Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

இராசிபலன்கள்
(25-6-2007 முதல் 1-7-2007 வரை)
கணித்து எழுதியவர் : ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 318

25  ஜூன் 2007


Astrology
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

 

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். தூரத்து யாத்திரை மேற்கொள்வீர்கள். உடம்பில் மேகம் சம்பந்தமான பிணிகள், உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து விலகும். நெருப்பு சம்பந்தபட்ட தொழில்கள், இராணுவத் தொழில், காவல் துறையைச் சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும். கலைத் துறையினர்களும், அரசியல்வாதிகளும் லாபம் அடைவர்.

இராசியான எண் : 3
இராசியான நிறம் : மஞ்சள்
இராசியான திசை : வடகிழக்கு
பரிகாரம் : சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்யவும்.

ரிஷபம் :

ரிஷப ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். பொருளாதார நெருக்கடி உண்டாகும். பிள்ளைகளால் பொருட் செலவுகள் உண்டு. பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். பங்குத் தொழிலில் நட்டத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாது. உடம்பில் சளி சமபந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுதல் நல்லது. உடம்பில் வாயு, மற்றும் வயிற்று உபாதைகள் வந்து நீங்கும். எழுத்துப் பணி செய்வோர்கள், வங்கிப் பணியாளார்கள், காய் கறி வியாபாரிகள் லாபமடைவர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.

இராசியான எண் : 8
இராசியான நிறம் : நீலம்
இராசியான திசை : தென் மேற்கு
பரிகாரம் : அம்மன், ஆஞ்சனேயர் வழிபாடு செய்து எள் தானம் செய்யவும்.

மிதுனம் :

மிதுன ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். தனப் புழக்கம் நன்றாக இருக்கும். வங்கிகளில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் புகழ் உண்டாகும். பிள்ளைகளுக்குத் திருமணக் காரியங்கள் நிறைவேறும். தாய் தந்தையற்கு சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும். உடம்பில் நரம்பு, மற்றும உணவுக்குழல் சம்பந்தமான பீடைகள் உண்டாகும். வாகனத் தொழில்கள், ஆடம்பர அலங்காரப் பொருட்கள், இனிப்புப் பொருள் வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள் இவர்களுக்கு நற்பலன் உண்டாகும்.

இராசியான எண் : 8
இராசியான நிறம் : நீலம்
இராசியான திசை : தென்மேற்கு
பரிகாரம் : ஐயப்பன் வழிபாடு செய்து எள் தானம் செய்யவும்.

கடகம் :

கடக ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கு முயற்சி செய்வீர்கள். எதிரிகள் தொல்லைகள் தீரும். கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. செய் தொழிலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். காதல் விஷயங்களில் வெற்றி தேடித் தரக் கூடிய காலமாகும். உடம்பில் வயிறு, மூலம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். பூ, பழம் போன்ற வியாபாரிகள் ஆலயப் பணி செய்வோர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், பேராசிரியர்களுக்கு மற்றும் ஷேர் மார்க்கெட், ஃபைனான்ஸ் தொழில் நடத்துவோர்களுக்கு நற்பலன் உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும்.

இராசியான எண் : 5
இராசியான நிறம் : பச்சை.
இராசியான திசை : வடக்கு
பரிகாரம் : ஆஞ்சனேயர் வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்யவும்.

சிம்மம் :

சிம்ம ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பொருளாதாரம் சீராக இருக்கும். புதிய வீடு, நிலம், கார் போன்றவை வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும் பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகின்ற காலமாகும். பூர்வீகச் சொத்துக்கள் விற்பதில் பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் தொடங்குவதைத் தள்ளிப் போடவும். இரும்பு, இயந்திர சம்பந்தமான தொழில்கள், எண்ணை வியாபாரம் செய்வோர், பலசரக்கு வியாபாரம் செய்வோர் லாபம் அடைவர். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

இராசியான எண் : 6
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை : தென்கிழக்கு, மேற்கு
பரிகாரம் : மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து மொச்சை தானம் செய்யவும்.

கன்னி :

கன்னி ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். உடம்பில் வாத சம்பந்தப்பட்ட நோய்கள், நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். இனிப்புப் பொருட்கள் வியாபாரம் நடத்துவோர்கள், கோயிலில் பணி புரிவோர்கள், பேராசிரியர்களுக்கு நற்பலன் தரும் காலமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால் ஆதாயம் உண்டாகும்.

இராசியான எண் : 9
இராசியான நிறம் : சிகப்பு
இராசியான திசை : தெற்கு
பரிகாரம் : முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்யவும்.

