Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

இராசிபலன்கள்
(11-6-2007 முதல் 17-6-2007 வரை)
கணித்து எழுதியவர் : ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 316

11 ஜூன் 2007


Astrology
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

 

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்குப் பரிசும் பாராட்டுதலுகளும் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. தீராத நோய்க்கு விடை காணுவீர்கள், தாய்க்கு உடல் நிலை பாதிக்கும். தந்தை வழிச் சொத்துக்கள், மற்றும் வரவேண்டிய பணம் கைவந்து சேரும். பொதுநலத் தொண்டு நிறுவனத்தவர் நற்பலன் அடைவார்கள். தலை, முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பெண்களால் ஆதாயம் உண்டாகும். செல்வந்தர்களால் ஆதாயம் உண்டு. சகோதரர் குடும்பத்தால் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். பேப்பர், புத்தகம், பிரிண்டிங் தொழில் செய்வோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். 

இராசியான எண் : 9
இராசியான நிறம் : சிகப்பு 
இராசியான திசை : தெற்கு
பரிகாரம் :
முருகன் வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம் :

ரிஷப ராசி அன்பர்களே,. கேது நன்மை தரும் கிரஹமாகும். வீடு மாற்றம் உண்டாகும். உத்தியோக விஷயமாகப் பணம், சொத்து ஏமாறாமல் இருக்கவும். யாத்திரையில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் நன்மையடைவீர்கள். தெய்வீகப் பணிகளில் மிகுந்த அக்கரையுடன் செயல்படுவீர்கள். கண்களில் கவனம் தேவை.
பொருளாதாரம் நன்று இருக்கும். தூரத்து யாத்திரைகளைத் தள்ளிப் போடவும். உறவினர் வருகையால் பணச் செலவுகள் ஏற்படும் காலமாகும். வழக்குகள் மூலம் வரவேண்டிய பணம், மற்றும் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. கலைத்துறை மாணவர்கள் மற்றும் கலைஞர்கள் லாபம் அடைவர். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண் : 7
இராசியான நிறம் : கருஞ்சிகப்பு 
இராசியான திசை : வடமேற்கு
பரிகாரம் :
கணபதி வழிபாடு செய்து வரவும்.

மிதுனம் :

மிதுன ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரஹமாகும். திருட்டுப் போன பொருள் கிடைக்கும். பங்காளியால் ஆதாயம் இல்லை. ஆரசியல்வாதிகள் ஆதாயம் அடைவார்கள். மனைவியால் பொருள் வரவு உண்டு. தீராத வியாதிகளுக்கு நல்ல மருத்துவர் மூலம் விடை காணுவீர்கள். பொதுநலத் தொண்டுகளில் மனமுவந்து பணியாற்றுவீர்கள். வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். காண்டடிராக்ட், தரகு தொழில் செய்வோர்கள் லாபம் அடைவர். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வீடு, மற்றும் நகைகள் மூலம் புதிய கடன் வாங்குவீர்கள். பங்காளிகளிடம் எச்சரிக்கை தேவை. உடம்பில் இரத்தம், மற்றும் இதயம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.


இராசியான எண் : 4
இராசியான நிறம் : கருப்பு
இராசியான திசை : வடமேற்கு
பரிகாரம் :
அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

கடகம் :

கடக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடரலாம். கலைஞர்கள் பரிசுகள், மற்றும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீண் பொருட்செலவுகள் உண்டாகலாம். தீர்த்த யாத்திரைகள், மற்றும் உல்லாசப் பயணம் சென்று வரக்கூடிய காலமாகும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும். கோர்ட் வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிய தொழில் ஒன்றை ஆரம்பம் செய்யத் திட்டமிடுவீர்கள. புதிய கூட்டுத் தொழில் முயற்சிகள் நன்றாக இருக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் பொருட்செலவு உண்டாகும். மன அமைதிக்காக ஆலய வழிபாடு செய்தல் நன்று. இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். 

