|
திரு.
இசக்கி அவர்கள், நிலாச்சாரல்
வாசகர்களின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு
அவர்களின் ஜாதகத்தின் அடிப்படையில் பதில் தர
இசைந்துள்ளார்.
ஆன்மீகம், தியானம், மணி, மந்திரம், வைத்தியம்,
ஜோதிடத்தின் (ஜாதகம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல்,
வாஸ்து) மூலம் தமது 30 ஆண்டுகால அனுபவத்தின் நற்கன்ம
வழியில் மனிதர்களின் தோஷங்கள் அகலவும், வாழ்க்கையில்
உயர்ந்த அந்தஸ்தை அடையவும், ஜோதிடம் மற்றும்
தியானத்தில் எளிதில் சித்தி பெறவும், சகல விதமான
நோய்களுக்கும் தீர்வு காண்பதற்கும் எங்களை அணுகலாம்
எனக் கூறுகிறார் இசக்கி அவர்கள்.
கேள்விகளை அனுப்ப விரும்புபவர்கள் இப்பக்கத்தின்
இறுதியில் காணப்படும் படிவத்தை நிரப்புவதன் மூலம்
கேள்விகளை அனுப்பலாம். பதில்கள் 'ஜோதிடம்
கேளுங்கள்' பகுதியில் மாதமொரு முறை அல்லது இருமுறை
இடம் பெறும். கேள்வி கேட்கும் வாசகரின் பெயர் அல்லது
ஊர் மட்டுமே இங்கு வெளியிடப்படும். மற்ற விபரங்களை
நிலாச்சாரல் சேமித்து வைப்பதில்லை.
இந்த வாரக் கேள்விகள் :
?
என்னுடைய மரணம் எப்பொழுது? தயவுசெய்து சொல்லுங்கள்.
ராசி கன்னி, நட்சத்திரம் உத்திரம், லக்கினம் மகரம்.
- இளவரசி
அன்புடையீர்! தங்களது ஜாதகப்படி தற்போது வயது 23
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாங்கல்ய தோஷம்
உள்ளதால் செவ்வாய்க்கிழமை காரம் சேர்க்காத பால், பழம்,
தயிர்சாதம் முதலியவற்றை உண்டு முருகன் கோவில் சென்று
மாலை வேளையில் வழிபட்டு வரவும். மரணம் என்பது
தங்களுக்கு 70க்கு மேல் ஆகும். எனவே கவலை வேண்டாம்.
அஷ்டமாபதி சூரியன் குருவுடன் கூடி தனுசில்
அமர்ந்துள்ளதாலும் சனி துலாராசியில் உச்சம்
பெற்றுள்ளதாலும் ஆயுள் தீர்க்கம். சம்பந்தமில்லாத
காரியங்களில் அநாவசியமாகத் தலையிடவேண்டாம். முன்
கோபத்தைத் தவிர்க்கவும். இறையருள் என்றென்றும் உண்டு.
*******
?
நான் பொருளாதாரமாக மிகவும் கஷ்டத்தில் உள்ளேன். நான்
மிகவும் குறைவாகவே சம்பாதிக்கின்றேன். என்று இதற்க்கு
என்ன தீர்வு மற்றும் எனக்கு எப்பொழுது நல்ல நேரம்
வரும். - திருவள்ளுவன்
அன்புடையீர்! தங்களுக்கு தற்போது வயது 44 ஆகிறது.
தங்களுக்கு ரிஷப லக்கனம் 2,5-க்கு உடைய புதன் சூரியன்
உடன் அமர்ந்து 2-ற்கும் 5-ற்கும் மறைந்துள்ளதால்
வருகிற டிசம்பர் மாதத்துக்கு மேல் பொருளாதார
நெருக்கடி மாறும். முருகன் மற்றும் மஹாலெட்சுமி
வழிபாடு செய்து வரவும். சனிக்கிழமை அன்று
காக்கைக்குச் சாதம் போட்டு பிள்ளையார் கோவிலில்
எள்சாதம் போட்டு பக்தர்களுக்குக் கொடுக்கவும்.
தனகாரகன் ஆகிய குரு 11-ம் இடத்தில் ஆட்சி
பெற்றுள்ளதால் நிச்சயம் பொருளாதாரம் நெருக்கடி மாறி
நல்ல நிலைமைக்கு வருவீர்கள்.
******* |