|
<<<சென்ற
வாரம்
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர
இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த்
அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப்
பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம்,
ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட
நம்பிக்கைகளை ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம்.
இவரது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி மையம் மூலம்
ஒவ்வொரு வருடமும் 5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம்
பெறுகிறார்கள். கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற
அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம்
கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை
இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்வி:
கேள்வி :
நான் என் மனைவி மக்களைப் பிரிந்து இருக்கிறேன்.
எங்கள் எதிர்காலம் எப்படி இருக்கும்?
- குமரன், காரைக்கால்
இறைவனுள் அன்புடைய குமரன்,
காரைக்கால்
எமது நல்லாசிகள்.
பிரமாதீச
வருடம் வைகாசி மாதம் 13 ஆம் தேதி ஜோதிட சனிக்கிழமை
இரவு 12-54 மணி விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று
பிறந்த தங்களின் ஜாதகத்தை ஆராய்ந்தோம். கும்ப லக்னம்,
கும்ப ராஸி, பூரட்டாதி நட்சத்திரம் என்ற அமைப்பைக்
கொண்ட தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு தற்பொழுது புதன்
தசை நடந்து வருகிறது. காலசர்ப்ப தோஷத்தால்
பாதிக்கப்பட்ட தங்களின் களத்திர பாவகம் மிகவும்
கெட்டிருக்கிறது. 7 ஆம் இடத்து அதிபதி 4 இல் பல
கிரஹங்களுடன் இணைந்து வலுவிழந்துள்ளார். இந்நிலையில்
குடும்பத்திற்கு உரியவரும் நீச்சமாகி உள்ளார். 33
வயதைத் தாண்டிய நிலையில் தங்களுடைய கோட்சார கிரஹங்கள்
சற்று பலஹீனமாக உள்ளன. மிகுந்த போராட்டத்திற்கு
இடையேயும், தெய்வ பலத்தாலும் தாங்கள் தங்கள் மனைவி
மக்களுடன் சேர்ந்து வாழும் காலம் அருகில் உள்ளது.
கவலைப்பட வேண்டாம். வரும் நவம்பர் 2007 வரை
பொறுமையாக இருக்கவும். குரு பகவான் லாப ஸ்தானத்திலும்,
சுய வீட்டிலும் சஞ்சாரம் செய்யும் காலத்தில் தங்களின்
எதிர்காலத்தைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்வீர்கள்.
தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை தோறும் அர்ச்சனை
செய்து வழிபட்டு வந்தால் சிரமங்கள் குறையும்.
எமது நல்லாசிகள்
குருஜி, நான் தற்போது பார்த்துவரும்
வேலையிலிருந்து விலகலாமா? இடப்பெயர்ச்சி நன்றாக
அமையுமா? அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா?
வெளிநாடுகள் செல்லும் வாய்ப்புண்டா? வாய்ப்பு
இருந்தால் அது எப்போது?
- கார்த்திக், பேரையூர் (மதுரை)
இறைவனுள்அன்புடைய
கார்த்திக், பேரையூர் (மதுரை)
எமது நல்லாசிகள்.
துன்மதி வருடம் கார்த்திகை மாதம் 30 ஆம் தேதி
வெள்ளிக்கிழமை காலை 8-30 மணிக்கு பிறந்த தங்களின்
ஜாதகத்தைக் கணித்து ஆராய்ந்தோம். 25 வயது நிறைவு
பெற்ற தங்களுக்கு தற்பொழுது ராகு தசை நடந்து வருகிறது.
விருச்சிக லக்னம், ரிஷப ராஸி, கிருத்திகை 3 ஆம்
பாதத்தில் பிறந்த தங்களின் ஜாதகப்படி 2 ஆம் இடத்து
அதிபதி 11 இல் இருப்பதாலும் 10 இல் செவ்வாய்
பலத்துடன் நிற்பதாலும் கற்ற கல்வியின் பயனாய்
தங்களின் ஜீவன ஸ்தானம் அமைந்துவிடும். தாங்கள்
தற்பொழுது பார்த்து வரும் வேலையிலிருந்து வெகு
விரைவில் விலகி விடுவீர்கள். சொந்தத் தொழில் தங்களது
28ஆவது வயதில் அமையும். அதுவரை உத்யோகத்திலேயே
தொடர்ந்து இருந்து வாருங்கள். வெளிநாட்டுப் பயண
வாய்ப்பு இன்னும் 9 மாதம் சென்ற பின்பு தங்களைத் தேடி
வரும். அதைப் பயன்படுத்தி நல்ல வெளிநாட்டு
உத்யோகத்தில் சேர்ந்து விடுவீர்கள். தற்பொழுது
சொந்தத் தொழிலுக்கு முயற்சி செய்யாமல் வேறு ஒரு
இடத்தில் வேலைக்கு அமர முயற்சி செய்யுங்கள். வரும்
மாசி 22 தங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பத்தைத்
தரும். சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் ராகு பகவானை
வழிபட்டு வாருங்கள். சிரமங்கள் குறைந்து நல்லதே
நடக்கும்.
எமது நல்லாசிகள்.
|