இராசியான எண் : 6
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை : தென்கிழக்கு
பரிகாரம் :
மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.

சிம்மம் :

சிம்ம ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். காதல் விஷயங்களில் எச்சரிக்கை தேவை. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்காக முயற்சி செய்வீர்கள். மனைவி வழிச் சொந்தங்ள் மூலம் சில அனுகூலங்கள் ஏற்படும். பிள்ளைகளால் தனவரவு உண்டு. புகையிலை, மது, மற்றும் கமிஷன் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். திருமணமாகாதவர்களுக்கு மணமாகின்ற காலமாகும். தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும். பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். காதல் விஷயங்களில் வெற்றி தேடித்தரும். புதிய தொழில் ஆரம்பம் செய்வதைத் தள்ளிப் போடவும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் : 8
இராசியான நிறம் : நீலம் 
இராசியான திசை : தென்மேற்கு
பரிகாரம் :
ஆஞ்சனேயர் வழிபாடு செய்து வரவும்.

கன்னி :

கன்னி ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். உறவால் பொருட் செலவு உண்டாகும். உடம்பில் நரம்பு, எலும்பு சம்பந்தமான பிணிகள் வந்து தீரும். ஸ்டேஷனரி ஷாப், மற்றும் தபால், தந்தித்துறையினர் லாபம் அடைவார்கள். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். தூரப்பயணம் தள்ளிப் போடவும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் நற்பலன் கிடைக்கும். வராத கடன் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். அடுத்தவருக்காக ஜாமின் போட்டுப் பிரச்சனைகளை விலைக்கு வாங்க வேண்டாம். உடம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். மருத்துவத்துறை சார்ந்தவர்கள், ஆலயப்பணி புரிவோர்கள் நற்பலன் அடைவார்கள். தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்தல் நல்லது. இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். 

இராசியான எண் : 8
இராசியான நிறம் : நீலம் 
இராசியான திசை : தென்மேற்கு
பரிகாரம் :
அம்மன் வழிபாடு செய்து வரவும்.

துலாம் :

துலா ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். ஆடம்பர அலங்காரப் பொருட்கள் வாங்குவதால் பணச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனநிம்மதி இல்லை. மாமன் வழியில் புதிய பிரச்சனைகள் உருவாகும். வீண் பொருள் விரையம் ஏற்படலாம். வண்டி, வாகனம் வைத்திருப்பவர்களுக்குப் புதிய பழுதுபார்க்கும் செலவுகள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் வரும். புதிய வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அண்டை அயலார் உறவுகளில் கவனமுடன் பழகி வரவும். தேவையான பணம் கிடைக்கும். உறவுகள் பலப்படும் காலமாகும். இரும்பு, இயந்திரம், எண்ணை வியாபாரம் செய்வோர்கள் நற்பலன் அடைவார்கள். தொலைதூரப் பயணம் விலக்கவும். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் : 1
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை : கிழக்கு
பரிகாரம் :
சூரிய வழிபாடு செய்து அன்னதானம் செய்யவும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி அன்பர்களே, கேது நன்மை தரும் கிரஹமாகும். தேவையற்ற மனசஞ்சலம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லது. பூர்வீகச் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில சச்சரவுகள் வந்து நீங்கும். சகோதர சகோதரிக்குள் மனக்கசப்பு ஏற்படலாம். தொலைதூரப் பயணம் வெற்றியளிக்கும். வீடு மாற்றம் உண்டாகும். உத்தியோகம் செய்பவர்களுக்கு இட மாற்றம் அல்லது பதவி உயர்வு ஏற்படும். யாத்திரைகளில் எச்சரிக்கை தேவை. உடம்பில் வயிறு, குடல் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். விருந்தினர் வரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். 

இராசியான எண் : 7
இராசியான நிறம் : கருஞ்சிகப்பு 
இராசியான திசை : வடமேற்கு 
பரிகாரம் :
கணபதி வழிபாடு செய்து வரவும்.

