ராமனுக்கும் ராவணனுக்கும் போட்டி.
பஞ்சாபில் ராம நாடக சபா நடத்தும் ராமலீலா நாடகங்களில் கடந்த
35 ஆண்டுகளாக ராவணனாக நடித்து வரும் மோகன்லால் என்பவர்
பா.ஜ.க. கட்சி சார்பில் போட்டியிடுகிறார். கிருஷ்ண லீலா சபா
நடத்தும் ராமலீலா நாடகங்களில் ராமர் வேஷம் போட்டு நடிக்கும்
அசோக்குமார் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
இருவரும் ஒருரையருவர் தாக்கி சூடு பறக்கத் தேர்தல் பிரச்சரம்
செய்கிறார்கள். இந்த ராம ராவண யுத்தத்தில் யார் வெற்றி
பெறுவார் என்பது ஓட்டு எண்ணிகையில்தான் தெரியும்.
***
இருள் குகையின் கோடியில் ஒரு வெளிச்சக் கீற்று தெரிகிறது.
காவிரிக் குடும்பம் என்ற அமைப்பு, கர்நாடகா, தமிழ்நாடு இரு
மாநிலங்களிலும், காவிரியை நம்பி விவசாயம் நடத்துபவர்களைக்
கொண்டது. இவர்கள் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாக இருக்கும்
டிரிப்யூனல் தீர்ப்பை ஏற்றுக்கொள்வது என்று ஒரு மனதாகத்
தீர்மானித்துள்ளார்கள். டிரிப்யூனல், வழவழ என்று, தப்பிக்கும்
போக்கில் ஏதாவது இரண்டுங்கெட்டான் தீர்ப்பு தராமல் இருக்க
வேண்டும். அரசியல்வாதிகள் குட்டையை (அதாவது காவிரியைக்)
குழப்பாமல் இருக்க வேண்டும். ஸப்கோ ஸன்மதி தே பகவான்!
"நல்ல
சமயமடா, இதை நழுவ விடுவாயோ!"
சென்னை மாநகராட்சியின் 100 தொகுதிகளுக்கு அதிரடியாகத் தேர்தல்
தேதிகளை அறிவித்திருக்கிறது மாநிலத் தேர்தல் ஆணையம். ஃபிப்ரவரி
5ஆம் தேதிக்குள் கட்சிகளால் வேட்பாளர்கள் தேர்வு
செய்யப்படவேண்டிய கட்டாயம். ஒரு சமயத்தில் இந்தத் தேர்தல் ஒரு
வருடத்திற்குத் தள்ளி வைக்கப்படும். அதற்குள் மக்களும் கடந்த
முறை நடந்த வன்முறையை வழக்கம்போல மறந்துவிடுவார்கள் எனக்
கூறப்பட்டது. ஆனால் இப்போது திடீர் அறிவிப்பிற்குக் காரணம்?
முதலாவதாக அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அரசாங்க
ப்யூனிலிருந்து தேர்தல் கமிஷனர், போலீஸ் கமிஷனர், உள்துறை
அமைச்சர், முதல்வர் என்று அ முதல் ஃ வரை எல்லாரும் பதவி
விலகிய பிறகுதான் தேர்தல் நடத்த வேண்டும், இல்லையென்றால்
தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவிப்பு செய்திருக்கின்றன.
இந்த நிலையில் இப்போது அவர்களை திடீரென்று முடிவை
மாற்றிக்கொண்டு தேர்தலில் நிற்பது இயலாத காரியம். இருக்கும்
ஒரே எதிர்க்கட்சியான தே.மு.தி.க.விற்கும் கூடியவரை பிரச்சினை
கொடுத்தாயிற்று, அவராலும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியாது.
எனவே இப்போது தேர்தல் நடத்தினால் தங்கள் கட்சி அமோக வெற்றி
பெறும் என்ற மனக் கணக்குதான்.
இரண்டாவதாக மூன்றாவது நீதிபதியின் முடிவு வருவதற்குள்ளாக
தேர்தலை நடத்துவது உசிதம். எங்கே இந்த நீதிபதியும் அதே
தீர்ப்பை வழிமொழிந்தால் தேர்தல் ஆணையர் மற்றும் போலீஸ்
கமிஷனரை மாற்றவேண்டியது கட்டாயமாயிருக்கும். மக்களுக்கும்
தி.மு.க. மீது எதிர்ப்பு அலை வலுப்பெற்றிருக்கும்.
தங்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த மகத்தான வெற்றியென
அ.தி.மு.க.வும் பிரச்சாரம் செய்து அமோக வெற்றியை அடைய
சாதகமாகிவிடும் வாய்ப்பிருக்கிறது. இந்த சங்கடங்களைத்
தீர்க்கத்தான் சாணக்கியமான ஏற்பாடு என்று சொல்லப்படுகிறது.
ஆனால் அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் தங்கள்
பிடிவாதத்திலிருந்து வெளிவந்து இந்தத் தேர்தலை சந்திக்காதவரை
இந்த மறு தேர்தலுக்காக கோர்ட்டில் வாதாடியது வெறும்
கேலிக்கூத்தாகத்தான் இருக்கும்.
தங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது ஆளும்
கட்சியின் சதி என்று சொல்வது எதிர்க்கட்சித் தலைவர்களின்
வழக்கம். தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்தும் தனது வீடுகளில்
வருமான வரி சோதனை நடந்தபோது இதையேதான் சொன்னார். அப்போது
மவுனமாக இருந்த ஜெயலலிதா இப்போது விஜய்காந்தின் மேலும் கலவரம்
நடத்திய அவரது தொண்டர்கள் மீதும் கடுமையாக
அர்ச்சித்திருக்கிறார். அன்று குடிகாரன் என்றவர் இன்று
விஜய்காந்த்தை அற்பன் என்றிருக்கிறார்.
ஏதோ தன்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது பொறுமையின்
சிகரமாக அவரும் அவரது தொண்டர்களும் திகழ்ந்ததாக அவர்
குறிப்பிட்டிருப்பது நல்ல ஜோக். அவருக்கு எதிராகக் கோர்ட்டில்
தீர்ப்புக் கூறப்பட்டபோது அவரது தொண்டர்கள் தர்மபுரியில்
பஸ்ஸை எரித்ததையும், அதில் அநியாயமாக மூன்று இளம் பெண்கள்
பலியானதையும் சுப்ரமண்ய சாமி ஜெயலலிதா மீது வழக்குத்
தொடுத்தபோது அ.தி.மு.க.வின் மகளிரணியினர் சு. சாமியின்
முன்னால் ரிகார்ட் டான்ஸ் ஆடியதையும் யாரும் மறந்திருக்க
மாட்டார்கள்.
இன்று ஹைதராபாதிலுள்ள அவரது திராட்சைத் தோட்டம் பறிபோகும்
நிலையிலிருக்கிறது. அது ஏழைகளிடமிருந்து கைப்பற்றிய நிலம்
என்றும், அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும்
கூறியுள்ளது ஆந்திர அரசு. நஷ்ட ஈடு கூடக் கிடைக்காது. இப்போது
ஜெயலலிதா இதை ஆளும் கட்சியின் சதி என்கிறார். விஜய்காந்தின்
மீது நடவடிக்கை எடுத்து, அதை அவர் ஆளும் கட்சியின் சதி
என்றால் அவர் அற்பன்! தனக்கென்றால் அது சதி? எந்த வகையில் இது
பொருந்தும்? தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா?
தன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை பற்றிக் கூறும்
விஜயகாந்த், "என்னிடமிருந்து கைப்பற்றியதாகச் சொல்லப்படும்
ஆவணங்கள் பட்டியலில் என்னிடம் சட்டப்படிப் பெறவேண்டிய
கையப்பம் பெறவில்லை என்கிறார். அதைத் தவிர, நான் தேர்தலின்
போது கொடுத்ததற்கப்புறம், இடைப்பட்ட காலத்தில் சொத்து
மதிப்பீடு கூடி விட்டது என்றும் அவர் சொல்கிறார். இவை எல்லாம்
மறுக்கப்படவில்லை. இந்த மாதிரி ரெய்டுகள் எத்தனை
பர்த்திருக்கிறோம், அவையெல்லாம் வழக்குகளாக இழுக்கடித்து
கடைசியில் நிரூபிக்க முடியாமல் பிசுபிசுத்துப் போனதையும் நாம்
அறிவோம். எல்லாவற்றுக்கும் மேலாக பொது மக்கள் மத்தியில்
பேசப்படும் கருத்து ஒன்று: அவர் உழைத்து சம்பாதித்த
சொத்துதானே, அவர் ஒன்றும் பதவியில் இல்லை, லஞ்சம் வாங்கி
சம்பாதித்திருக்க முடியாது, எந்தத் தலைவர்தான் ஒழுங்காக வரி
கட்டுகிறார்?" என்று பேசிக்கொள்கிறார்கள். கேப்டனின்
ரசிகர்கள்
***
சிந்தனையைத் தூண்டிய ஒரு போஸ்டர்:
"வண்டி ஓட்டும்போது செல் போனை எடுக்காதீர்கள். அழைப்பது
எமனாகவும் இருக்கலாம"
-சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை.
***
சிலேடை
:நான் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மணிவிழா, பொன்விழா என்று
வருவதால் இது "விழா" ஆட்சி
முதல்வர் கலைஞர்
*****