பகலும் இரவும்
சந்தித்துக் கொள்ளும் மயக்கும் மாலை நேரம். நண்பர்களிடையே
பிரியத்தைத் தருவதும், அவர்கள் பிரியாமலிருக்கவும் காரணமான
சிரிப்பு, சான்பிரான்சிஸ்கோவின் திறந்தவெளிப் பூங்காவில்
கேட்டது. நாங்கள் 5 குடும்பங்கள் ஓரே அபார்ட்மென்டில்
வசிக்கிறோம். வெவ்வேறு மொழி, மாநிலம் என்றாலும், தாய்நாடு
இந்தியா என்பது எங்களை இணைத்தது. மாதமொரு முறை அருகிலுள்ள
பூங்காவில் அனைவரும் சந்தித்து அவரவர் மாநில உணவு வகைகளைப்
பகிர்ந்து மகிழ்தல் வழக்கம். போன வாரமும் அதேபோல்தான்
சந்தித்துக் கொண்டோம். இந்த முறை புதிதாக செல்வியும்
எங்களுடன் இணைந்திருந்தாள். ஆண்கள் ரம்மியிலும், பெண்கள்
பாட்டுக்குப் பாட்டிலும், குழந்தைகள் சறுக்குமரம், தூரியிலும்
மூழ்கியிருந்தனர்.
உணவருந்தும் வேளை வந்தது. வேலைப்பளுவில் இறுக்கிக் கொண்ட
இதயம் இளகவும், முறுக்கிக் கொண்ட மூளை விழிக்கவும் ஒருவரை
ஒருவர் கேலி செய்து சிரித்துக் கொண்டிருக்கையில் திடீரெனச்
செல்வி கீழே விழுந்தாள். அவளின் தட்டில் வைத்திருந்த
பன்னீரும், சப்பாத்தியும் கால்களில் கொட்ட, இடதுகால் ஒரு
பக்கம் கோண, கையில் வைத்திருந்த தட்டைக் கீழே போட்டாள்.
நானும், மற்றொரு தோழியும் உதவ சிறிது நேரம் அமர்ந்துவிட்டு
எழுந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு, வேறு தட்டில் உணவருந்தத்
தொடங்கினாள்.
எங்கள் கச்சேரியைத் தொடர்ந்தோம். இரவு 7 மணிக்கு அனைவரும்
பிரிந்தோம். 8 மணிக்குச் செல்வி மருத்துவமனையில்
இறந்துவிட்டதாகப் போன் மூலம் தகவல் வந்தது. மாலையில்
எங்களுடன் இருந்தபோது அவளைப் பக்கவாதம் (Stroke)
தாக்கியுள்ளது. நாங்கள் அவள் கீழே விழ, செல்வியின்
Shoes
காரணமென நினைக்கையில் இப்படியொரு தகவல். பக்கவாதம் வந்தவுடன்
செய்ய வேண்டிய முதலுதவிகளையும், வாதத்தைக் கண்டறியும்
வழிமுறைகளையும் நாங்கள் அறியாததே செல்வியின் இறப்பிற்குக்
காரணம். பக்கவாதத்தைக் கண்டறியும் வழிமுறைகளைப்
பட்டியலிட்டுள்ளேன். இதன் மூலம் ஒரே ஒரு உயிர்
காப்பாற்றப்பட்டாலும் மகிழ்ச்சியே!
மூன்றுவழிகளில் பக்கவாதத்தை அறியலாம்:
STR
S *Ask the individual to SMILE .
(சிரிக்கச் சொல்லுங்கள்)
T
*Ask the person to TALK , to SPEAK A SIMPLE SENTENCE
(Coherently: It is sunny out today.)
(ஏதேனும் சிறிய
வாக்கியங்களைப் பேசச் செய்யுங்கள்)
R
*Ask him or her to RAISE BOTH ARMS.
(இரண்டு கைகளையும்
மேலே உயர்த்தி கீழே விடச் சொல்லுங்கள்)
வாயைத் திறக்கச் சொல்லி நாக்கைப் பாருங்கள். ஏதேனும் ஒரு
பக்கம் இழுத்துக் கொண்டு இருக்கிறதா எனப் பாருங்கள்.
மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு
அழைத்துச் செல்லுங்கள். விலை மதிப்பற்ற மனித உயிர்
வினாடியில்கூட காக்கப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.
*******