இஞ்சி ஜூஸ்
தேவையான
பொருட்கள்:
இஞ்சி
– 200gms,
சர்க்கரை
– 400 gms,
புஷ் மஞ்சள் எஸ்ஸென்ஸ்
–
½ தேக்கரண்டி,
எலுமிச்சம்பழம்
–
6.
செய்முறை:
இஞ்சியை நன்றாகக் கழுவி , தோலைச் சீவி விட்டுத் துருவிக்
கொள்ளவும். அதை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
சர்க்கரையுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க
விடவும்.. சர்க்கரை நன்றாகக் கரைந்து கொதித்தவுடன் இஞ்சிச்
சாற்றை சேர்த்துக் கொதிக்கவிடவும். சற்றுக் குறுகியவுடன்
இறக்கி நன்றாக ஆற விடவும். நன்றாக ஆறிய பிறகு எலுமிச்சம்பழச்
சாற்றினையும், எஸ்ஸென்சையும் கலந்து வடிகட்டி ஒரு பாட்டிலில்
ஊற்றி வைத்துக் கொண்டால் அஜீரணத்திற்கு கண் கண்ட மருந்து.
*******
இஞ்சிப்பச்சடி
தேவையான
பொருட்கள்:
இஞ்சி
– 100 gms,
உருண்டை வெல்லம்
– 150gms,
மிளகாய் வற்றல்
– 5,
புளி
– தேவையான அளவு,
புளி, உப்பு
–
தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியை நன்கு கழுவித் தோலைச் சீவி விட்டுப் பொடியாக
நறுக்கிக்கொள்ளவும். சிறிது எண்ணெயை சூடாக்கி நன்றாக
வதக்கிக் கொள்ளவும். இஞ்சி வதங்கியதும் மிளகாய் வற்றலையும்
சேர்த்து வறுத்துக் கொள்ளவும். உடன் உப்பு ,புளி வைத்து
அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதுடன் வெல்லத்தையும்
சேர்த்து வாணலியில் போட்டு நன்றாகக் கிளறவும். வெல்லம்
நன்றாக இளகி இஞ்சியுடன் சேர்ந்து நன்றாகக் கொதித்த பிறகு
இறக்கவும்.
Disclaimer:
இப்பகுதியில் இடம் பெறும்
கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ
படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக்
கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பல்ல.
இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.
*******