தேவையான பொருட்கள்:
சித்தரத்தை – ஒரு துண்டு
அதி மதுரம் –
ஒரு துண்டு
அரிசி திப்பிலி – சிறிதளவு
சுக்கு – சிறிதளவு
ஜீரகம் – 2
tsp
மிளகு - 2
tsp
சின்ன வெங்காயம் – 1 கப்
பூண்டு – 8 பல்
காய்ந்த மிளகாய் –
4
புளி – சிறிய உருண்டை
எண்ணெய் ,உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு கடாயில் காய்ந்த மிளகாய் ,மிளகு,ஜீரகம்,
சித்தரத்தை,
அதி மதுரம், அரிசி திப்பிலி, சுக்கு ஆகியவற்றை
சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி விழுதாக்கிய பூண்டைச்
சேர்த்து வதக்கி ,நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் புளிக்கரைசலைச் சேர்த்து ,உப்பு போட்டு
கொதிக்க வைத்து வறுத்து இடித்த பொடியைப் போட்டு மூன்று
நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். சளிக்கும், உடல்
நலக்குறைவிற்கும் மிகவும் நல்லது.
*******