|
<<<சென்ற
பகுதி
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர
இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த்
அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப்
பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம்,
ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட
நம்பிக்கைகளை ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம்.
இவரது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி மையம் மூலம்
ஒவ்வொரு வருடமும் 5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம்
பெறுகிறார்கள். கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற
அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம்
கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை
இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்வி:
நான் ஒருவரைக் காதலிக்கிறேன். அவரை நான் திருமணம்
செய்துகொள்வேனா? எனக்கு நல்ல பதில் தாருங்கள். -
ஆரோக்கிய செல்வி, ராஜபாளையம்
இறைவனுள்
அன்புடைய சௌ.
ஆரோக்கிய செல்வி
எமது நல்லாசிகள்.
தங்களின் ஜாதகத்தை ஆராய்ந்தோம். கிருத்திகா
நட்சத்திரம் ரிஷப ராஸி துலாம் லக்னம் என்ற அமைப்பைக்
கொண்ட தங்களின் தற்கால வயது வரு 20- 6- 4. தற்பொழுது
தங்களுக்கு ராகு தசை நடந்து வருகிறது. கோட்சாரத்தில்
7-இல் குருவும் 3-இல் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
தங்களின் ஜாதகப்படி காந்தர்வ மணத்திற்கு அதிகமான
வாய்ப்பு இல்லை. சுப ஸ்தானாதிபதி கெட்டிருப்பதால்
காந்தர்வ மண வாழ்க்கை சிறப்படைய வாய்ப்பு இல்லை.
இருப்பினும் வரும் ஆடி மாதம் 3 ஆம் தேதி வரை
பொறுமையாக இருந்து அதன் பின்னர் கேட்ட வரத்தைக்
கொடுக்கும் புவனேஸ்வரி அம்பாள் விரதத்தை மேற்கொண்டு
வாருங்கள். விதியை மாற்றும் வல்லமை அம்பாளுக்கு உண்டு.
ஆடி மாதம் 3-ஆம் தேதிக்குப் பின்னர் வரும் ஒவ்வொரு
வெள்ளிக்கிழமை தோறும் விரதம் இருந்து தாங்கள்
நினைத்ததை அம்பாளிடம் முறையிட்டு தொடர்ந்து 9
வெள்ளிக்கிழமை வழிபாடு செய்து வாருங்கள். தெய்வத்தால்
ஆகாதது ஒன்றுமில்லை. தங்களின் மணவாழ்க்கை இனிமையாக
அமைய எமது நல்லாசிகள்.
எமது நல்லாசிகள்.
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?. எனது
தெய்வம் என்ன? மறுபிறவி ஏற்படாமல் இருக்க
என்ன செய்யவேண்டும்? – வை.சங்கரன், கும்பகோணம்
இறைவனுள்
அன்புடைய
சிரஞ். வை.சங்கரன்,
எமது நல்லாசிகள்.
நந்தன வருடம் சித்திரை மாதம் 11-ஆம் தேதி (29-4-1952
) அதிகாலை 3-00 மணிக்குப் பிறந்த தங்களின் ஜாதகத்தை
ஆராய்ந்தோம். திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராஸி
கும்ப லக்னம் என்ற அமைப்பைக் கொண்ட தங்களின் தற்கால
வயது வரு. 54-10-2 தற்பொழுது தங்களுக்கு புதன் தசை
நடந்து வருகிறது. கோட்சாரத்தில் ஏழரை சனியும் குரு
மறைந்தும் காணப்படுகிறார்கள்.
வரும் ஐப்பசி வரை சற்று மத்திம பலனும் அதன் பின்னர்
மிகச்சிறந்த பலனும் தங்களின் ஜாதகம் தங்களுக்கு
வழங்கும். தீர்க்காயுளை உடைய தங்களின் ஜாதகப்படி 65
வயது வரை எதற்கும் கவலைப்படாமல் வாழ்க்கையை நடத்தி
வாருங்கள். சிறுசிறு சிரமங்கள் வந்து போகும். அதனால்
பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. தாங்கள் மகேஸ்வரனை
வழிபட்டு வாருங்கள். ஈஸ்வரன்தான் தங்களின் தெய்வம்.
ஓரு முறை காசி சென்று தங்களுக்குரிய இறுதிக் கர்மாவை
நீங்களே செய்துவிட்டு வந்தால் மறு பிறவி இல்லை.
அங்கத்தின் 14 இடங்களில் நீறு புசி சிவனை வழிபட்டு
வாருங்கள். ஞானம் பிறக்கும்.
எமது நல்லாசிகள்.
Disclaimer:
Astrological consultation in this section is
provided by Guruji Karthika Siddarth for free.
Nilacharal.com cannot take any responsibility for
the authenticity and contents of the response.
|