|
இந்த வாரக் கேள்விகள் :
?
இறைவனுள் அன்புடைய குருஜி, நான் 24.03.1965 ல்
முல்லைத் தீவு ஈழத்தில் அதிகாலை புதன்கிழமை 03.12
நிமிடத்தில் பிறந்தேன். ஜாதகம் இல்லை. சுவிசு
நாட்டில் வசிக்கிறேன். வியாபாரம் செய்ய
விரும்புகிறேன். எப்படியான பலன் உள்ளது
- அருண்.சுப்ரமணியம்
அன்புடையீர்! தங்களுக்குத் தற்போது 43 வயது நடந்து
கொண்டிருக்கிறது. லக்கனம் மேஷம் 10-க்கு உடைய சனி
கும்பத்தில் ஆட்சி பெற்றுள்ளதால் சுய தொழில் மூலம்
மிகவும் பிரபலமாக பெயர், புகழ், பணம்
சம்பாதிப்பீர்கள். 5-ல் செவ்வாய் அமர்ந்து இதன்
அதிபதி சூரியன் 12-ம் இடத்தில் மறைந்துள்ளதால்
அந்நிய நாட்டிலேயே தங்களது வாழ்நாள் சிறப்பாக அமையும்.
சொந்தமாக வியாபாரம் வருகிற ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு மேல்
செய்வது நல்லது. மிகவும் அமோகமான செல்வாக்கு. புகழ்
ஏற்படும். மஹாலெட்சுமியை வெள்ளிக்கிழமை அன்று
மாமிசஉணவுகள் நீக்கி விரதமிருந்து வழிபாடு செய்து
வருதல் நல்லது. வலது கையில் மோதிர விரலில் கனக
புஷ்பராகம் தங்கத்தில் கட்டி மோதிரமாக அணிந்து
கொள்வது நல்லது.
*******
? குருஜி,
நான் சுய தொழில் செய்து நல்ல நிலைமையில் உள்ளேன்.
ஆனால், மனதில் எப்போதும் நிம்மதி இல்லை. இந்த நிலைமை
எப்போது மாறும். எனது திருமண
வாழ்க்கை எப்படி இருக்கும்? -
சரவணன்
அன்புடையீர்! தற்போது தங்களுக்கு 27 வயது ஆகிறது.
தங்களுக்கு மகர லக்கனம். லக்கனத்தில் கேது 5-க்கு
அதிபதியாகிய சுக்கிரன், சனி உடன் கூடிக் கன்னியில்
அமர்ந்துள்ளதால் மன நிம்மதி இல்லாமல் இருக்கிறீர்கள்
சூரிய பஹவானை ஞாயிற்றுக் கிழமைகளில் விரதமிருந்து
வழிபட்டு ஏழைகளுக்கு வஸ்திரதானம் செய்யவும்.
வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு செய்து வரவும். 7-ல்
ராகு உள்ளதால் களத்திர தோஷம் உள்ளது. எனவே மாங்கல்ய
தானம் செய்யவும். வருகிற 2007 நவம்பர்-க்கு மேல்
மனநிம்மதி உண்டாகும்.
******* |