Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

கதை
கவிதை
தொடர்
உள்முகம்
கைமணம்
கைமருந்து
சுவடுகள்
ஸ்பெஷல்ஸ்
பூஞ்சிட்டு
மாணவர் சோலை
தமிழாய்வு
நேர்காணல்
தமிழ் வளர்க்கும் அறிஞர்கள்
ஆன்மீகம்
சாதனையாளர்கள்
கடவுள் எழுதிய கதைககள்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

வினிகரின் விந்தைகள்
-
பிரேமா சுரேந்திரநாத்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 315

04 ஜூன் 2007


Khamas
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop


ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் தான் வசிக்கும் வீட்டை பிறர் பார்த்து வியந்து பாராட்டும் வண்ணம் துப்புரவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்னும் தணியாத ஆர்வம் இருக்கிறது. இம்முயற்சியில் பல நவீன சாதனங்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் வினிகரை பல வகையில் பயன்படுத்திப் பயன் பெறலாம் என்று பலருக்குத் தெரியாது.

1. ஒரு லிட்டர் தண்ணீரில் கால் கப் வினிகரைக் கலந்து ஜன்னல்களை நன்றாகத் துடைத்து விட்டு பிறகு செய்தித்தாள்களைக் கொண்டு துடைக்க அவை பளீரென்று மின்னும். வெள்ளை வினிகருடன் சரி பாதி தண்ணீரைக் கலந்து ஸ்பிரே பாட்டிலில் நிரப்பியும் இவ்வாறு துடைக்கலாம்.

2. 'வினைல்' தரையை வினிகர் கலந்த நீரினால் துடைக்கத் தரை புத்தம் புதியதாக மிளிரும்.

3. தரையில் கம்பளங்களைக் கொண்டு அலங்கரிக்கும் வீடுகளில் அவற்றின் மீது ஏற்படும் கறைகளை நீக்கவும் வினிகர் மிகவும் பயன்படும். ஸ்பிரே பாட்டில்கள் இரண்டை எடுத்துக் கொண்டு ஒன்றில் ஒரு பங்கு வெள்ளை வினிகருடன் ஏழு பங்கு தண்ணீரைக் கலந்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு புட்டியில் ஒரு பங்கு வெள்ளை அம்மோனியக் கரைசலுடன் ஏழு பங்கு நீரைக் கலந்து வைத்துக் கொள்ளவும். கம்பளத்தில் படிந்தக் கறையை வினிகர் கலந்த நீரால் நனைத்து சில நிமிடங்கள் கழித்து ஒரு சுத்தமான வெள்ளைத் துணியால் ஒற்றி எடுக்கவும். பிறகு அதன் மீது அம்மோனியக் கலவையைத் தடவி சில நிமிடங்கள் கழித்து வெள்ளைத் துணியினால் ஒற்றி எடுக்கவும். அக்கறை மறையும் வரை இவ்வாறு செய்யவும்.

4. கால் கப் வினிகருடன் வெந்நீரையும் சோப்புப் பவுடரையும் கலந்து கழுவித் துடைத்தால் கண்ணாடிப் பாத்திரங்கள், எவர் சில்வர் பாத்திரங்கள், காஸ் அடுப்பு போன்றவற்றுக்கு புது மெருகு கிடைக்கும்.

5. தோல் பொருட்களின் மீது படியும் நீர்க்கறைகளை வினிகரும், நீரும் கலந்து அழுத்தித் துடைப்பதன் மூலம் நீக்கலாம். கண்ணாடிக் கோப்பைகளிலிருந்து நாற்றத்தை நீக்க அவற்றை வினிகர் கலந்த நீரில் நனைத்து சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.

6. நாம் சமையல் செய்த பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்யும் தொட்டியைச் சுற்றி படிந்துள்ள உப்புக் கறைகளை வினிகரைக் கொண்டு நீக்க இயலும். காதி நாப்கினை வினிகரில் நனைத்து சுத்தப்படுத்த வேண்டிய பகுதிகளில் போடவும். சற்று நேரம் கழித்து சுத்தப்படுத்தவும்.

7. நீண்ட நாட்கள் கறை படிந்த தண்ணீர்க் குழாய்களின் மீது வினிகரில் நனைத்த சிறு துணிகளை சுற்றி ஒரு ரப்பர் பேண்ட் போட்டு விட்டு மறு நாள் காலையில் நீர் விட்டு கழுவினால் சுலபமாகக் கறைகளை நீக்கலாம்.

8. சம அளவுள்ள வெள்ளை வினிகரும், சுத்திகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு எண்ணையும் எடுத்துக் கொண்டு home made furniture polish ஆக உபயோகிக்கலாம். மரத்தால் செய்யப்பட்ட கட்டில், மேசை முதலியவற்றிற்கு மலிவாக பாலிஷ் செய்யலாம். ஒரு மிருதுவான துணியினால் மெருகேற்றலாம்.

9. நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப் பொருட்களை ஒரு பங்கு வெள்ளை வினிகருடன் பத்து பங்கு தண்ணீரைக் கலந்து துடைத்து புதுப் பொலிவு பெறச் செய்யயலாம். கடினமான கறைகளையும் எளிதில் நீக்கலாம்.

10. கண்ணாடி சன்னல்களில் தவறுதலாக விழுந்த வண்ணத்தை சற்று சூடு பண்ணிய வினிகரால் எளிதில் நீக்க இயலும்.

 

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide