Home  
இதழ் 335

அக்டோபர் 22 2007

www.guruji.com

Search

 

Nilacharal Web

Search in English

Help
 

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Home >>Current News

செய்திகள் அலசல்
- ஜ.ப.ர

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

'கார் வசதி உள்ளவர்கள் கூட நடக்கக்கூடிய இடங்களுக்கு நடையில் செல்வது போலப் பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாமே


வயிற்றுக்கு சோறிட வேணும்

அக்டோபர் 17ம் தேதி ஏழ்மை ஒழிப்பு தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உங்களுக்குத் தெரியுமா? பசியும் ஏழ்மையும்தான் உலகில் ஒவ்வொரு மூன்று விநாடிக்கும் ஒரு குழந்தையின் மரணத்துக்குக் காரணமாக அமைகின்றன. வறுமை காரணமாகப் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் உலகில் 12 கோடிக்குமேல். உலகநாடுகள் ராணுவ தளவாடங்கள் வாங்கும் செலவில் ஒரு சதவிகிதத்தை ஒதுக்கினால் உலகிலுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வசதி அளிக்க முடியுமாம். வளராத 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகில் முதல் முன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பைவிடக் குறைவு. உலகப் பணக்காரர்களில் 20 சதவிகிதம்பேர் உலகின் மொத்த வளங்களில் 86 சதவிகிதத்தைக் கைப்பற்றியுள்ளார்கள், 80 சதவிகித மக்களுக்குக் கிடைப்பதும் பாக்கியுள்ள 14 சதவிகிதம்தான்.

ஏழ்மைதான் ஊழலுக்கு வழிவகிக்கிறது - ஏழ்மை அதிகமுள்ள நாடுகளில்தான் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றன. (நன்றி - தின மலர்)

ஏதோ காதலர் தினம், அன்னையர் தினம்போல ஏழ்மை ஒழிப்பை ஒரு தினமாகக் கொண்டாடக் கூடாது - தினமுமே ஏழ்மை ஒழிப்பாக இருக்க வேண்டும்.

ஏழ்மை ஒழிப்பு என்பது சத்துணவு கொடுப்பதோ, இலவச துணிமணிகள் கொடுத்து மக்களைச் சோம்பேறி ஆக்குவதோ அல்ல. எல்லாத் தரப்பு ஏழைகளுக்கும் வேலைவாய்ப்பு கொடுத்து அவர்கள் சுய கவுரவுத்துடன் அடிப்படை வசதிகளை மட்டுமாவது பெற்று வாழ வழி செய்வதுதான். இலவச டி.வி.யும் காஸ் அடுப்பும் விளம்பரமாக இருக்கலாமே தவிர யாருக்கும் வயிற்றை நிறைக்காது.

உலக உணவு தினத்தன்று ஒரு செமினாரில் பேசிய ரேகா ஷெட்டி கூறுகிறார், "சத்துணவு மையம் ஒன்றில் கொடுக்கப்படும் உணவின் தரத்தை ஒரு முறை நேரில் பார்த்தபோது நான் பயந்து போனேன். அடிப்படை சுகாதார வசதிகள் கூட கடைப்பிடிக்கப் படவில்லை. சில சந்தர்ப்பங்க்ளில் மாணவர்களும் ஆடுமாடுகளும் கூட ஒரே தட்டிலிருந்து சாப்பிடுகின்றன(ர்)" என்று.

ஆடுமாடுகள் கோபித்துக் கொள்ளாமிலிருந்தால் சரி!

ஆணாதிக்கம் மிகுந்த இந்த சமூகத்தில் ஒரு ஏழை ஊனமுற்ற ரிஷி தொழிளாளி தனது மனைவியைப் பட்டப்படிப்புப் படிக்க வைக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்திலுள்ள சர்ஜு என்ற இவர் மனைவி பள்ளி இறுதிப் படிப்பு வரை படித்தவர். மேலே படிக்கத் தன் ஆர்வத்தைத் தெரிவித்தபோது இவர் பல அரசு அலுவகங்களுக்கு அலைந்து பயனில்லாமல் தானே கூடுதல் நேரம் ரிக்ஷா ஒட்டி இன்டர்மீடியட் படிக்கவைத்துள்ளார். மனைவி சுசீலா முதல் மாணவியாகத் தேற இப்போது பட்டப் படிப்பிற்குத் தயாராகிவருகிறார்.

நச்சென்று சொன்ன நல்ல விஷயங்கள்!

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சமீபத்தில் பேசிய கிரண் பேடி நிர்வாகத் துறை மாணவிகளுக்குப் பின்வரும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

1) நீங்கள் தேர்ந்தெடுத்த துறை எதுவானாலும் அதில் புதுமையைப் புகுத்த முயற்சி செய்யுங்கள்.
2) தேச நலனுக்குப் பாடு படுங்கள்.
3) பெற்றோரைக் கவனியுங்கள்.
4) சம்பாதிக்கும் பணத்தை உபயோகமாக செலவு செய்யுங்கள்.

வாழ்வாங்கு வாழ்வதற்கான அறிவுரை கேப்ஸ்யூல்!

சற்றே இளைத்து விடும், பிள்ளாய்!

உடல் பருமனாக இருப்பது புகைபிடிப்பதைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். சோம்பேறித்தனத்தால், அவசரத்தினால் விரைவு உணவு விடுதிகளில் சாப்பிடுவதும், அடிக்கடி நொறுக்குத் தின்பண்டங்கள் சாப்பிடுவதும் உடல் பருமானவதற்குக் காரணமாகி ஆயுளில் 13 ஆண்டுகளைக் குறைத்துவிடுகிறதாம். பிரிட்டனின் முதன்மை அறிவியல் ஆலோசகர் டேவிட் கிங்கும் அவரது குழுவும் நடத்திய ஆய்வில் நமது அவசரகதி வாழ்க்கை முறைகளில் மாற்றம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். 'கார் வசதி உள்ளவர்கள் கூட நடக்கக்கூடிய இடங்களுக்கு நடையில் செல்வது போலப் பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாமே' என்கிறார் டேவிட் கிங்! ('காலையில் காரில் தினம் பீச்சில் வாக்கிங் தவறாமல் போய்விட்டு வருகிறேன்' என்பவர்கள் கவனிக்க).

தலை(ப்பாகை) தப்பியது

அமெரிக்காவிற்கு வரும் சீக்கியப் பயணிகளை தலைப்பாகையை நீக்கச்சொல்லி சோதனை நடத்துவதை தவிர்க்கும் வகையில் விமான நிலையப் பாதுகாப்பு விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. தலைப்பாகையைக் கழற்றுவது தங்களுக்கு மத, மருத்துவ ரீதியாக பாதிப்பு ஏற்படுத்துகிறது என்ற சீக்கிய மதத்தினரின் கோரிக்கையை அமெரிக்கப் பாதுகாப்பு நிர்வாகம் ஏற்றுகொண்டு விதிமுறைகளைத் தளர்த்தியிருக்கிறது.

பரிசு

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஆனி என்ரைட்டுக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. 'தி கேதரிங்' என்ற நூலுக்கான இந்தப்பரிசு இலக்கியத்திற்கான மிக உயரிய பரிசு. இந்தப் பரிசு இந்தியாவைச் சேர்ந்த இந்திரா சின்ஹாவிற்குக்க் கிடைக்கும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. (கோப்பைக்கும் உதட்டிற்கும் இடையில் ஏற்படும் நழுவலா இது?)

தலை நிமிர்ந்து நில்லடா!

தமிழ்நாடு மயிலாடுதுறையைச் சேர்ந்த 30 வயதான கிருஷ்ணராஜ் ராஜலிங்கம் molecular biologistஆக ஜெர்மனியின் Wuerzburg Universityயில் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஜெர்மானிய அரசாங்கம் 1.3 மில்லியன் யுரோக்கள் விருதாக வழங்கியிருக்கிறது. அறிவியல் ஆராய்ச்சிகளில் சாதனை செய்துவரும் இளைஞர்களுக்கு ஜெர்மனிய அரசாங்கம் இந்த விருதுப் பரிசினை வழங்கி வருகிறது. இந்தத்தொகை அவர்கள் ஈடுபட்டுள்ள அறிவியல் துறைகளில் மேலும் ஆய்வு செய்வதற்கு உதவி செய்கிறது. ராஜலிங்கம் தனது ஆராய்ச்சியை cell death என்ற புதிய துறையில் ஒரு ஆய்வுக்கூடம் அமைத்துத் துவங்கவிருக்கிறார். அயல் நாடுகளில் நம்மவர்கள் பெயரும் புகழம் பெற்று விருதுகள் பெறுவது நம்மைத் தலை நிமிர்ந்து நடக்கச் செய்கிறது

இதுவும் வேணும், இதுக்கு மேலயும் வேணும்!

பள்ளிகளில் மாணவர்கள் செல் போன் உபயோகிக்கத் தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள தடை வரவேற்கத் தக்கதே. செல்போனின் பயன்பாடுகளை எல்லாம் அடுக்கி இதெல்லாம் இல்லாமல் போகிறதே என்று புலம்புவதில் அர்த்தமில்லை. படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை என்ன என்று புரிந்து கொண்டால் இது எத்தனை நல்ல விஷயம் என்று விளங்கும். ஆசிரியர்களுக்கும், கல்லூரிகளுக்கும் இந்தத் தடை கட்டாயமாக அமல் படுத்தப் பட வேண்டும். இதற்கும் மேலாக ஒன்று சொல்லுவோம். காமிரா செல்போன்கள், விற்பதும் வைத்திருப்பதும் தடை செய்யப்பட வேண்டும். காரணங்களை விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. 'இதை நடைமுறைப் படுத்த முடியாது; ஏ.கே.47 புழக்கத்தையே தடுக்க முடியவில்லையே" என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

மேலும் பல......

YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

Gurukula
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide