Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

செய்திகள் அலசல்
-
ஜ.ப.ர.

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 336

29 அக்டோபர் 2007


Astrology
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

சபாஷ், சரியான தீர்ப்பு
இந்து மதத் திருமணங்கள் மட்டுமின்றி மற்ற எல்லா மதத்திருமணங்களும் கட்டாயப்பதிவு செய்யப்பட வேண்டுமென்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. சில மாநிலங்களில் இந்து மதத் திருமணங்கள் மட்டுமே கட்டாயப் பதிவு செய்யப்பட வேண்டுமென்ற சட்டம் இருக்கிறது.

திருமணத்தை முறையாகப் பதிவு செய்யாத காரணத்தால் (மண விலக்கு போன்ற சமயங்களில்) சட்ட சிக்கல்கள் ஏற்படுவதால் பல பெண்கள் அமைப்புக்கள் செய்த முறையீட்டின் மீது உச்ச நீதி மன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த உத்தரவை அமுல் படுத்த மூன்று மாத கெடு வழங்கியிருக்கிறது உச்ச நீதி மன்றம்.
அவசரத்தில் சட்டப்பதிவின்றி மணம்புரிந்து கொண்டு சாவகாசமாக பின்பு வருந்தும் பெண்களுக்கு இந்தத் தீர்ப்பு கை கொடுக்கும்

கோடிகள் பெறும் குரான்
13 ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்குரான் ரூ.9.28 கோடிக்கும், 10ம் நூற்றாண்டு திருக்குரான் 7.33 கோடிக்கும் ஏலம் விடபட்டு சாதனை புரிந்திருப்பதாக லணடனைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது. 13 ம்நூற்றாண்டு குரான் தங்கக் கரைசலில் எழுதப்பட்டதாம் இந்த அமைப்பின் சார்பில் இதுவரை நடந்த ஏலத்திலேயே இந்த திருக் குரான்கள் தான் மிக அதிகமான விலைக்கு ஏலம் போயிருக்கின்றனவாம்

கலைஞர் காவியம்
கலைஞர் காவியம் என்ற தலைப்பில் வாலி எழுதிய கலைஞரின் வாழ்க்கை வரலாறு வாலியின் குரலிலேயே திரு சங்கரா என்பவரது இசையில் ஒலிப்பேழைகளில் வெளியிடப்படுகிறது. கவிஞர் வாலி இது பற்றிச் சொல்லும்போது, " எனக்கு உடல் நிலை சரியில்லாததால் சரியாகப் பேசமுடியாவிட்டாலும் இந்தப் பேழை உருவாக்கத்தின்போது ஒரு தெய்வீக சக்தி என்னை அறியாமல் இயக்கியது" என்று கூறுகிறார். கலைஞர் காவியத்திற்குக் குரல் கொடுக்க தெய்வீக சக்தியா? இயற்கையின் சக்தி என்றல்லவா சொல்லவேண்டும்? இந்த ஒலிப்பேழைக்கு சோ முன்னுரை வழங்கியிருக்கிறாராம். சோவிடம் ஏதோ மாறுதல் ஏற்படுவதுபோல் தோன்றுகிறதோ?

“செஸ்”வநாதன் ஆனந்திற்கு விருது!
இரண்டாவது முறையாக உலக செஸ் சாம்பியன் கோப்பையை வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு சென்னையில் சாரட் வண்டியில் ஊர்வலம் வைத்தப் பாராட்டு நடந்தது. அதோடு தமிழக முதல்வர் 25 லட்சத்திற்குக் காசோலையையும் வழங்கியிருக்கிறார்.
கிரிக்கெட்டைத் தவிர மற்ற பந்தயங்களும் இருக்கின்றன என்பதை நம்மவர்கள் உணர்ந்தால் போதும்!

30க்கு 45
நூற்றுக்கு நூறு கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் 30க்கு 45 மார்க் வாங்கியிருப்பதைப் பற்றி தெரியுமா? ஒரிஸ்ஸா மாநிலத்தில் போலீஸ் உதவி இன்ஸ்பெக்டருக்கான தேர்வை எழுதிய ராதேஷாம் மிஸ்ரா மிக அருமையாக எழுதியும் தேர்ந்தெடுக்கப்படாததால் தகவல் உரிமைச் சட்டத்தின்படி தன் விடைத்தாளைப் பெறறு சரிபார்த்தபோதுதான் தெரிந்தது அவருக்கு 30க்கு 45 மார்க்குகள் போட்டிருக்கிறார்கள் என்று. எப்படி இது நடந்தது? குழம்பி நிற்கிறார்கள் அதிகாரிகள்!

