Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

இராசிபலன்கள்
(24-9-2007 முதல் 30-9-2007 வரை)
கணித்து எழுதியவர் : ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
Tamil Nadu, India. Phone for ISD: 0091-4633-243029, Cell: 98425-29691

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 331

24 செப்டம்பர் 2007


Astrology
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

 

மேஷம் :

மேஷ ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். பழைய வாகனங்களை மாற்றக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அச்சுத் தொழில், செய்திதாள்கள் வியாபாரிகள் இராணுவப்பணி புரிவோர்கள், எலக்டிரிக் சாதன வியாபாரிகள் ஆகியோர் நற்பலன் அடைவர். பிரச்சனைகள் வந்து நீங்கும். தொலைதூரப் பயணங்களால் பணவரவு உண்டு. சகோதர்களால் ஆதாயம் உண்டு. கலைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். வீடு மாற்றம் சிலருக்கு ஏற்படலாம். வாய், பல் சம்பந்தமான உபாதைகள், மற்றும் கண் சம்பந்தமான உபாதைகள் வர வாய்ப்புள்ளது. எடுத்த காரியத்தை மனைவிக்கு நோய்வாய்ப்படும். சிலருக்கு தொழில் மாற்றம் ஏற்படும்.

இராசியான எண்- 4
இராசியான நிறம்:- கருப்பு
இராசியான திசை:- வடமேற்கு
பரிகாரம்:- பிதுர் வழிபாடு செய்து வரவும்.

ரிஷபம் :

ரிஷப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். யாத்திரை மூலம் புதிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்ப்பட்டு அதனால் நன்மைகள் அடைவீர்கள். கூட்டுத் தொழில் ஆகாது. பெண்களால் ஆதாயம் உண்டு. கலைத்துறை, அலங்காரப் பொருட்கள், வாகனத் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவர். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை சிரமப்பட்டு சரி செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளைத் தள்ளிப் போடவும். புதிய ஆபரணச் சேர்க்கை உண்டாகும். காதுகளில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலக்ஷ்மி வழிபாடு செய்யவும்.

மிதுனம் :

மிதுன ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். எதிர்பாராத தன வரவு உண்டாகும். உடம்பில் நீர் சம்பந்தமான உபாதைகள் தலைவலி, அலர்ஜி போன்றவை ஏற்படும். செங்கல், மணல், கல், காண்டிராக்ட் தொழில்கள் செய்வோர்கள், நாடகத் துறையைச் சார்ந்தவர்கள் லாபம் பெறுவர். பங்காளிகளால் ஆதாயம் இல்லை. திருமண காரியங்களில் தடை ஏற்படும். பிள்ளைகளுடன் பிரச்சனைகள் உருவாகும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். பதவி உயர்வு ஏற்படும். குல தெய்வ வழிபாடு செய்து வரவும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.

கடகம் :

கடக ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். உடம்பில் நரம்பு சம்பந்தமான பிணிகள், வாயுத் தொல்லைகள் வந்து விலகும். எழுத்துத் தொழில், தரகுத் தொழில், பேராசிரியேர்கள், வங்கித் தொழில், இளைய தளங்கள், பொதுத் தொண்டு நிறுவனங்கள் நடத்துவோர்கள் லாபம் அடைவர். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு மணமாகும் காலமாகும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். செய்தொழிலை விட்டுப் புதிய தொழில் தொடங்குவீர்கள். தொலைதூரப் பயணங்கள் மூலம் வெற்றி அடைய வாய்ப்புள்ளது.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து சிகப்பு வஸ்திரம் தானம் செய்யவும்.

சிம்மம் :

சிம்ம ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும்;. கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி தேடித்தரும். குடல் சம்பந்தமான உபாதைகள், மூட்டு, முழங்கால் வலிகள் வந்து நீங்கும். வங்கித்தொழில், பைனான்ஸ் தொழில் செய்வோர்கள், ஷேர்மார்க்கெட், எழுதுபொருள் வியாபாரிகள் லாபம் அடைவார்கள். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. தந்தை மகன் உறவில் சிற்சில பிரச்சனைகள் வந்து நீங்கும். காதல் வெற்றியளிக்கும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திருமணத்தடை நீங்கி திருமணமாகின்ற காலமாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வெள்ளை வஸ்திரம் தானம்; செய்யவும்.

கன்னி :

கன்னி ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். நண்பர்களிடம் கவனம் தேவை. உடம்பில் உஷ்ண சம்பந்தமான பீடைகள், வயிற்று உபாதைகள் வந்து போகும். இராணுவம், போலீஸ் போன்ற அரசுத்துறைகளில் பணியாற்றுவோர்கள், ஹோட்டல் போன்ற நெருப்புத் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். கணவன் மனைவி உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படும். மனனைவிக்கு மருத்துவச் செலவுகள் மேலோங்கும். குடும்பச் சொத்துக்கள் விற்க வாய்ப்புள்ளது. அரசியல் வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும். புதிய கட்டிடம் அல்லது வீடு வாங்குவதில் கடன்கள் ஏற்படும்.
.
இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு, அம்மன் வழிபாடு செய்து வரவும்.

