Home  
இதழ் 334

அக்டோபர் 15 2007

www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Home >>Astrology

இராசிபலன்கள்
(15-10-2007 முதல் 21-10-2007 வரை)
கணித்து எழுதியவர் : ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M
Tamil Nadu, India. Phone for ISD: 0091-4633-243029, Cell: 98425-29691

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

பனிரெண்டு ராசிகளுக்கான வார பலன்கள் உரிய பரிகாரங்களுடன்


 

 

மேஷம்:-

மேஷ ராசி அன்பர்களே, சந்திரன் நன்மை தரும் கிரஹமாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். புதிய ஆடை, அணிகலன்கள் வாங்குவீர்கள். புதிய நிலம் சம்பந்தமான பேச்சுக்களைத் தள்ளிப் போடவும். பூர்வீகச் சொத்துகள் சம்பந்தமான நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவுக்கு வரும். உடம்பில் தலை, மற்றும் முகம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். நெருப்பு, மின்சாரங்களில் கவனம் தேவை. கார், லாரி போன்ற வாகனத் தொழிற்சாலை நடத்துவோர்கள், இவற்றில் பணி புரிவோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். தாய் மகன் உறவில் சில பிரச்சனைகள் உருவாகலாம். சுபகாரியச் செலவுகள் உண்டாகும்.

இராசியான எண்:- 2
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- மேற்கு
பரிகாரம்:- அம்மன் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம்:-

ரிஷப ராசி அன்பர்களே, சூரியன் நன்மை தரும் கிரஹமாகும். நண்பரின் சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள். வாய், மற்றும் பல் சம்மந்தமான உபாதைகள் வந்து போகும். கூட்டுத் தொழில் ஆரம்பம் செய்யப் பண உதவிகள் கிடைக்கும். தாய் வழிச் சொந்தங்களுடன் சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. புதிய வீடு சம்பந்தமான காரியங்களைச் சற்றுத் தள்ளிப் போடுதல் நல்லது. கட்டிட சம்மந்தமான கல், மணல், மண், செங்கல் வியாபாரிகள் மற்றும் அறநிலையத் துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். பிள்ளைகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். பொதுக் காரியங்கள் சம்பந்தமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறக் கூடிய வாய்ப்புள்ளது.

இராசியான எண்:- 1
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- கிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.


மிதுனம்:-

மிதுன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் தரும். உடம்பில் நரம்பு, மற்றும் இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். தொலை தூரப்பயணங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விபரீத எண்ணங்களால் காவல் துறை தண்டனைக்கு ஆளாக நேரிடும். வீட்டைப் பழுதுபார்த்துக் கட்டுவீர்கள். வுழக்கு விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். வீடு, நிலம் சம்பந்தமான அரசுக் கடன், மற்றும் உதவித் தொகைகள் கிடைக்கச் சற்று காலதாமதமாகலாம். மூத்த சகோதர்களால் லாபம் உண்டு.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

கடகம்:-

கடக ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். புதிய விளை நிலங்கள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. உடம்பில் வயிறு, மற்றும் சுரம் சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்துவருதல் நல்லது. தந்தையின் உடல் நிலையில் சில பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். வட்டித்தொழில், தங்கம், வெள்ளி போன்ற நகை வியாபாரிகள், நீர்வளத்துறை சார்ந்தவர்கள், மருத்துவர்கள் லாபம் அடைவார்கள். வேலையாட்களால் மனநிம்மதி உண்டாகும்.

இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்கு
பரிகாரம்:- மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.


சிம்மம்:-

சிம்ம ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். வீட்டுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங்குவதில் பொருட் செலவு உண்டாகும். அடுத்தவர் விஷயத்தில் அக்கறை எடுத்து அவமானப்பட நேரிடலாம். எச்சரிக்கை தேவை. கைவிட்டுப் போன பொருள் சம்பந்தமில்லாத நபர்களால் வீடு வந்து சேரும். தடைப்பட்ட கட்டிட வேலைகள் நடைபெறும். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள், சினிமா, நாடகத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். எதிர்பார்த்த பணம் கை வந்து சேரும். அனாதைச் சிறுவர்களுக்கு உதவுவதால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.


கன்னி:-

கன்னி ராசி அன்பர்களே, வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். பிற மதத்தவரால் ஆதாயம் உண்டாகும். தேசியத் தொண்டுகளில் பிரியமுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். உடம்பில் இதயம் மற்றும் இரத்தத் தொடர் பிணிகள் வராதவாறு கவனிக்கவும். திருமண காரியங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது. தண்ணீர், கூல்டிரிங்ஸ், மற்றும் பழ வியாபாரிகள், கணிதத்துறை சார்ந்த அறிஞர்கள், தபால், தந்தித் துறையினர் லாபம் அடைவார்கள். தந்தை வழிச் சொத்துக்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நற்பெயர் எடுப்பார்கள். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்படவும். யாத்திரைகளை விலக்குதல் நல்லது. திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் கிடைக்கும்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


துலாம்:-

துலா ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். பொருளாதார விஷயங்களில் மன நிம்மதி உண்டாகும். கோர்ட் வழக்குகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். உத்தியோகத் துறையினர்கள் லாபம் அடைவார்கள். புதிய தொழில் ஆரம்பம் செய்வதைத் தள்ளிப் போடவும். கண், மற்றும் காதுகளில் நோய் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். விபரிதமான எண்ணங்களை விட்டொழித்து, காரியத்தில் கண்ணாயிருங்கள். மனைவி வழி தன வரவு உண்டாகும். பிள்ளைகளால் சிறிது மன நிம்மதி உண்டு. சகோதரர் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். மருத்துவத்துறை சார்ந்த மருத்துவர்கள், மருந்து வியாபாரிகள், ஜவுளி நூல், வியாபாரிகள் நற்பலன் அடைவர். 