தனுசு :

தனுசுராசி அன்பர்களே! சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். நன்றாகப் பலிதமாகும். உறவினர்கள் உதவியால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள் கம்ப்யூட்டர், இணையதளம், தொலைக்காட்சி நடத்துவோர்கள் லாபம் அடைவர். தீடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ், லாட்டரி மூலம் தனம் வர வாய்ப்புள்ளது. உடம்பில் வாய், பற்கள் சம்பந்தமான தொல்லைகள் வந்து நீங்கும். விவசாயம், பெண்களால் பிரச்சனைகள் உண்டாகும். செய்யாத குற்றங்களுக்காக அவமானப்படக்கூடிய பழிச்சொல் உருவாகலாம். கலைஞர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. சினிமா, மற்றும் நாடகத் துறையினர் கவனமுடன் செயல்படவும். கேளிக்கை, விநோத விளையாட்டுகளுக்காகப் பணச் செலவு உண்டாகும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும். 

.
இராசியான எண் : 6
இராசியான நிறம் : கருப்பு
இராசியான திசை : வடமேற்கு
பரிகாரம் :
மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.

மகரம் :

மகர ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் புதிய பிரச்சனைகள் உருவாகும். உத்தியோகத் துறையினருக்கு சில இடையூறுகள் வந்து விலகும். சேய்தொழில் லாபம் உண்டாகும். தென் திசையிலிருந்து பொருள் வரவு உண்டு. நண்பர்களால் ஆதாயம் இல்லை. கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். பொருளாதாரம் திருப்திகரமான நிலையில் உள்ளது. கலைஞர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். பிள்ளைகளால் மன நிம்மதி இல்லை. மற்றோர் நடத்தும் தொழில் ஸ்தாபனங்களில் பெரிய பதவிகள் கிடைக்கும். கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டால் பிரச்சனைகள் வரலாம். எனவே முன்கோபம் தவிர்த்தல் நல்லது. இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். 

இராசியான எண்- 9
இராசியான நிறம் : சிகப்பு 
இராசியான திசை : தெற்கு
பரிகாரம் :
துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

கும்பம் :

கும்ப ராசி அன்பர்களே, ராகு நன்மை தரும் கிரஹமாகும். தீர்த்த யாத்திரை சென்று வரக்கூடிய வாய்ப்புள்ளது. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணம் வெற்றி பயக்கும். வீடுமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. பொருளாதார நெருக்கடி உண்டாகும். கடன் தொல்லைகள் நெருக்கடி ஏற்படுத்தும். நண்பர் ஒருவர் உதவியால் புதிய கடன் வாங்குவீர்கள். மனைவிக்கு மருத்துவச் செலவு ஏற்படும் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகலாம். தந்தைக்கு உடல்நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கூட்டுத்தொழிலில் பிரச்சனகைள் மூலம் பிரிவு ஏற்படக்கூடிய காலமாகும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண் : 2
இராசியான நிறம் : வெள்ளை 
இராசியான திசை : மேற்கு
பரிகாரம் :
அம்மன் வழிபாடு செய்து வரவும்.

மீனம் :

மீன ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். பழைய வீட்டைத் திருத்திக் கட்ட வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் நற்பலன் அடைவார்கள். உப்பு வியாபாரம், நீர்வாளத்துறை சார்ந்தாவர்கள், மற்றும், கூல்டிரிங்ஸ் வியாபாரிகள் நற்பலன் அடையக்கூடிய காலமாகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தள்ளிப் போடவும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படலாம். பூ, பழம், நறுமணப் பொருள் வியாபாரிகள் நற்பலன் அடைவார்கள். போலீஸ், ராணுவத்துறை, தீயணைப்புத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். இது சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண் : 1
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை : கிழக்கு
பரிகாரம் :
சூரிய வழிபாடு செய்து அன்னதானம் செய்யவும்.

*******

           
New Page 1

 மேலும் பல.....