Home  
இதழ் 334

அக்டோபர் 15 2007

www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Home >>News

செய்திகள் அலசல்
- ஜ.ப.ர

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 2020ல் இந்தியா வல்லரசாக வேண்டுமென்ற ஆசை பலித்துவிட்டது. 20/20 கோப்பையில் இந்தியாதானே உலக சாம்பியன்.


கண்டுபிடித்த கடிதங்கள்


ஹிட்லருக்குப் பொதுமக்களும் அவரது ரசிகர்கள், அவரது யூத எதிர்ப்புக் கொள்கையை ஆதரித்தவர்கள் ஆகியவரிடமிருந்து 1925 முதல் 1945 வரை வந்த கடிதங்கள் இப்போது புத்தக வடிவில் ப்ரான்க்பர்டில் நடக்கும் புத்தக சந்தையில் வெளியிடப்படுகின்றன.

இந்தக் கடித ஆவணங்கள் மாஸ்கோவில் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. இரண்டாவது உலகப்போர் முடிவில் ஜெர்மனி சோவியத் வசம் விழுந்ததும் இந்தக் கடிதங்கள் அவர்களால் கைப்பற்றப் பட்டிருக்க வேண்டும். பல ரசிகர்கள் அவருக்குத் தேன், ஸ்வஸ்திக் சின்னம் பதித்த வயலின், கள், எம்ப்ராய்டரி செய்த கைக்குட்டை, ஆகியவற்றை அனுப்பி இருக்கிறார்கள். புதிய தேசிய கீதங்களையும் எழுதி அனுப்பி இருக்கிறார்கள். ஒரே ஒரு யூத வணிகர் மட்டும் மிக உருக்கமாக "என்னுடைய வாடிக்கையாளர்கள் எல்லோருமே ஓடிவிட்டர்கள். நான் அலையினால் அடிக்கப்பட்டு விட்டதுபோல் இருக்கிறேன். எனக்குத் தங்களின் ஆதரவைத் தந்து வாழவிட்டால் ஆயிரம் நன்றி சொல்வேன்" என்று எழுதியிருக்கிறார்.


கறுப்பு Vs காக்கி


சென்னை உயர்நீதி மன்றத்தில் 2006ம் ஆண்டின் புள்ளிவிவரப்படி 4,06,958 வழக்குகள் தேங்கி நிற்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு அவர்களுடைய பிரச்னைகளுக்குக் கிடைக்க வேண்டிய நீதி தாமதிக்கப்பட்டு மக்கள் அவதியுறுகிறார்கள். ஆனால் வழக்குகளை நடத்த வேண்டிய பொறுப்புள்ள வழக்கறிஞர்களுக்கு இது பற்றியெல்லாம் கவலையில்லை.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சென்னை நீதிமன்றங்கள் வழக்கறிஞர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்துப் போயிருக்கின்றன. காரணம் காவல் துறையினருக்கும் ஒரு வழக்கறிஞருக்கும் சென்னை மருத்துவமனையில் நடந்த வாக்கு வாதம் முற்றி, காக்கிச் சாட்டையினர் கறுப்புக் கோட்டினர் மீது கைவைத்து விட்டார்கள் என்பதுதான். காவல் துறையினர் மீது நடந்த விசாரணையில் (விசாரிக்கமலேயே) தங்கள் மீது ஒரு தவறும் இல்லை என்று காவல் துறை ஆணையர் அறிக்கை விட்டது வழக்கறிஞர்களின் கோபம்.

காவல் துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் எப்போதுமே ஒரு சுமுகமான உறவு இருந்ததில்லை. ஆனால் நியாயத்திற்காக வாதாடுகிற வழக்கறிஞர்களாகட்டும், அல்லது நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவர்களாகட்டும், இத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டு மக்களை அவதிக்கு உள்ளாக்குவது பொறுப்புள்ள செயலாகுமா?


வெற்றி மகள் முத்தமிட்டாள்


அவர்கள் 12 பேரும் ஒரிஸ்ஸாவிலுள்ள மலை ஜாதியைச் சேர்ந்தவர்கள். இன்று அவர்கள்தான் 14 வயதுக்குட்பட்டோருக்கான ரக்பி பந்தயத்தில் உலக சாம்பியன் கோப்பையைத் தட்டி வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு தகுந்த பயிற்சி கொடுத்து அனுப்பிய  KISS (Kalinga Institue Of Social Sciences) எனும் நிறுவனம் போட்டி நடக்கும் லண்டனுக்கு இந்தக் குழுவை அனுப்பும்
போது 'ஒரு அனுபவமாக இருக்கட்டுமே' என்றுதான் நினைத்தது. அவர்கள் கொடுக்கப் போவது ஆனந்த அதிர்ச்சி என்று அப்போது தெரியவில்லை. சிங்கம், கொரில்லா என்றெல்லாம் பலம் வாய்ந்த அணிகளுக்கிடையே நமது அணிக்குப் பெயர் காட்டுக் காகங்கள். ஜாம்பியா, கென்யா, ருமேனியா ஆகிய நாடுகளைத் துவம்சம் செய்த பிறகு இறுதிப் போட்டியில் சிங்கமாக கர்ஜித்து நின்ற தென் ஆப்பிரிக்க அணியை வென்றபோது ரக்பி விளையாட்டிலேயே ஊறிப்போன மற்ற அணிகள் நம்பமுடியாமல் திகைத்தன. இந்த வெற்றி இந்தியாவே பின்னால் நின்று பல கோடி ரூபாய்கள் செலவில் சென்று வென்ற கிரிக்கெட் அணியின் வெற்றியைப் போன்றதல்ல. எங்கோ ஒரு மூலையில் பிறந்து வளர்ந்த படிப்பறிவில்லாத காட்டுக் காகங்களின் வெற்றி. இந்த வெற்றி பற்றி நம்மவர்களில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? எவ்வளவு பத்திரிகைகள் இந்த வெற்றியை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும்? யானையின் மீது ஊர்வலம் அழைத்துப் பாராட்ட வேண்டிய மகத்தான வெற்றியல்லவா இது?


