|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
|
|
சிறையில் புகை
சஞ்சய் தத் சிறையில் புகைபிடிக்கத் தாராளமாக அனுமதி உண்டாம்.
அவர் மட்டுமல்ல சிறையில் கைதிகள் புகைபிடிக்கத் தடை
ஏதுமில்லையாம். வீட்டில் புகை பிடிப்பதென்றால் கூட மனைவியிடம்
அனுமதி கேட்கவேண்டும் எனச் சொல்லும் அன்புமணி சற்று இதனை
கவனிப்பாரா? கைதிகளைச் செம்மைப்படுத்தத்தான் சிறைச்சாலை
என்றால் அங்கு புகை பிடிப்பது போன்ற பகையான விஷயங்கள் எதற்கு?
காதுல பூ
ரூபாய் நோட்டுத் தேவை என்றால் வங்கிக்கோ ஏ.டி.எம்-மிற்கோ
செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது தவறு.
உத்தரப்பிரதேசத்தில் ஒரு சாமியார் பூவை எடுத்துக்கொடுத்தால்
அது ரூபாய் நோட்டாக மாறுகிறதாம். அவரவர் அதிர்ஷ்டத்தைப்
பொறுத்து பத்து ரூபாய், நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் என்று. இனி
ரிசர்வ் வங்கி, நாசிக் ப்ரெஸ் எல்லாம் எதற்கு?
இன்னுமொரு இறகு
பிரிட்டனில் மிகப்பெரிய விருதான சார்லஸ் விருது திரு.அப்துல்
கலாமிற்கு அவரது விஞ்ஞானத்திற்கான சேவையைப் பாராட்டி
வழங்கப்படுகிறதாம். அப்துல் கலாமின் தொப்பியில் இன்னுமொரு
இறகு.
சபாஷ் சானியா
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா சமீப காலமாகத் தனது அபாரத்
திறமையின் மூலம் முன்னணி வீராங்கணைகளை வீழ்த்தி முப்பதாவது
இடத்தைப் பிடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்
டென்ன்னிஸில் நம்பர் ஒன்னாகத் திகழ்ந்த மார்டினா ஹிஞ்சசை
வென்று, மேலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் சானியா.
இதுவரை இந்த அளவுக்கு எந்த இந்திய வீரரும் முன்னேறியதில்லை.
இதற்கு முன்னால் 134-ம் இடத்தைப்பிடித்த இந்தியப் பெண்
வீராங்கனை வி.நிருபமாதான்
இந்த வாரம் படித்தது
கடற்கரையோரமாக ஒரு சிறுவன் சிறுவீடு கட்டி விளையாடிக்
கொண்டிருந்தான். அப்போது ஒரு ராக்ஷச அலை வீசியது. அதனுடன்
ஏராளமான "குஞ்சு குஞ்சு" மீன்கள் கரையில் வந்து விழுந்தன.
உயிருக்குத் தத்தளித்துக் கொண்டிருந்த அவற்றை சிறுவன் தன்
விளையாட்டை விட்டுவிட்டு, ஒவ்வொன்றாக எடுத்துக் கடலுக்குள்
சேர்த்துக் கொண்டிருந்தான். அதனை அருகிலிருந்து ஒரு
ஜோல்னாப்பை, குர்த்தா பைஜாமா, சோடா பாட்டில் கண்ணாடி, வாராத
தலை சகிதமாக அறிவு ஜீவி கவனித்துக் கொண்டிருந்தார். அவர்
சிறுவனைப் பார்த்துச் சிரித்தபடியே கேட்டார், "தம்பி! நீ
எத்தனை மீனை இப்படி உள்ளே எடுத்து விட முடியும்?" பையன்
கருமமே கண்ணாகத் தலையைக் கூடத் திருப்பாமல் பதில் சொன்னான்,
ஒன்றோ இரண்டோ, நான் எடுத்து விடும் மீனுக்கு உயிர்
கிடைக்கிறது அல்லவா? அது போதாதா?"
சிரிக்கலாமே!
ATMஐ
வைத்து!
சென்னையில் இப்படி ஒரு வேடிக்கை நடந்திருக்கிறது. அவருக்கு
ATM-ல்
பணம் எடுக்க வேண்டும். கோடம்பாக்கம் வந்திருக்கிறார். அருகே
எங்கே
ATM Centre
இருக்கிறது? வங்கி கொடுத்த விலாசத்துக்கு ஃபோன் செய்து
கேட்டிருக்கிறார். 'கோடம்பாக்கம் அருகில் எங்கே
ATM Centre
இருக்கிறது?' கிடைத்த பதில் அவரை அதிர வைத்தது.
"Kodambakkam?
Which part of India it is in?"
என்ன? எல்லாம்
B.P.O
மூலம்
Out
Processing
செய்வதுதான் காரணம்!
"அவரை ஏன் கைது செய்து அழைத்துக் கொண்டு போகிறார்கள்?"
"விசிட்டிங் கார்டைப் போட்டு
ATMல்
பணம் எடுக்கப் பார்த்தாராம். அதற்காகத்தான்!"
சைபர் குற்றங்கள்
SMSல்
பாசச் செய்தி அனுப்பினால்தான் குற்றம் என்பது இல்லை. ஐஸ்வர்யா
ராய் படத்தை அனுப்பினாலும் சைபர் குற்றாம்தானாம்.
பெங்களூருவில் சைபர் குற்றம் பற்றிய பயிற்சி நிலையம் ஒன்றின்
இயக்குனர் சொல்லியிருக்கிறார். டெல்லி பாராளுமன்றத்தைத்
தகர்க்கச் செய்த முயற்சியில் சங்கேதமாக ஐஸ்வர்யா ராய்
படம்தான் பயன்படுத்தப்பட்டதாம்.
"கனம் நீதிபதி அவர்களே! கைதி சைபர் குற்றம் செய்திருக்கிறார்.
அவருக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்".
"பார்த்தீர்களா! நீதிபதி அவர்களே! நான் ஒரு குற்றமும்
செய்யவில்லை என்று சொல்லி விட்டு, தண்டனையும் வழங்கும்படி
சொல்கிறாரே! அநியாயம்!"
******* |
|
|
|
|
New Page 1
|
|
மேலும்
பல.....
|
|
|
|
|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
Best viewed @ 1024x768
resolution |
|
tamil magazines,
Hindu devotional songs,
tamil links,
tamil movies,
tamil songs,
tamil dvd,
tamil news,
tamil,
tamil comedy,
tamil movie,
tamil music DVDs,
bharatanatyam,
Yoga DVDs,
carnatic music,
tamil cinema,
sivaji movie,
cricket world cup,
tamil ebooks,
web design,
web design resources
|
|
Privacy Policy|Terms of use|Disclaimer|
Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide | |
|