Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

ஜபரவின் அரசியல் அலசல்

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 309

23 ஏப்ரல் 2007


comedy dvds
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

மேற்கு வங்காளத்தில் டாடா நிறுவனத்திற்குக் கார் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலம் தரப்பட்டபோது அதை எதிர்த்து மக்களும் அரசியல் கட்சிகளும் நடத்திய போராட்டங்கள், வன்முறைகள் தெரிந்த செய்தி. இப்போது ஒரிஸ்ஸாவிலுள்ள டின்கியா, மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் தங்கள் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து நூதன முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். ஒரிஸ்ஸா அரசு தென் கொரியாவின் தனியார் நிறுவனத்திற்கு எ•கு உற்பத்திக்காக (12கோடி மதிப்பிலான உற்பத்தி நிலையம்) கிராம நிலங்களை தாரைவார்க்க, கிராம மக்கள் தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு அதை நசுக்கிவிடும் என்பதால் கிராமத்திலுள்ள குழந்தைகளை முன்னிலைப்படுத்திப் போராட்டத்தில் இறங்கியி ருக்கிறார்கள். குழந்தைகள் தடுப்பரணாக இருந்தால் எந்த அரசும் தடியடியிலோ துப்பாக்கிச் சூட்டிலோ இறங்கத் தயங்கும் என்பது அவர்கள் எண்ணம். ஏறத்தாழ 20000 குடும்பங்கள் இந்த நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். ஆனால் அரசு 500 குடும்பங்கள் மட்டுமே பாதிக்கப்படும், அவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்படுள்ளது எனக் கூறுகிறது.

எல்லா மாநிலங்களிலுமே தனியார் அல்லது வெளிநாட்டு நிறுவனக்களுக்கு நிலம் ஒதுக்கப்படும்போது இத்தகைய கூக்குரல்கள் எழுகின்றன. இது எதிர்க் கட்சிகளின் சதி என்று ஒரேயடியாக ஒதுக்கிவிட முடியது. நாட்டின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய பொருளாதார இழப்பீட்டையும் கொடுப்பது அவசியம். வெறும் இயந்திரத்தனமாக இந்தப் பிரச்சினையை அனுகாமல் மனிதத்தன்மையோடு அரசு இது போன்ற பிரச்சினைகளைச் சந்தித்தால் இரு சாராருக்கும் மகிழ்ச்சி அளிக்கும்.

*******

அரசுத் திட்டங்கள் மூலம் இந்தியாவில் ஒரு ஏழைக்கு ஒரு ரூபாய் அளிக்க ஆகும் செலவு மூன்று ரூபாய் அறுபைந்தைந்து காசுகள். இவ்வாறு கூறுபவர் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் பிமல் ஜலான். தனது 'இந்திய அரசியல் - பின்னாலிலுருந்து ஒரு பார்வை" என்ற புத்தகத்தில், விநியோக முறை மிகவும் மோசமாக உள்ளது எனக் கூறும் அவர் ஒரு கிலோ உணவுப்பொருள் அளிக்க 2.4 கிலோ உணவுப்பொருளைத் தர வேண்டியிருக்கிறது எனச் சொல்கிறார். 2003-4ம் ஆண்டுகளில் நுகர்வோர் மானியமாக 16 மாநிலங்களில் கொடுக்கப்பட்ட 7200 கோடி ரூபாயில் 4200 கோடி ரூபாய் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைச் சென்றடையவில்¨லை. இந்த 4200 கோடியில் 2640 கோடி ரூபாயை வினியோக நடைமுறையில் இடம் பெற்றுள்ள துறைகளே விழுங்கிவிட்டனவாம். இதனால் மக்களுக்கு மானியங்கள் வழங்குவதைவிட அதற்கான வவுச்சர்களை வழங்கலாம் என்று யோசனை கூறுகிறார். அது சரி, அதனால் அரசியல் வாதிக்கு என்ன லாபம்?

சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் என்று இதைத்தான் சொல்கிறார்கள் போலிருக்கிறது.

*******

சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஆத்திகர்களின் மனதைப் புண்படுத்துவது நமது கலைஞரின் தனிவழி.