துலாம் :

துலா ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். உடம்பில் மேகம் உஷ்ண சம்பந்தமான பிடைகள் உண்டாகும். கட்டில் மெத்தை போன்ற ஆடம்பர அலங்காரம் பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள் கலைத்துறையைச் சார்ந்தவர்கள், கலைக் கல்லுரி நடத்துபவர்கள் பெண்களுக்கான விடுதிகள் நடத்துவோர்கள், சினிமா கலைஞர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். பிரச்சனைகள் வந்து நீங்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். புதிய ஆடைகள், அணிகலன்கள் வாங்குவதால் பொருட்செலவு உண்டாகும். உத்தியோகத்தில் இடையூறுகள், புதவியிறக்கம் ஏற்படும். வீட்டைத் திருத்திக் கட்டுவதில் கவனம் செலுத்துவீர்கள். காதல் விஷயங்களில் கவனமுடனிருக்கவும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து நீல வஸ்திரம் தானம் செய்யவும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும. பொருளாதாரப் பிரச்சனைகள் தீர்ந்து நல்ல பணப்புழக்கம் உண்டாக வாய்ப்புள்ளது. உடம்பில் மூளை, தலை சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். நறுமணப் பொருட்கள், கம்ப்யூட்டர் சாதன வியாபாரிகள், ஆலயப் பணி புரிவோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். தாய் வழிச் சொந்தங்கள் மூலம் லாபம் அடைவீர்கள். பிள்ளைகளுக்குத் திருமணத்தடை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்கள் நற்பலன் அடைவார்கள். தந்தை மகன் உறவு நன்றாக இருக்கும்.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை: கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வஸ்திரம் தானம் செய்யவும்.

தனுசு :

தநுசு ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். தொலைதூரப் பயணங்கள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். உடம்பில் எலும்பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். இரும்பு, இயந்திர சம்பந்தமாகிய தொழில், மருத்துவத்தில் நரம்பியல் சம்பந்தமான மருத்துவர்கள், அரசு ஊழியம் செய்வோர்கள், எண்ணை வியாபாரிகள் லாபம் அடைவர். குடும்பத்தில் காரணமில்லாது இருந்து வந்த சிற்சில பிரச்சனைகள் குறைய வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். புதிய வீடு, கார் வாங்க வாய்ப்புக்கள் உள்ளன. அரசு சம்பந்தமான கடன் கிடைக்க வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து மஞ்சள் வஸ்திரம் தானம் செய்யவும்

மகரம் :

மகர ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். உடம்பில் இரத்த சம்பந்தமான நோய்கள், இதயநோய்கள் வர வாய்ப்புள்ளது. திரவ சம்பந்தமான பொருள் வியாபாரம் செய்வோர்கள், அச்சுத் தொழில் செய்வோர்கள், கலைக் கூடங்கள் நடத்துவோர்கள், இன்ஜினியரிங் கல்லூரிகளில் பணிபுரிவோர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். திடீர் தன வரவு ஏற்படும். நண்பர்கள் மற்றும் பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும். செய் தொழிலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகனங்கள் மூலம் விபத்துகள் வந்து விலகும். செய்யாத குற்றங்களுக்காக மாட்டிக் கொள்வீர்கள.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வரவும்.

கும்பம் :

கும்ப ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். கமிஷன் தொழில், கெமிக்கல் ஃபேக்டரி, காய்கறி போன்ற பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள், பழைய பொருள் வியாபாரம் செய்வோர்கள் லாபம் அடைவார்கள். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். பூமி, நிலம் சம்பந்தமான காரிய முயற்சிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அரசு சம்பந்தமான வழக்கு விவகாரங்களில் வெற்றி அடைவர். சகோதர்களால் அநுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், செல்வாக்கு கூடும். எதிரிகளால் இருந்து வந்த மறைமுகத் தொல்லைகள் நீங்கும்.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- நவக்ரஹ வழிபாடு செய்யவும்.

மீனம் :

மீன ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். பங்காளிகளுக்குள் வில்லங்கம் வர வாய்ப்புண்டு. மாமிசம், முட்டை, மீன் போன்ற உணவுப் பொருள் வியாபாரிகள், புழைய பேப்பர், பொருள் வியாபாரிகள், இரசாயனத் தொழில் செய்வோர்கள், அனாதை ஆஸ்ரமம் நடத்துவோர்கள் நல்ல லாபம் அடைவர். புதிய கடன்கள் வாங்குவீர்கள். கொடுத்த கடன்கள் திரும்பக் கிடைக்காது. வீடு மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சில பிரச்சனைகள் வர உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்ககவும். மாணவர்களுக்குக் கல்வியில் தடைகள் வர உள்ளது. உடம்பில் கண், வாய் சம்பந்தமான பிணிகளால் தொல்லை அடைவர். கூட்டுத் தொழில் லாபம் தராது.
.
இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- தக்ஷிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

*******

           
New Page 1

 மேலும் பல.....