துலாம் :

துலா ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். சகோதர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட்டலும் அவர்களால் ஆதாயம் உண்டாகும். கண்டங்கள் வந்து நீங்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண காரியம் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் வீண் சலசலப்புகள் வந்து நீங்கும். எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும். அரசுத் துறையின் மூலம் உதவிகள் கிடைக்கும். நீண்ட தூர யாத்திரைகள் மூலம் நற்பலன் ஏற்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் ஏற்படும்.

இராசியான எண் : 5
இராசியான நிறம் : பச்சை
இராசியான திசை : வடக்கு
பரிகாரம் : திருமால் வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்யவும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். உடம்பில் மூளை, நரம்பு, முதுகு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். தண்ணீர் சம்பந்தமான பொருட்கள் வியாபாரம் செய்வோர்களும் பூசை சாதனங்கள், பொதுத் தொண்டு நிறுவனத்தோர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை நடத்துவோர்களும் நல்ல லாபம் பெறக்கூடிய காலமாகும். இரசாயனத் தொழில், வட்டித் தொழில், கமிஷன் தொழில் செய்வோர்கள், மீன், முட்டை, மாமிச உணவு வியாபாரிகள் லாபமடைவர். குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து நீங்கும்.

இராசியான எண் : 2
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை : மேற்கு
பரிகாரம் : அம்மன் வழிபாடு செய்து பச்சரிசி தானம் செய்யவும்.

தனுசு :

தனுசு ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். கட்டிட சம்பந்தமான பொருட்கள், காண்டிராக்ட் தொழில் செய்வோர்கள், அரசு ஊழியர்கள் லாபம் அடைவர். தெற்கு திசையிலிருந்து பெண்களால் நன்மை அடைவீர்கள். பங்காளிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உடம்பில் மேகம் மற்றும் உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து நீங்கும். கட்டிட சம்பந்தமான கல், மணல், சிமிண்ட், செங்கல் வியாபாரிகள் சினிமாத் துறையைச் சார்ந்தவர்கள், கார் போன்ற வாகனத் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவர். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

இராசியான எண் : 1
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை : கிழக்கு
பரிகாரம : சிவ வழிபாடு செய்து கோதுமை தானம் செய்யவும்.

மகரம் :

மகர ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். செய்தொழிலில் நல்ல லாபம் தரும் காலமாகும். காதல் வெற்றியளிக்கும். நித்திரை பங்கம் ஏற்படும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடவும். உடம்பில் எலும்பு, இரத்தம் சம்பந்தமான பிணிகள் வர வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் சிற்சில பொருட் செலவுகள் உண்டாகும். உடம்பில் உஷ்ண சம்பந்தமான பிணிகள், இதய நோய் வந்து விலகும். நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், ஹோட்டல் தொழில்கள், மின்சாரப் பணி செய்பவர்கள், தீயணைப்புத் துறையினர் ஆகியோர்கள் லாபம் அடைவர்.

இராசியான எண் : 3
இராசியான நிறம் : மஞ்சள்
இராசியான திசை : வடகிழக்கு
பரிகாரம : சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்யவும்.

கும்பம் :

கும்ப ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். மாணவர்களுக்குக் கல்வியில் பரிசுகள் கிடைக்கும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். புதிய வீடு மாற்றம் ஏற்படும். செய்தொழிலில் கவனம் தேவை. யாத்திரை விலக்கவும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம் உண்டு. புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். புதிய வீடு கட்டக் கூடிய காலமாகும். குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்படும்.

இராசியான எண் : 9
இராசியான நிறம்: சிகப்பு
இராசியான திசை- தெற்கு
பரிகாரம் : முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்யவும்.

மீனம் :

மீன ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். பணப்புழக்கம் சிறிது நெருக்கடி வந்து விலகும். வீடு, நிலம் போன்றவைகளில் மாற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். கோர்ட் வழக்கு விபகாரங்களில் வெற்றியடைவீர்கள். உடம்பில் சுவாச சம்பந்தமான கோளாறுகள், அலர்ஜி போன்ற நோய்கள், சளித் தொல்லைகள் ஏற்படும். உடம்பில் கண், பல் சம்பந்த வியாதிகள் நரம்புத் தளர்ச்சி, மனோவியாதிகள் வர வாய்ப்பு உள்ளது. நீண்ட தூரப் பயணங்கள் வெற்றியளிக்காது. காதல் விஷயங்களில் கவனம் தேவை. மனைவிக்கு நோய் வாய்ப்படும். மாணவர்கள், கலைத்துறையினர் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

இராசியான எண் : 6
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை : தென்கிழக்கு
பரிகாரம் : மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து மொச்சை தானம் செய்யவும்.

*******

           
New Page 1

 மேலும் பல.....