கவலை
12 வயதான சிறுமி மோஹினி நான்கு வீடுகளில் பாதிரங்கள் வீளக்கி, வீடு பெருக்கி சுத்தம் செய்து தன் சகோதர சகோதரிகள் பள்ளி செல்வதற்காக உழைத்து சம்பாதிக்கிறாள். ஆனால் இது ஒரு அதிசயமான செய்தி அல்ல. வீட்டு வேலைகளிலும், கடைகளிலும் சிற்றுண்டி விடுதிகளிலும் குழந்தை தொழிலாளர்களை வேலையில் அம்ர்த்துவதைத் தடை செய்யும் சட்டங்கள் நாடு முழுவதும் இருந்தாலும் கூட இன்னும் எந்த மாற்றமும் இல்லை. அங்கும் இங்குமாக எப்போதாவது தடையை மீறி குழந்தைகளை வேலையில் அமர்த்துபவர்களைப் பிடித்தாலும் கூட எந்த விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை . மீட்கப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்விற்கு வழியும் செய்யப்படுவதில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆய்வின் படி இந்தியா முழுவதும் 12 லட்சம் குழந்தை தொழிலாளிகள் இருக்கிறார்களாம்.

குழந்தைகளை தொழிலுக்கு அனுப்ப வேண்டிய அவசியத்தில் உள்ள பெற்றோர்களின் அடிப்படை வாழ்விற்கு வசதிகள் செய்யாத வரை, வேலையில் அமர்ந்துள்ள குழந்தைகளின் மறு வாழ்விற்கான வசதிகள் செய்யப்ப டாத வரை, வேலைக்கு அமர்த்துபவர்களிடம் ஒரு மன மாற்றம் வராத வரை சட்டங்கள் யாவும் ஏட்டுச் சுரைக்காயாகத்தான் இருக்கும்

களிப்பு
புது டில்லியில் உள்ள குடிமை சமூக மையம் என்ற அமைப்பு மிகவும் வறுமையில் உள்ள குடும்பங்களின் குழந்தைகள் அவர்கள் விரும்பும் பள்ளியில் பயில்வதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 350/- வழங்குகிறது. வறுமை காரணமாக தரமான பள்ளிக்கு அனுப்ப முடியாமல் வசதியற்ற பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஏழைக் குடுமபளுக்கு உதவுவதற்காகவே இந்த அமைப்பு செயல் பட்டு வருகிறது. குடும்பங்களுக்கு பணம் தருவதோடு மட்டும் நின்று விடாமல் இந்த மையம் பள்ளிகளுடன் பேசி குழந்தைகள் பள்ளி செல்வதற்கான போக்குவரத்து, சீருடை, ஆகியவற்றை இலவசமாகத் தர வழி வகுத்திருக்கிறது. இந்தத் திட்டத்தை ஒரிஸ்ஸா, உத்திரப் பிரதேசம் தமிழ்நாடு ஆகிய மாவட்டங்களில் நீட்டிக்க இந்த அமைப்பு உதேசித்திருக்கிறது.
(தகவல்: நன்றி- குடிமக்கள் முரசு)

நினைக்கத் தெரிந்த மனமே!
1950ம் ஆண்டு. அப்போது இந்தூர்
(indore) சமஸ்தான மகாராஜா தனக்கு தன் அமெரிக்க மனைவி மூலம் பிறந்த மகன் ரிச்சர்டை தன் வாரிசாக இந்தூர் சமஸ்தானத்தில் நியமிக்க உத்தேசித்தபோது ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத் ஆகியோர் பிடிவாதமாக வேற்று நாட்டின் மனைவிக்கு பிறந்தவர் ராஜாவிற்கு வாரிசாக முடியாது என்று மறுத்துவிட்டார்கள். அந்நிய ரத்தத்தினர் பெயரளவிற்கு ஒரு மகாராஜாவின் வாரிசாக இருப்பதைக் கூட அப்போது நேரு அனுமதிக்கவில்லையாம்!!!

குறுமடலில் வந்த குறும்பு
தினசரி கேலண்டரில் தேதி கிழிப்பது முக்கியமில்லை. அந்த தேதியில் நீ என்ன கிழித்தாய் என்பதுதான் முக்கியம்!

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide