விலைவாசிகளைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய பட்ஜெட்டில் எந்த
முயற்சியும் காணப்படவில்லை என்ற விமர்சனம் எழுந்திருப்பது
நியாயமானது. மத்தியதர மக்களும், கீழ்த்தட்டு மக்களும்
நாளுக்கு நாள் ஏறிவரும் விலை உயர்வினால் அவதியுறுகிறார்கள்.
ஆனால் நிதி நிலைமை அறிக்கையில் விலைவாசி உயர்வைக்
கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனப்
பிரதமர் கூறியிருப்பது விநோதம். இப்படி மாநில அரசும் மத்திய
அரசும் யார் பொறுப்பு என்று பழியை மாற்றி மாற்றிப்
போட்டுக்கொள்வதில் அவதியுறுவது மக்கள்தான்.
***
உச்ச நீதி மன்றத்தின் நீதிபதி தனது உரை ஒன்றில் இங்கு அங்கு
எனாதபடி பரவி இருக்கும் லஞ்சத்தைப் பற்றிக் கவலை தெரிவித்து
அதை ஒழிப்பதற்கு லஞ்சக் குற்றம் புரிந்தவர்களை, சட்டம்
அனுமதிக்காவிட்டால் கூட விளக்குக் கம்பத்தில் தூக்கிலிட
வேண்டுமெனக் கூறியிருக்கிறார். நாட்டில் உள்ள விளக்குக்
கம்பங்கள் போதுமா என்று கவலை தெரிவிக்கிறார் பாமரன். அப்படித்
தொங்கவிட்டால் நமது அரசியல்வாதிகளுக்குப் பஞ்சம் எற்பட்டு
விடுமே என்பது இன்னொரு கவலை.
***
சொன்னார்கள்!!!
'கோவர்த்தன
மலையை ஒரு விரலால் தூக்கி நிறுத்தி விட்டதாக எல்லொரும்
என்னைப் புகழ்கிறார்கள். இது தவறு. ரயில்வேயின் 16 லட்சம்
ஊழியர்களின் கடின உழைப்பே இதற்குக்குக் காரணம்.'
மத்திய ரயில்வே அமைச்சர் லாலு ப்ரசாத்
நாய் உணவுக்கு வரிக் குறைப்புப் பற்றி விமர்சிக்கிறார்கள்.
நகைச்சுவை உணர்வே இல்லாமல் போய் விட்டது.
- நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
புத்திசாலிகள் சேமிக்கிறார்கள். அதிபுத்திசாலிகள் கடன்
வாங்குகிறார்கள்.
- நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், தமிழக முதல்வர் கருணாநிதி -
இந்த இரு தமிழர்களால் தமிழகமே பெருமைப்படுகிறது
- அமைச்சர் தயாநிதி மாறன்.
தமிழ் நாட்டில் 2011ம் ஆண்டு பா.மா.க ஆட்சிக்கு வரும்.
- மருத்துவர் ராமதாஸ்.
"என்னதான் தலை கீழாக நின்றாலும் கம்பங்களில் ஏறி எத்தனை
கர்ணம் போட்டாலும் ஜெயலலிதாவால் மீண்டும் ஆட்சிக்கு வர
முடியாது. மக்கள் அதற்குத் தயாராக இல்லை."
- முதல்வர் கருணாநிதி.
எல்லோரும் கருணாநிதிகளாக இருக்க வேண்டும். எல்லோரும்
கருணாநிதியின் உள்ளத்தைப் பெற்றாக வேண்டும்
- கோவை விழா ஒன்றில் முதல்வர் கருணாநிதி.
''எனக்கு எந்த மத்தத்தின் மீதும் நம்பிக்கை கிடையாது.
பழமையான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள். கோட்டைகள்
பார்ப்பதில் மட்டும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் மதத்தினால்
ஏதேனும் நல்ல விஷயங்கள் நடந்தால் அதை எதிர்ப்பவளில்லை
- கவிஞர் கனி மொழி - ஒரு நேர்முகத்தில்
*****