மேஷம் :
மேஷ ராசி
அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். மனைவிக்கு மருத்துவச் செலவு ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டுப் பயணம் வெற்றி பயக்கும். வீடு மாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. யாத்திரைகளில் எச்சரிக்கை தேவை. உடம்பில் வயிறு, குடல் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். வீடு மாற்றம் உண்டாகும். உத்தியோக விஷயமாகப் பணம், சொத்து ஏமாறாமல் இருக்கவும். யாத்திரையில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் நன்மையடைவீர்கள். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் : 6
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை : தென்கிழக்கு
பரிகாரம் : மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம் :
சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். சகோதரர் குடும்பத்தால் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். பேப்பர், புத்தகம், பிரிண்டிங் தொழில் செய்வோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். வீண் பொருட் செலவுகள் உண்டாகலாம். தீர்த்த யாத்திரைகள் மற்றும் உல்லாசப்பயணம் சென்று வரக் கூடிய காலமாகும். வாகனங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும். திருட்டுப் போன பொருள் கிடைக்கும். பங்காளியால் ஆதாயம் இல்லை. ஆரசியல்வாதிகள் ஆதாயம் அடைவார்கள். மருத்துவத்துறை சார்ந்தவர்கள், ஆலயப்பணி புரிவோர்கள் நற்பலன் அடைவார்கள். தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்தல் நல்லது. இது ஒரு நடுத்தரமான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் : 1
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை :
கிழக்கு
பரிகாரம் : சூரியநமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.
மிதுனம் :
புதன் நன்மை தரும் கிரஹமாகும். அரசியல் வாதிகள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. வீடு, மற்றும் நகைகள் மூலம் புதிய கடன் வாங்குவீர்கள். பங்காளிகளிடம் எச்சரிக்கை தேவை. உடம்பில் இரத்தம், மற்றும் இதயம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். ஸ்டேஷனரி ஷாப் மற்றும் தபால், தந்தித் துறையினர் லாபம் அடைவார்கள்.பிள்ளைகளால் மன நிம்மதி இல்லை. உறவுகள் பலப்படும் காலமாகும். இரும்பு, இயந்திரம், எண்ணை வியாபாரம் செய்வோர்கள் நற்பலன் அடைவார்கள். தொலைத் தூரப்பயணம் விலக்கவும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் புதிய பிரச்சனைகள் உருவாகும். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் : 5
இராசியான நிறம் : பச்சை
இராசியான திசை : வடக்கு
பரிகாரம் : மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.
கடகம் :
சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். பொருளாதார நெருக்கடி உண்டாகும். கடன் தொல்லைகள் நெருக்கடி ஏற்படுத்தும். நண்பர் ஒருவர் உதவியால் புதிய கடன் வாங்குவீர்கள். தெய்வீகப் பணிகளில் மிகுந்த அக்கரையுடன் செயல்படுவீர்கள். கண்களில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு சுமாராக இருச்கும். குடும்பத்தில் மன அமைதி உண்டாகும். நண்பர்களால் மன உற்சாகம் குறையும். காதல் விஷயங்களில் வெற்றி தேடித் தரும். புதிய தொழில் ஆரம்பம் செய்வதைத் தள்ளிப் போடவும். உறவினர் வரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தீர்த்த யாத்திரை சென்று வரக்கூடிய வாய்ப்புள்ளது. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் : 6
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை : தென்கிழக்கு
பரிகாரம் : மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.
சிம்மம் :
வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். காண்டடிராக்ட், தரகு தொழில் செய்வோர்கள் லாபம் அடைவர். உடம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். மனைவியால் பொருள் வரவு உண்டு. தீராத வியாதிகளுக்கு நல்ல மருத்துவர் மூலம் விடை காணுவீர்கள். பொதுநலத் தொண்டுகளில் மனமுவந்து பணியாற்றுவீர்கள். கோர்ட் வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். புதிய தொழில் ஒன்றை ஆரம்பம் செய்யத் திட்டமிடுவீர்கள். செல்வந்தர்களால் ஆதாயம் உண்டு. விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடரலாம். கலைஞர்களுக்குப் பரிசுகள், மற்றும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்;
இராசியான எண் : 3
இராசியான நிறம் : மஞ்சள்
இராசியான திசை : வடகிழக்கு
பரிகாரம் : சிவ வழிபாடு செய்து வரவும்
கன்னி :
கன்னி ராசி
அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். கலைஞர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். உத்தியோகத் துறையினருக்கு சில இடையூறுகள் வந்து விலகும். செய்தொழிலில் லாபம் உண்டாகும். தென் திசையிலிருந்து பொருள் வரவு உண்டு. நண்பர்களால் ஆதாயம் இல்லை. புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். தூரப்பயணம் தள்ளிப் போடவும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் நற்பலன் கிடைக்கும். வராத கடன் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். அடுத்தவருக்காக ஜாமின் போட்டு பிரச்சனைகளை விலைக்கு வாங்க வேண்டாம். உடம்பில் நரம்பு, எலும்பு சம்பந்தமான பிணிகள் வந்து தீரும். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் : 2
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை : மேற்கு
பரிகாரம் : அம்மன் வழிபாடு செய்து வரவும்.
