மேஷம் :
மேஷ ராசி
அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். செய்தொழிலில்
நல்ல லாபம் தரும் காலமாகும். காதல் வெற்றியளிக்கும்.
நித்திரை பங்கம் ஏற்படும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப்
போடவும். உடம்பில் எலும்பு, இரத்தம் சம்பந்தமான பிணிகள் வர
வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளால் சிற்சில பொருட் செலவுகள்
உண்டாகும். உடம்பில் உஷ்ண சம்பந்தமான பிணிகள், இதய நோய்கள்
வந்து விலகும். நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், ஹோட்டல்
தொழில்கள், மின்சாரப் பணி செய்பவர்கள், தீயணைப்புத்
துறையினர் ஆகியோர்கள் லாபம் அடைவர். கூட்டுத் தொழில்
செய்வதற்கான புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுதல் நல்லது.
இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு, ஆஞ்சனேயர் வழிபாடு செய்து
பாசிப்பயிறு தானம் செய்யவும்.
ரிஷபம் :
ரிஷப ராசி
அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும்.
மாணவர்களுக்குக் கல்வியில் பரிசுகள் கிடைக்கும். புதிய ஆடை,
அணிகலன்கள் வாங்குவீர்கள். புதிய வீடு மாற்றம் ஏற்படும்.
செய்தொழில் கவனம் தேவை. யாத்திரையை விலக்கவும். உத்தியோகம்
பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, மற்றும் மேலதிகாரிகளின்
ஆதரவு உண்டாகும். நண்பர்களாலும், உறவினர்களாலும் ஆதாயம்
உண்டு. புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். புதிய வீடு
கட்டக் கூடிய காலமாகும். குடும்பத்தில் பிரச்சனைகள் வர
வாய்ப்பு உள்ளது. பொருளாதார நெருக்கடி ஏற்படும்.
.
இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழககு, மேற்கு
பரிகாரம்:- மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து மொச்சை தானம்
செய்யவும்.
மிதுனம் :
மிதுன ராசி
அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். பணப்புழக்கம்
தொடர்பாகச் சிறிது நெருக்கடி வந்து விலகும். வீடு, நிலம்
போன்றவைகளில் மாற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள்
கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளுக்கு மருத்துவச்
செலவுகள் ஏற்படும். கோர்ட் வழக்கு விவகாரங்களில்
வெற்றியடைவீர்கள். உடம்பில் சுவாச சம்பந்தமான கோளாறுகள்,
அலர்ஜி போன்ற நோய்கள், சளித் தொல்லைகள் ஏற்படும். உடம்பில்
கண், பல் சம்பந்த வியாதிகள், நரம்புத் தளர்ச்சி,
மனோவியாதிகள் வர வாய்ப்பு உள்ளது. நீண்ட தூரப் பயணங்கள்
வெற்றியளிக்காது. காதல் விஷயங்களில் கவனம் தேவை. மனைவிக்கு
நோய்வாய்ப்படும். மாணவர்கள், கலைத்துறையினர்
எச்சரிக்கையுடன் இருக்கவும்.
இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்யவும்.
கடகம் :
கடக ராசி
அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். பொருளாதாரம்
நன்றாக இருக்கும். சகோதர்களால் ஆதாயம் உண்டாகும்.
பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட்டலும் அவர்களால் ஆதாயம்
உண்டாகும். கண்டங்கள் வந்து நீங்கும்.
திருமணமாகாதவர்களுக்குத் திருமண காரியம் நிறைவேறும். கணவன்
மனைவி உறவு நன்றாக இருக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும்.
குடும்பத்தில் வீண் சலசலப்புகள் வந்து நீங்கும்.
எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும். அரசுத் துறையின் மூலம்
உதவிகள் கிடைக்கும். நீண்டதூர யாத்திரைகள் மூலம் நற்பலன்
ஏற்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் ஏற்படும்.
இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்யவும்.
சிம்மம் :
சிம்ம ராசி
அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். உடம்பில் மூளை,
நரம்பு, முதுகு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.
இரசாயனத் தொழில், வட்டித் தொழில், கண்ஸ்டிரக்ஷன்ஸ்,
காண்டிராக்ட், கமிசன் தொழில் செய்வோர்கள், மீன், முட்டை,
மாமிச உணவு வியாபாரிகள் லாபமடைவர். குடும்பத்தில்
பிரச்சனைகள் வந்து நீங்கும். உத்தியோகத் துறையினர்
எச்சரிக்கையுடன் செயல்படுவது நன்று. சகோதரர்களால் ஆதாயம்
உண்டாகும். புதிய வீடு, நிலம் வாங்குவது சம்பந்தமான
முயற்சிகளிள் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள்
சேர்க்கையைத் தவிர்ப்பது நல்லது.
இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென் மேற்கு
பரிகாரம்:- அம்மன், சாஸ்தா, ஆஞ்சனேயர் வழிபாடு செய்து எள்
தானம் செய்யவும்.
கன்னி :
கன்னி ராசி
அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். தெற்கு
திசையிலிருந்து பெண்களால் நன்மை அடைவீர்கள். பங்காளிகளிடம்
எச்சரிக்கையாக இருக்கவும். உடம்பில் மேகம், மற்றும் வாயு
சம்பந்தமான பீடைகள் வந்து நீங்கும். கட்டிட சம்பந்தமான கல்,
மணல், சிமிண்ட், செங்கல் வியாபாரிகள், சினிமாத் துறையைச்
சார்ந்தவர்கள், கார் போன்ற வாகனத் தொழில் செய்வோர்கள் லாபம்
அடைவர். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கை விட்டுப்
போன பெருள் திரும்பிக் கை வந்து சேரும். யாத்திரைகளில்
கவனமுடன் சென்று வருதல் நல்லது.
இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென் மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு செய்து எள் தானம் செய்யவும்.
துலாம் :
துலா ராசி
அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். வீட்டைத்
திருத்திக் கட்டுவதற்கு முயற்சி செய்வீர்கள். எதிரிகளின்
தொல்லைகள் தீரும். கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
செய்தொழிலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். காதல்
விஷயங்களில் வெற்றி தேடித் தரக் கூடிய காலம். உடம்பில்
வயிறு, மூலம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். பூ, பழம்
போன்ற வியாபாரிகள், ஆலயப் பணி செய்வோர்கள்; வக்கீல்கள்,
நீதிபதிகள், பேராசிரியர்கள், மற்றும் ஷேர் மார்க்கெட், ஃபைனான்ஸ்
தொழில் நடத்துவோர்களுக்கு நற்பலன் உண்டாகும். கணவன் மனைவி
உறவு நன்றாக இருக்கும். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும்.
இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு.
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்யவும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி
அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். குடும்பத்தில்
அமைதி ஏற்படும். பொருளாதாரம் சீராக இருக்கும். புதிய வீடு,
நிலம், கார் போன்றவை வாங்குவீர்கள். நண்பர்கள் மற்றும்
பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு
மணமாகின்ற காலமாகும். பூர்வீகச் சொத்துக்கள் விற்பதில் பணம்
கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் தொடங்குவதைத்
தள்ளிப் போடவும். இரும்பு, இயந்திர சம்பந்தமான தொழில்கள்,
எண்ணை வியாபாரம் செய்வோர், பலசரக்குத் தொழில் வியாபாரம்
செய்வோர் லாபம் அடைவர். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்யவும்.
தனுசு :
தனுசு ராசி
அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும் கணவன் மனைவி
உறவு சுமாராக இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு
உத்தியோக உயர்வு மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும்.
உடம்பில் உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள், நரம்பு சம்பந்தமான
பிணிகள் வந்து நீங்கும். இனிப்புப் பொருட்கள் வியாபாரம்
நடத்துவோர்கள், கோயிலில் பணிபுரிவோர்கள்,
பேராசிரியர்களுக்கு நற்பலன் தரும் காலமாகும். கணவன் மனைவி
உறவு சுமாராக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களால்
ஆதாயம் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த
பிரச்சனைகள் நீங்கி நல்லதொரு தீர்வு கிடைக்கும்.
இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து மொச்சை தானம்
செய்யவும்.
மகரம் :
மகர ராசி
அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். திருமணம் போன்ற
சுபகாரியங்கள் நடக்கும். தூரத்து யாத்திரை மேற்கொள்வீர்கள்.
உடம்பில் மேகம் சம்பந்தமான பிணிகள், அஜீரண சம்பந்தமான
பீடைகள் வந்து விலகும். நெருப்பு சம்பந்தபட்ட தொழில்கள்,
இராணுவத் தொழில், போலீஸ் துறையைச் சார்ந்தவர்கள் நற்பலன்
அடைவார்கள். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து
விலகும். கலைத்துறையினர்களும், அரசியல்வாதிகளும் லாபம்
அடைவர். காதல் விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உறவினர்
வரவால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். சம்பந்தம் இல்லாத
நபர்களால் பொருள் வரவு உண்டாகும்.
இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம்
செய்யவும்.
கும்பம் :
கும்ப ராசி
அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். பொருளாதார
நெருக்கடி உண்டாகும். பிள்ளைகளால் பொருட் செலவுகள் உண்டு.
பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். பங்குத்
தொழிலில் நட்டத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கலில் நாணயம்
காப்பாற்ற இயலாது. உடம்பில் சளி சமபந்தப்பட்ட உபாதைகள்
ஏற்படும். புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடுதல் நல்லது.
உடம்பில் வாயு, மற்றும் வயிற்று உபாதைகள் வந்து நீங்கும்..
எழுத்துப் பணி செய்வோர்கள், வங்கிப் பணியாளார்கள், காய்கறி
வியாபாரிகள் லாபமடைவர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பணப் புழக்கம் நன்றாக இருக்கும்.
இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து பச்சரிசி தானம் செய்யவும்.
மீனம் :
மீன ராசி
அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். தனப் புழக்கம்
நன்றாக இருக்கும். வங்கிகளால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு நற்பெயர்,
புகழ் உண்டாகும். பிள்ளைகளுக்குத் திருமண காரியங்கள்
நிறைவேறும். தாய் தந்தையர்க்குச் சிற்சில பிரச்சனைகள் வந்து
விலகும். உடம்பில் நரம்பு, மற்றும உணவுக்குழல் சம்பந்தமான
பீடைகள் உண்டாகும். வாகனத் தொழில்கள், ஆடம்பர அலங்காரப்
பொருட்கள், இனிப்புப் பொருள் வியாபாரிகள், நாடகக் கலைஞர்கள்,
இவர்களுக்கு நற்பலன் உண்டாகும்.
இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து கோதுமை தானம் செய்யவும்.
*******