|
<<<சென்ற
பகுதி
குருஜி
கார்த்திகா சித்தார்த் அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர
இசைந்துள்ளார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற குருஜி கார்த்திகா சித்தார்த்
அவர்கள் இதுவரை 22000 மாணவர்களுக்கு ஜோதிடக் கலையைப்
பயிற்றுவித்திருக்கிறார். வேத சாஸ்திரம், பூஜை, ஹோமம்,
ரசவாதம் போன்றவற்றில் வல்லுநரான இவருக்கு மூட
நம்பிக்கைகளை ஒழித்து இறைமையை நிலைநாட்டுவதே நோக்கம்.
இவரது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி மையம் மூலம்
ஒவ்வொரு வருடமும் 5000 மாணவர்கள் ஜோதிடத்தில் பட்டம்
பெறுகிறார்கள். கார்த்திகா வித்யா பவன் ட்ரஸ்ட் என்ற
அமைப்பையும் இவர் நிறுவியுள்ளார்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
கேள்விகளை அனுப்பலாம். குருஜியின் பதில்கள்
'ஜோதிடம்
கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை
இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்வி:
எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? ரொம்ப
சிரமப்படுகிறேன். தயவு செய்து பதில் கூறவும். –
சுந்தரராமன், கும்பகோணம்
இறைவனுள் அன்புடைய
சிரஞ்.சுந்தரராமன்
எமது நல்லாசிகள்.
ராஷஸ வருடம் புரட்டாசி மாதம் 2 ஆம் தேதி 19-9-1975
அன்று பிறந்த தங்களின் ஜாதகத்தை ஆராய்ந்தோம். சதய
நட்சத்திரம் கும்ப ராசி கடக லக்னம் 9 இல் குரு வக்ரம்
10 ஆம் இடத்து அதிபதி கேதுவுடன் இணைவு என்ற நிலை
ஆரம்ப கால போராட்டம் பின்னர் சுகப்படுதல் போன்ற
நிலையை ஏற்படுத்தும். தற்பொழுது தங்களின் வயது வரு.
31-5-12 தற்பொழுது சனி தசை நடந்து வருகிறது. 10இல்
உள்ள கோட்சார குரு வரும் ஐப்பசி மாறும் பொழுது
தங்களின் சிரமங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
16-11-2007 க்குப் பின் வாழ்க்கையில் நல்ல
திருப்பத்தைக் காண்பீர்கள். உத்யோகம் சிறப்படையும்.
தட்சசிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு
வாருங்கள். நல்ல பலனை காண்பீர்கள். சிறப்பான வாழ்க்கை
வாழ எமது ஆசிகள்.
எமது நல்லாசிகள்.
என்னுடைய கணவர், மாமியார், மாமனார் மற்றும்
மைத்துனரிடம் எனக்கு சுமூக நிலை இருக்குமா? என்
திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? – மது, வேலூர்
இறைவனுள் அன்புடைய சௌ. மது
எமது நல்லாசிகள்.
ராட்சஸ வருடம் தை மாதம் 22 ஆம் தேதி வியாழக்கிழமை (
5-2-1976 ) இரவு 10-15 மணிக்கு பிறந்த தங்களின்
ஜாதகத்தை ஆராய்ந்தோம். ரேவதி நட்சத்திரம் மீன ராசி
கன்னி லக்னம் 11இல் வக்ர சனி சுகஸ்தானத்தில் பகை
சுக்கிரன் ஆகியவை சற்று மந்தமான சூழ்நிலையையே
உருவாக்கியுள்ளன.
தங்களுக்கு 31 வயது முடிந்துள்ளது. தற்பொழுது
சுக்கிரன் தசை நடக்கிறது. இன்னும் 1 வருடம் 2 மாதம்
18 நாட்கள் முடிந்தவுடன் இதுவரைபட்ட அத்தனை
சிரமங்களும் மாறிவிடும். கணவன் அவரின் தாய் தந்தையர்
மற்றும் அவர் உடன்பிறப்பு ஆகியோரிடமிருந்து விரைவில்
விடுதலை கிடைக்கும். அவர்களுக்கு உங்களை உணர்ந்து
கொள்ளும் காலம் வெகு சமீபத்திலேயே உள்ளது. வரும் ஆடி
மாதம் நல்ல குடும்ப சூழ்நிலையை உருவாக்கிவிடும். 7
இல் குரு சந்திர இணைவு பெற்றுள்ளதால் எதற்கும்
கலங்காமல் தைரியமாக வாழ்க்கையை நடத்தி வாருங்கள்.
எந்த சிரமத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி உண்டு.
ஆஞ்சநேயரை சனிக்கிழமை தோறும் மனமுருகி வழிபட்டு வர
வெகு விரைவில் குடும்ப பிரச்சனைகளில் இருந்து
விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.
எமது நல்லாசிகள்.
Disclaimer: Astrological consultation in this
section is provided by Guruji Karthika Siddarth
for free. Nilacharal.com cannot take any
responsibility for the authenticity and contents
of the response.
|