துலாம் :
துலா ராசி
அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். தீடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ், லாட்டரி மூலம் தனம் வர வாய்ப்புள்ளது. உடம்பில் வாய், பற்கள் சம்பந்தமான தொல்லைகள் வந்து நீங்கும். வீடு மாற்றம் உண்டாகும். உத்தியோகம் செய்பவர்களுக்கு இட மாற்றம் அல்லது பதவி உயர்வு ஏற்படும். கலைஞர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. காதல் விஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். உறவினர் வரவால் பொருட் செலவு உண்டாகும். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் : 5
இராசியான நிறம் : பச்சை
இராசியான திசை : வடக்கு
பரிகாரம் : மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி
அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும்.. உப்பு வியாபாரம், நீர்வளத்துறை சார்ந்தாவர்கள், மற்றும் கூல்டிரிங்;ஸ் வியாபாரிகள் நற்பலன் அடையக்கூடிய காலமாகும். வங்கிகளிலிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும். சினிமா, மற்றும் நாடகத் துறையினர்கள் கவனமுடன் செயல்படவும். தாய்க்கு உடல் நிலை பாதிக்கும். தந்தை வழிச் சொத்துக்கள், மற்றும் வர வேண்டிய பணம் கைவந்து சேரும். பொதுநலத் தொண்டு நிறுவனத்தவர் நற்பலன் அடைவார்கள். சுபகாரிய நிகழ்ச்சிகளுக்காகப் பொருட் செலவு உண்டாகும். மன அமைதிக்காக ஆலய வழிபாடு செய்தல் நன்று. இது ஒரு நடுத்தரமான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் : 2
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை : மேற்கு
பரிகாரம் : அம்மன் வழிபாடு செய்து வரவும்.
தனுசு :
தனுசு ராசி
அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். விவசாயம் நன்றாகப் பலிதமாகும். உறவினர்கள் உதவியால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள் கம்ப்யூட்டர், இணையதளம், தொலைக்காட்சி நடத்துவோர்கள் லாபம் அடைவர்கள். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகலாம். தந்தைக்கு உடல்நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கூட்டுத்தொழிலில் பிரச்சனகைள் மூலம் பிரிவு ஏற்படக்கூடிய காலமாகும். தேவையற்ற மனசஞ்சலம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லது. பூர்வீகச் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில சச்சரவுகள் வந்து நீங்கும். சகோதர சகோதரிக்குள் மனக் கசப்பு ஏற்படலாம். இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.
இராசியான எண் : 8
இராசியான நிறம் : நீலம்
இராசியான திசை :
மேற்கு
பரிகாரம் : அம்மன் வழிபாடு செய்து வரவும்.
மகரம் :
மகர ராசி
அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். வீடு, மற்றும் நகைகள் மூலம் புதிய கடன் வாங்குவீர்கள். பங்காளிகளிடம் எச்சரிக்கை தேவை உடம்பில் இரத்தம் மற்றும் இதயம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். ஸ்டேஷனரி ஷாப் மற்றும் தபால், தந்தித் துறையினர் லாபம் அடைவார்கள். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். போலீஸ், ராணுவத்துறை தீயணைப்புத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். திருமண காரியங்களில் தடை ஏற்படும். காதல் விஷயங்களில் கவனம் தேவை. புதிய தொழில்கள் ஆரம்பம் செய்யலாம். இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் : 9
இராசியான நிறம் : சிகப்பு
இராசியான திசை : தெற்கு
பரிகாரம் : முருகன் வழிபாடு செய்து வரவும்.
கும்பம் :
கும்ப ராசி
அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படலாம். பூ, பழம், நறுமணப் பொருள் வியாபாரிகள் நற்பலன் அடைவார்கள். பழைய வீட்டை திருத்திக் கட்ட வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வியில் நற்பலன் அடைவார்கள். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தள்ளிப் போடவும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டால் பிரச்சனைகள் வரலாம். எனவே முன் கோபம் தவிர்த்தல் நல்லது. ஆடம்பர அலங்காரப் பொருட்கள் வாங்குவதால் பணச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் மனநிம்மதி இல்லை. மாமன் வழியின் மூலம் புதிய பிரச்சனைகள் உருவாகும். இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் : 3
இராசியான நிறம் : மஞ்சள்
இராசியான திசை : வடகிழக்கு
பரிகாரம் : சிவ வழிபாடு செய்து வரவும்.
மீனம் :
மீன ராசி
அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். வீண் பொருள் விரையம் ஏற்படலாம். வண்டி, வாகனம், வைத்திருப்பவர்களுக்குப் புதிய பழுது பார்க்கும் செலவுகள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் வரும். புதிய வழக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அண்டை அயலார்களிடம் கவனமுடன் பழகி வரவும். தேவையான பணம் கிடைக்கும். முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து விலகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பெண்களால் ஆதாயம் உண்டாகும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிகள் நன்றாக இருக்கும். விளையாட்டுத்துறை சார்ந்தவர்களுக்கு பரிசும், பாராட்டுதலுகளும் கிடைக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண் : 1
இராசியான நிறம் : வெள்ளை
இராசியான திசை :
கிழக்கு
பரிகாரம் : சிவ வழிபாடு செய்து வரவும்.
*******