விருது


பொது நிர்வாகம், கல்வி நிர்வாகம், ஆகியவற்றுக்காக அளிக்கப்படும் லால்பகதூர் சாஸ்திரி தேசிய விருது எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்திற்கான அவரது ஆராய்ச்சிகளுக்கும், பங்கேற்பிற்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.


மங்கையராய்ப் பிறந்திட


1000 ஆண்களுக்கு 827 பெண்கள் என்ற அளவிற்கு பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இப்போது ஸ்கேன் போன்ற நவீன தொழில் நுட்ப உதவிகளுடன் கருவிலேயெ பெண் குழந்தையைச் சிதைப்பது பிரச்னைகளின் புதிய பரிமாணம். இதுபற்றிப் பேசிய மத்திய சமூக நல வாரியத்தின் தலைவி ரஜினிபாட்டில் பெண் கரு பாதுக்காப்பு குறித்து நடந்த ஒரு கருத்தரங்கில் கவலை தெரிவித்தார். பெண் சிசுக் கொலைக்கு எதிராக ஏற்கெனவே இருக்கும் சட்டங்கள் வெறும் ஏட்டளவில் நின்றுவிடாமல் கண்டிப்புடன் நடைமுறைப் படுத்துவது அவசியம்.


"பீரா"ய்ச்சி


இந்தியாவில் மதுபான நுகர்வு ஒரு புதிய எல்லையைத் தொட்டிருக்கிறது. தமிழகம் தேசிய அளவில் தனது இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. முதலிடப் பெருமை ஆந்திராவிற்கு. தமிழ் நாட்டுக் குடி மக்களுக்கு பீர்தான் முக்கியமான பானம். 2004-2005ல் 89.01 லட்சம் பெட்டிகள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. 2006-2007ல் 177.33 லட்சம் பெட்டிகள் என்று உயர்ந்திருக்கிறது.

வாழ்க்கை முறைகள் மாறி வருவதும், குடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதும், குடிப்பதற்கான சமூக அங்கீகாரப் பார்வை அதிகமாகி வருவதும் இந்த நிலைமைக்குக் காரணங்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

(செய்தி ஆதாரம்: இந்தியா டுடே)


திருத்தப்பட்ட தீர்ப்புக்கள்


நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்களின்படி கொலை வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் மரண வாக்கு மூலங்கள் முக்கிய சாட்சியாக ஏற்றுக்கொள்ளபட்டு வருகின்றன. மரணத்தறுவாயில் இருக்கும் மனிதன் பொய் கூற மாட்டான் என்ற நம்பிககையிலிருந்து வந்தது இந்த சட்டம்.

ஆனால் இதை எதிர்த்துப் பல முறை நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப் பட்டிருக்கின்றன. மரண வாயிலில் இருப்பவர் தெளிவில்லாமல் இருப்பதனால் அதைச் சாதகமாகக் கொண்டு அவர்களைச் சார்ந்தவர்கள் சொல்லிக் கொடுப்பதை வாக்கு மூலமாகத் தரக்கூடும் என்ற சந்தேகங்களின் அடிப்படையில் இதை எதிர்த்துப் பல முறை நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன.

இப்போது உச்ச நீதி மன்றம் "மரண வாக்கு மூலத்தை மட்டுமே அடிப்படையாக வைத்துக்கொண்டு தண்டனை அளிப்பது பாதுகாப்பான முறையல்ல" என்று தீர்ப்பளித்துள்ளது.


மியாட்டின் மனித நேயம்


சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனை ஏழைக் குழந்தைக்களுக்கு இலவச இதய அறுவை செய்வதற்கென ஒரு அறக்கட்டளையைத் துவங்கி இருக்கிறது. அண்மையில் நடத்திய ஒரு மருத்துவ முகாமில் 300 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை அவசியமென தெரிந்து இலவச அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது.


தாலாட்டு


ஜெயா டி.வி.யில் பிரபல பாடகி அருணா சாய்ராமின் பேட்டியின்போது சொன்ன சுவையான நிகழ்ச்சி. அல்ஜீரியாவில் கச்சேரி நடத்தும்போது ஒரு நிகழ்ச்சியில் அங்குள்ள பாடகி அரேபிய மொழியில் தாலாட்டுப்பாட, அதைத் தொடர்ந்து அருணாவும் தமிழில் தாலாட்டுப் பாடினார். இரண்டு பாடல்களையும் நிகழ்ச்சியில் பாடிக்காட்டினார். அதிலிருந்து தெரிந்த விஷயம் அவர் சொன்னபடி அல்ஜீரியா, அமெரிக்கா, இந்தியா என்று எந்த நாட்டில் பாடினாலும் சரி, அம்மாக்களின் தாலாட்டுக்கள் ஒரே மாதிரியாகத்தான் அமைகின்றன


ஒரு எஸ்.எம்.எஸ் கடி


முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 2020ல் இந்தியா வல்லரசாக வேண்டுமென்ற ஆசை பலித்துவிட்டது. 20/20 கோப்பையில் இந்தியாதானே உலக சாம்பியன்.


மேலும் பல......


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

Gurukula
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide