|
<<<சென்ற
பகுதி
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர
இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த்
அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப்
பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம்,
ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட
நம்பிக்கைகளை ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம்.
இவரது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி மையம் மூலம்
ஒவ்வொரு வருடமும் 5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம்
பெறுகிறார்கள். கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற
அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம்
கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை
இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்வி:
யாம் ஒருவரை விரும்பி இப்போது பிரிந்து விட்டோம்.
இருவரும் இணைவோமா? அவர் என்னை நினைத்துக் கொண்டு
இருப்பாரா ? - தமிழ்ச்செல்வி, சிவகங்கை
இறைவனுள் அன்புடைய
சௌ. தமிழ்ச்செல்வி
எமது நல்லாசிகள்.
ரௌத்ரி வருடம் சித்திரை மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை
( 10-5-1980 ) இரவு 8-00 மணிக்குப் பிறந்த தங்களின்
ஜாதகத்தை ஆராய்ந்தோம். புரட்டாதி நட்சத்திரம் மீன
ராஸி விருச்சிக லக்னம் உடைய தங்களுக்கு தற்பொழது
புதன் தசை நடந்து வருகிறது. 26 வயது நிறைவு பெற்ற
தங்களின் ஜாதகத்தில் களத்திராதிபதி 8-இல் மறைந்து
விட்டார். ஏனவே பிரிந்தவரை நினைத்து
வருந்திக்கொண்டிருக்க வேண்டாம். உங்களை மறந்த அவரை
நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது நியாயம் இல்லை.
நல்ல மணவாழ்க்கை உடைய தங்களின் ஜாதகம் எதிர்காலத்தில்
நன்றாகவே இருக்கும். கவலைப்பட வேண்டாம். மகாவிஷ்ணுவை
வழிபட்டு வாருங்கள். பெருமாளின் அனுக்கிரஹம்
தங்களுக்கு உண்டு.
எமது நல்லாசிகள்.
எனது கணவர் சொந்தமாக தொழில் செய்கிறார். நான் வேலை
செய்கிறேன். அத்தோடு சொந்தமாக தொழிலும் தொடங்கினேன்.
எனது வேலை நிரந்தரமாக இருக்குமா? நிம்மதியுடன்
வாழலாமா? – சாந்தி, ஜாஃப்னா
இறைவனுள் அன்புடைய
சாந்தி,
எமது நல்லாசிகள்.
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 29-ஆம் தேதி
செவ்வாய்க்கிழமை மாலை 5-45 மணிக்கு (14-12-1965) பிறந்த தங்களின் ஜாதகத்தை ஆராய்ந்தோம். பூரம்
நட்சத்திரம் சிம்ம ராசி ரிஷப லக்னம் கொண்ட தங்களுக்கு
தற்பொழுது 42 ஆவது வயது நடந்து வருகிறது.
ராகு தசையில் தாங்கள் சொந்தமாக தொழில் தொடங்கி
இருக்கிறீர்கள். ஓரிடத்தில் வேலையும் அத்துடன்
சொந்தத் தொழிலும் இணைந்து ஒரே நேரத்தில் செயலாக்கப்
படுவது தங்கள் ஜாதகப்படி சிரமமே. 10-இல் சனி
இருப்பதால் சொந்தத் தொழிலைவிட உத்யோகத்தில்
இருப்பதுதான் ஜாதகப்படி நல்லது. சிறிது காலம்
யோசித்து இந்த ராகு தசைக்குள்ளேயே சுய தொழிலைக்
குறைத்துக் கொண்டு உத்யோகம் பார்ப்பீர்கள் என்றால்
சிறப்பாக இருக்கும். தங்கள் கணவரின் சொந்தத் தொழில்
வரும் ஐப்பசி மாதத்திற்கு பின்னர் மிக சிறப்பாகவே
இருக்கும். நான் வழங்கியுள்ள ஜாதக அறிவுரைப்படி
நடந்து நிம்மதியாக வாழ முயற்சி செய்யுங்கள். எமது
நல்லாசிகள்.
எமது நல்லாசிகள்.
Disclaimer: Astrological consultation in this
section is provided by Guruji Karthika Siddarth
for free. Nilacharal.com cannot take any
responsibility for the authenticity and contents
of the response.
|