ஆளில்லாத ரயில்வே கிராசிங்கில் காஞ்சிபுரம் அருகே ஒரு வேன், ரயிலில் மோதியதால் பல உயிர்கள் பலியானது வேதனைக்குரிய விஷயம். இதையும் தனது வேடிக்கை என்று நினைத்துப் பேசும் பேச்சால் ஒரு முதல்வர் "கோவிலுக்குச் செல்வதற்காக வேன் திருப்பப்பட்டதால் கடவுள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சொல்லமாட்டோம்" எனக் கூறியிருப்பது தேவையில்லாத ஒன்று. அரசியல் தலைவர்களின் கூட்டங்களுக்காகத் தொண்டர்கள் கிடைத்த வாகனங்களில் ஏறி முண்டியடித்து, தங்கள் தலைவரின் முக தரிசனத்திற்காகக் காத்திருக்கிறார்களே, அப்பொது தங்கள் உயிரையும் பணயம் வைக்கிறார்களே, அப்போது அந்தத் தலைவர்கள் இழப்பீடு கொடுக்க வேண்டுமென்றா கூறினார்கள்?

ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் குறைந்த பட்சம் ஒரு ஸ்டாப் அறிகுறியையோ அல்லது வேகத்தடையையோ வைக்கலாமே. காரியத்தை விட்டுவிட்டு, கவைக்குதவா வாதத்தைப் பேசுவது வெட்டி (வேட்டி)அரசியல்!

*******

பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாபுபாய் கட்டோரா. அவர் டில்லியின் பன்னாட்டு விமான தளத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். காரணம், தன் மனைவியென்று சொல்லி இன்னொருவரை டோரண்டோ செல்லும் விமானத்தில் ஏற்றிச் செல்ல முயன்றிருக்கிறார். ஆனால் பாவம் பாஸ்போர்ட் புகைப்பட வித்தியாசத்தால் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டு கைது செய்யப்பாட்டிருக்கிறார். இதுதான் நமது பாராளுமன்ற உறுப்பினர்களின் நேர்மை!

*******

ராகுல் காந்தியா அல்லது ரா(ங்)குல் காந்தியா என ஒரு சீரியசான சந்தேகம் வந்து விட்டது. வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டடார் இவர். முன்பு ஒரு முறை நாங்கள் ஆட்சியிலிருந்தால் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டிருக்காது எனத் திருவாய் மலர்ந்தருளினார். இப்போது அதைத் தோற்கடிக்கும்படி இந்தியா சுதந்திரம் பெற்றதற்கும்,1971ல் பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்து வங்க தேசம் வந்ததற்கும் நேரு குடும்பமே காரணம் என்று இரு பயங்கர அதிரடி போட்டிருக்கிறார். சரித்திரம் தெரியாவிட்டல் இங்கிதம் கூடத்தெரியாதா? பாகிஸ்தானில் இவர் சொன்னதை வைத்துக்கொண்டு பாகிஸ்தானில் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட்டதற்கு இது முக்கிய ஆதாரம் எனக் கண்டனக் குரல்கள் வருகின்றன. இது தேவையா? ஆனால் காங்கிரஸ் கட்சி இவரை உ.பி. அரசியலில் முக்கியப் பிரமுகராக ஆக்க முயற்சிக்கிறது. மன்மோஹன் சிங்ஜி உ.பி.யில் ராகுல் தான் வருங்காலத் தலைவர் என்று நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்லி இருக்கிறார். அவர் என்ன செய்வார் பாவம்! பேசுவிக்கிறவர் பேசுவித்தால் பேசாதவர் யாரே?

சொன்னார்கள்:

"சில நீதிபதிகளுக்கு மன சாட்சியே இல்லை. உலக வரலாற்றைப் படிக்காதவர்கள், இந்திய வரலாற்றின் சமூக நீதியைப் படிக்காதவர்கள் இன்றைய நீதிபதிகளாக வருகின்றனர்."

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழுத் தலைவர்
திரு நல்லகண்ணு
(நல்லாச்சொன்னே கண்ணு!) நீதிபதிகளுக்கு கெட்ட கண்ணு!

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide