|
<<<சென்ற
வாரம்
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர
இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த்
அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப்
பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம்,
ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட
நம்பிக்கைகளை ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம்.
இவரது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி மையம் மூலம்
ஒவ்வொரு வருடமும் 5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம்
பெறுகிறார்கள். கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற
அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம்
கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை
இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்வி:
கேள்வி :
எப்பொழுது எனக்கு திருமணம் நடக்கும்? எனது
குடும்பவாழ்க்கை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும்?
- உமா, நெய்வேலி
இறைவனுள் அன்புடைய உமா,
நெய்வேலி
எமது
நல்லாசிகள்.
பிங்கள
வருடம் மார்கழி மாதம் 22 ஆம் தேதி (7-1-1978) பிறந்த
தங்களின் ஜாதகத்தைக் கணித்து ஆராய்ந்தோம். விருச்சிக
லக்னம், விருச்சிக ராஸி, கேட்டை நட்சத்திரம் என்ற
அமைப்பைக் கொண்ட தங்களின் ஜாதகத்தில் செவ்வாய், குரு,
சனி ஆகிய கிரஹங்கள் வக்ரமாகி உள்ளன. தற்பொழுது
தங்களுக்கு சுக்கிரன் தசை நடந்து வருகிறது.
கோட்சாரத்தில் ஜென்மத்தில் குரு பலஹீனமாக உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தங்கள் ஜாதகத்தில்
நல்ல குரு பலன் திருமணத்தை நடத்திக் கொடுக்கும் நிலை
இருந்தது. தங்களின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் சென்ற
கார்த்திகை மாதத்தில் இருந்து திருமண பலன் தொடங்கி
வரும் ஆவணி மாதம் வரை இருக்கும். இக்காலத்திற்குள்
தங்களுக்கு திருமணம் நடந்துவிடும். தெற்கு திசை
மேற்கு திசையில் இருந்து அமையும் வரன் உத்யோகம்
பார்ப்பவராகவும் பொறுப்பு மிக்கவராகவும் நன்கு
படித்தவராகவும் இருப்பார். தங்களின் மணவாழ்க்கை மிகச்
சிறப்பாகவே இருக்கும். இதற்கிடையில் சுயம்வரா பார்வதி
ஹோமம் ஒன்றிற்கு மீண்டும் ஏற்பாடு செய்து காதோலை,
கருகுமணி, குங்குமம் சிவப்பு ஆடை இவற்றை சுமங்கலி
ஒருவருக்கு தானம் செய்ய பூஜை பலத்தால் தடையின்றி
திருமணம் நடந்தேறும்.
எமது நல்லாசிகள்
கேள்வி : எனது பணியிடத்தில் எனக்கு எப்போது பதவி
உயர்வு கிடைக்கும்?
ரஜினி, ஜாஃப்னா
இறைவனுள்அன்புடைய
ரஜினி, ஜாஃப்னா
எமது நல்லாசிகள்.
பிரமாதீச வருடம் தை மாதம் 6 ஆம் தேதி ஜோதிட
சனிக்கிழமை அதிகாலை 5-35 மணிக்கு விடிந்தால்
ஞாயிற்றுக்கிழமை 20-1-1974 அன்று பிறந்த தங்களின்
ஜாதகத்தைக் கணித்து ஆராய்ந்தோம். தனுசு லக்னம்,
விருச்சிக ராஸி கேட்டை நட்சத்திரம் ஜனன கால இருப்பு
புதன் தசை 1 வருடம் 4 மாதம் 22 நாட்கள் என்ற
அமைப்பைக் கொண்ட தங்களின் ஜாதகப்படி தங்களுக்கு
தற்பொழுது சூரியன் தசை இன்னும் 1 வருடம் 5 மாதம் 16
நாட்கள் வரை நடக்கும். கோட்சாரத்தில் தங்கள்
ஜாதகப்படி ஜென்மத்தில் குரு சஞ்சாரம் செய்கிறார்.
பாக்கியாதிபதி தன்னுடைய தசையை நடத்திக் கொண்டு
இருப்பதால் மேற்குறிப்பிட்ட சூரிய தசைக்குள்ளேயே
தங்களுக்கு உயர் பதவி கிடைத்துவிடும். ஆனால்
தற்பொழுது இருக்கும் இடத்தை விட்டு வேறு ஒரு
இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்படுவீர்கள்.
உத்யோகத்தில் சிரமங்கள் பல வந்து கொண்டே இருக்கும்.
மேலதிகாரிகளிடத்தில் சற்று கவனமாகவே பழகி வாருங்கள்.
இருப்பினும் தங்களின் கடின உழைப்பு இந்த
ஓராண்டிற்குள்ளேயே வெகுவாக மதிக்கப்படும். சூரியன்
தசை நடந்து கொண்டு இருப்பதால் சிவ ஸ்தலத்திற்கு
ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்று அர்ச்சனையுடன் கூடிய
வழிபாட்டினை செய்து வாருங்கள். தெய்வ அருளால்
சிரமங்கள் இலகுவாகும்.
எமது நல்லாசிகள்.
|