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம்:-

விருச்சிக ராசி அன்பர்களே, சனி நன்மை தரும் கிரஹமாகும். பொருளாதார நெருக்கடி வந்து விலகும். மற்றவர்களுக்கு உதவுவதில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். தேவையற்ற காரியங்களைத் தவிர்த்தல் நல்லது. உறவினர் வரவால் பண வரவு உண்டாகும். நெருப்பு, ராணுவம், போலீஸ் துறை சார்ந்தவர்கள், இனையதளத்தவர்கள் நற்பலன் அடைவார்கள். உடம்பில் நரம்பு, வாயு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். தீர்த்தயாத்திரை சென்று வருவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் உண்டாகக் கூடிய காலமாகும். கமிஷன் தொழில் செய்வோர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. விட்டுப்போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது.

இராசியான எண்:- 8
இராசியான நிறம்:- நீலம்
இராசியான திசை:- தென்மேற்கு
பரிகாரம்:- ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.


தனுசு:-

தனுசு ராசி அன்பர்களே, உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரஹமாகும். நண்பர்களால் உதவிகள் ஏதும் இல்லை. வீண் மருத்துவச் செலவுகள் உண்டாகும். தாய்க்கு உடல் நிலையில் கவனம் தேவை. நாட்பட்ட நோய்க்குப் புதிய மருத்துவர்களின் உதவியால் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் சிற்சில சச்சரவுகள் வந்து நீங்கும். சுபகாரிய நிகழ்ச்சிகளாக வெளியூர்ப் பயணம் உண்டாகும். குல தெய்வ ஆலயப் பணிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. தந்தை மகன் உறவில் கவனமுடன் செயல்படவும். பொதுநலத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்வீர்கள். காய்கறி, பூ, பழம், இலை, கீரை சம்பந்தமான தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள்.

இராசியான எண்:- 3
இராசியான நிறம்:- மஞ்சள்
இராசியான திசை:- வடகிழக்கு
பரிகாரம்:- சிவ வழிபாடு செய்து வரவும்.


மகரம்:-

மகர ராசி அன்பர்களே, செவ்வாய் நன்மை தரும் கிரஹமாகும். வீட்டைத் திருத்திக் கட்டுவிர்கள். அரசியல்வாதிகள் ஆதாயம் அடைவார்கள். கலைத்துறையினருக்குப் பரிசு, மற்றும் பாராட்டுகளுடன் புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். கோர்ட் வழக்கு விஷயங்களில் நல்ல தீர்ப்பை எதிர்பார்க்கலாம். வீட்டில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும். உத்தியோகத் துறையினர் எச்சரிக்கையுடன் பணியை மாற்றவும். அண்டை அயல் வீட்டுக்காரருடன் சச்சரவுகள் வந்து விலகும். மணமாகாதவர்களுக்குப் புதிய தொடர்புகள் மூலம் பெண் கிடைக்க வாய்ப்புள்ளது. காணமற் போன பொருள் திரும்பக் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

இராசியான எண்:- 9
இராசியான நிறம்:- சிகப்பு
இராசியான திசை:- தெற்கு
பரிகாரம்:- முருகன் வழிபாடு செய்து வரவும்.


கும்பம்:-

கும்ப ராசி அன்பர்களே, சுக்கிரன் நன்மை தரும் கிரஹமாகும். சமுதாயத்தில் நற்பெயர், புகழ் உண்டாகும். பங்காளிகளுடன் பிரச்சனைகள் உருவாகும். செய்தொழிலில் கவனம் தேவை. யாத்திரைகளில் சுமாரான நற்பலன் கிடைக்கும். காதல் விஷயங்களில் வெற்றி உண்டாகும். தென்திசையிலிருந்து பொருள் வரவு உண்டாகும். ரேஸ், லாட்டரிகளில் பணம் கிடைக்கும் எனக் கருதி ஏமாற வேண்டாம். விட்டுப்போன பழைய ஆலயங்கள், மற்றும் வீடுகளைப் புதுப்பித்துக் கட்டுவீர்கள். கடன் கொடுத்த பணம் திரும்பி வரச் சற்றுக் கால தாமதமாகும். புதிய கடன் கொடுப்பதைத் தள்ளிப் போடவும். வங்கிகளால் ஆதாயம் இல்லை.


இராசியான எண்:- 6
இராசியான நிறம்:- வெள்ளை
இராசியான திசை:- தென்கிழக்;கு
பரிகாரம்:- மஹாலக்ஷ்மி வழிபாடு செய்து வரவும்.


மீனம்:-

மீன ராசி அன்பர்களே, புதன் நன்மை தரும் கிரஹமாகும்.. யாத்திரையில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். வங்கிக்கடன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பிள்ளைகளால் தனவரவு உண்டாகும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். வாகனங்களினால் சிறிய கண்டங்கள் வந்து விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. கடல் யாத்திரைகள் வெற்றி தேடித் தரும். மாமன் வழி சில உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உடம்பில் மூலம், முதுகு வலி சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.

இராசியான எண்:- 5
இராசியான நிறம்:- பச்சை
இராசியான திசை:- வடக்கு
பரிகாரம்:- மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.



மேலும் பல..... 


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

Gurukula
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide