதகத்தையும் உங்கள் ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். இந்து ஜோதிட சாஸ்திரப்படி பெண் இளையவளாகவும் மாப்பிள்ளை மூத்தவராகவும் இருத்தல் நல்லது. தங்கள் இருவரின் ஜாதகமும் பொருத்தமாகவே அமைந்துள்ளது. தினம், கணம், மகேந்திரம், ஸ்திரி தீர்க்கம், யோனி, ராஸி, ராஸியாதிபதி, வஸியம், ரஜ்ஜூ, வேதை, நாடி, ஆகிய பொருத்தங்களில் பெரும்பான்மையான பொருத்தங்கள் நன்றாகவே உள்ளன. தங்கள் இருவரின் நட்சத்திரமும் பாத ரஜ்ஜூவாக உள்ளது. தங்களின் 33 வயது வரை திருமண வாழ்வில் சிரமங்கள் எதுவும் வராது. சூரியன் தசையின் மத்தியப் பகுதியில் குடும்ப சச்சரவுகள் சில தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு. அந்தக் காலத்தில் தெய்வ வழிபாடு பெரியோர் ஆதரவு ஆகியவற்றை நாடி சமன் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படலாம். எச்சரிக்கையான முறையிலும் பாதுகாப்பாகவும் கடுஞ்சொற்களைத் தவிர்த்து கவனமாக இருந்தால் தங்களின் மண வாழ்க்கை சிறப்பாகவே அமையும். எமது வாழ்த்துக்கள்.

***

புதிய தொழில் தொடங்குவது நல்லதா? மனைவி மகள் பெயரில் தொழில் தொடங்கலாமா? மகள் நட்சத்ரம் அனுஷம். பிறந்தது 10.7.2003 காலை 7.27. மனைவி நட்சத்ரம் கார்த்திகை 26.12.1974 காலை 10.10.
- ரவி

இறைவனுள் அன்புடைய சிரஞ். ரவி,

எமது நல்லாசிகள்.

கீலக வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி (4.12.1968) புதன்கிழமை காலை 9-30 மணிக்குப் பிறந்த தங்களின் ஜாதகத்தை கணித்துப் பார்த்தோம். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராஸி, கடக லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்களுக்கு தற்பொழுது குரு தசை நடந்து வருகிறது. கோட்சாரத்தில் ஏழரை சனி நீங்கிய நிலையில் குரு 7 இல் சஞ்சாரம் செய்கிறார். இரண்டாம் இடத்து அதிபதியாகிய சூரியன் 10 ஆம் இடத்து அதிபதியாகிய செவ்வாய்க்கு உறவாக இருப்பதாலும் சூரியன் நட்பு பலத்தில் சஞ்சாரம் செய்வதாலும் தாங்கள் எழுத்துத் துறையில் சிறப்படைவீர்கள். கலை, மென்பொருள் வாணிபம் ஆகிய துறைகளும் தங்களுக்கு சிறப்பாக இருக்கும். புத்தகம் தொடர்பான துறையில் வரும் மார்ச் 2007 க்குப் பின் பெரும் முயற்சி எடுத்து நண்பர்களின் ஆதரவுடன் தொடங்கினால் சிறப்பாக இருக்கும். இதை தாங்கள் தொழிலாகக் கொள்ள நினைத்தால் அதை உபதொழிலாக மட்டுமே கொள்ளுதல் வேண்டும். ஜாதக ரீதியாக புத்தகம், எழுத்து போன்ற துறையை தாங்கள் ஜீவனத்திற்காக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் பொழுதுபோக்காகவும் பொதுச் சேவையாகவும் கருதி சிறு லாபத்தை மட்டுமே எதிர்நோக்கிச் செய்தால் இத்துறை தங்களுக்குச் சிறப்பாகவே அமையும்.

*****

           
New Page 1

 மேலும் பல..... 


ஜோதிடம் குறித்த உங்கள் கேள்விகள்

பெயர் *

பிறந்த தேதி மற்றும் நேரம் *

பிறந்த ஊர் *

மின்னஞ்சல் முகவரி (Email-Id) *

Note: Email-Id will not be published
 

'ராசி' can be typed as 'raasi' in english

உங்கள் கேள்விகளை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your questions in English)


(உதாரணம்: 'ராசி்' என்பதை
'raasi' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your questions in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide