Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage
அரசியல் அலசல்
- ஜ.ப.ர.
உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 327

27 ஆகஸ்ட் 2007


comedy dvds
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

எளிய தமிழில் இந்தியத் தூதர்

அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதர் ரானென் சென் பேட்டியில் சொன்னதைப் பாமரர்களுக்காக எளிமைப் படுத்திக் கொடுக்கிறோம்:

இங்கே இவன் ஒத்துக்கிட்டான். அங்கே அவன் ஒத்துக்கிட்டான். பின்ன ஏன்ய்யா தலையறுந்த முண்டக் கோழி மாதிரி சுத்திகினு கிடக்கீங்க?
கோமணத்திலே இடி விழுந்த மாதிரி என்னமோ பினாத்திக்கிட்டுக் கிடக்கீங்க! த..பாரு.. சுதந்திரம் வாங்கி அற்வது வர்ஷம் ஆச்சே, தில்லு
வேணாம், ரெஸ்பெட்டு வேணாம்? நீ பாட்டுக்குக் கமிட்டி கிமிட்டி அது இதுன்னு போட்டுக்கினு கிடப்பே, நேரம் ஓடிப்பூடும், அந்த புஷ்ஷு
எம்மாம் பெரீய மனுஷன், ஐநூரு வர்ஷத்திலே இந்தா மாரி ஒரு ஆளு கிடையாது. எம்மாம் பேஜார்பட்டு இப்டி ஒரு அக்ரீமெண்ட்
போட்டுருப்போம், இதெல்லாம் ஒனக்கென்னா தெர்யும், சும்மா பொத்திகினு கம்னு கிட"

ஒரு வித்தியாசமான சிந்தனை

சென்னை அடையாறு எலியட்ஸ் பீச் பெரிசுகள் மகாநாட்டில் ஒட்டுக் கேட்டது:

"இவா எக்குத்தப்பா அக்ரீமெண்ட் போட்டுண்டுட்டா. எப்டிக் கழண்டுக்கறதுன்னு தெரியல்லே. கம்யூனிஸ்ட்காராளும் பேசிண்டிருக்காளே

தவிர ஒண்ணும் பண்ண மாட்டேங்கறா. "நீங்க ஆதரவை விலக்கிண்டாப் பரவாயில்லே"ன்னு சொல்லி உசுப்பேத்திப் பார்த்தா. அதுவும் நடக்கற வழியாய்க் காணும். இப்ப அமெரிக்காவிலே இருக்கற இந்தியத் தூதரை வெச்சுக் கடுப்பேத்தறா.. அவ்வளவுதான்".

ஐயா! தெரியாதையா!

'நிருபர்கள் அணு ஆயுத ஒப்பந்தம் பற்றி உங்கள் கருத்து என்ன?' என்று லாலுவைக் கேட்டபோது அவர் அளித்த வெள்ளந்தியான பதில்:

"இதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, தெரியாத விஷயத்தைப்பற்றி நான் பேசுவதில்லை"

‘ஓஹோ, அப்படியென்றால் ரயில்வே மந்திரியாகும் போது அவர் ரயில்வேயைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருப்பார் போலிருக்கிறது’

லாலு ஒப்புக்கொண்டுவிட்டார். ஆனால் ஐக்கிய முற்போக்கு முன்னணியின் தலைவர்கள் பலர் பிரதம மந்திரியின் கருத்துதான் எங்கள் கருத்தும் என்று அவருக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். தே.மு.தி.க தலைவர் விஜய்காந்த்திடம் ஒப்பந்தம் பற்றிக் கேட்டபோது 'ஐம்பதாண்டு அரசியல் அனுபவம் இருக்கும் பெரியவரிடம் கேளுங்க! அவர் என்ன பதில் சொல்கிறார் என்று பார்த்து அப்புறம் நான் பதில் சொல்கிறேன்' என சாமர்த்தியமாக நழுவிவிட்டார்.

நா காக்க

நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதென்றால் அது ஜெயலலிதாவால்தான் முடியும். எத்தனை பெரிய தலைவராயிருந்தாலும் கூசாமல் அவரைப்பற்றி எவ்வளவு கவுரவக் குறைவாகச் சாடமுடியுமோ அப்படிச் சாடுவார். இப்போது மன்மோகன் சிங்கையும் விட்டு வைக்கவில்லை. அணு ஆயுத ஒப்பந்தத்தில் விடாப்பிடியாக இருக்கும் அவரது மகன்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்று அமெரிக்காவில வாழ்கிறார்களாம். இவரும் இந்த நாட்டைவிட்டு அமெரிக்காவிலேயே வசிக்கட்டும் என்று பிரதமரை நாடு கடத்தியிருக்கிறார். வழக்கம்போல கருணாநிதியையும் விட்டுவைக்கவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தில் அக்கறையில்லாமல் இருக்கிறார் என்ற சொன்னதோடு மட்டுமில்லாமல், அணு சக்தி ஒப்பந்தம் என்றால் கருணாநிதிக்கு என்னவென்றே தெரியாது என்பது போல நக்கலடித்திருக்கிறார். அணு ஆயுதம் என்றால் இவர் கட்சி அடியாட்கள் அது ஏதோ புதுவிதமான ஆயுதம், வீச்சரிவாளுக்கு பதிலாக அதை உபயோகப்படுத்தலாமே என்று நினைப்பார்கள் எனச் சொல்கிறார். அரசியல் நாகரிகம் வேண்டாம்?

படிக்கவேண்டும் புதிய பாடம்

ஜார்கன்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சுக்ராம் ஒரான். எம். எல். ஏ ஆனதும் பணம் சேர்க்கும் வழியைப் பார்க்காமல், இவர் அறியாப் பிள்ளையாக மனோஹர்பூரிலுள்ள கல்லூரியில் மேல் படிப்பிற்காகச் சேர்ந்திருக்கிறார். மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பிலும் பாஸ் செய்திருக்கிறார். இவருக்கு கல்லூரியில் முதல் நாள் ஏற்பட்ட ராகிங் அனுபவம் வினோதமானது. எம்.எல்.ஏ. என்று இவரை மூத்த மாணவர்கள் விட்டு வைக்கவில்லை.

கல்லூரியில் முதல் நாள் புது மாணவர்களை வரவேற்பதற்கான நிகழ்ச்சியில் இவரைத் தலைமை தாங்கச் சொன்னார்களாம். இவரும் தலைமை தாங்குவதற்காக நாற்காலியில் அமரப்போக, ஒரு மாணவன் குறும்பாக, 'எந்தத் தகுதியில் நீங்கள் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள், மாணவனாகவா, அல்லது முதன்மை விருந்தாளியாகவா?' என்று கேட்க அவரும் அப்பாவித்தனமாக, 'நான் மாணவனாக இந்தக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன்' என்று சொல்ல, 'அப்படியென்றால் உங்களுக்கு எதற்கு நாற்காலி?' என்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் எம்.எல்.ஏ. மாணவன் மற்ற மாணவர்களோடு அமர்ந்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அவரை பெஞ்ச் மேல் நிற்கச் சொல்லி தன்னை அறிமுகப் பத்திக்கொள்ளவும் செய்திருக்கிறார்கள். பின்னர்தான் எம்.எல்.ஏ-வுக்கு வரவேற்பு. இதையெல்லாம் புது அனுபவமாக மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ. இந்த விழாவிற்கு தனது பாதுகாவலர்களை வரவேண்டாம் என்று சொல்லியிருந்தாராம். புகழ்வாய்ந்த அந்தக் கல்லூரிக்கு வசதிகள் செய்து தரவேண்டும் என்று விரும்புகிறார் இந்த எம்.எல்.ஏ. இந்த எம்.எல்.ஏ. விடமிருந்து மற்றவர்களும் போதிய பாடம் கற்றுக்கொள்லலாம்

பாதை தெரியுது பார்!

ராஜிவ்காந்தியின் 63-வது பிறந்த தினவிழாவிற்கு சத்தியமூர்த்தி பவனில் கலைஞர் தலைமை தாங்கினார். வேற்றுக்கட்சிக்காரர் சத்தியமூர்த்தி பவன் விழாவில் தலைமை வகிப்பது இதுதான் முதல் தடவை. அவரை வரவேற்கக் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்று கூடி நிற்பார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். நாலு மத்திய அமைச்சர்கள் மிஸ்ஸிங். மற்றும் 10 எம்.எல்.ஏக்கள் மட்டுமே விழாவிற்கு வந்திருந்தனர். காங்கிரஸில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு கோஷ்டிகள். வெறுத்துப்போன முதல்வர், "நான் இந்த விழாவிற்கு வருவதை ஏதோ சந்திரனில் இறங்கப்போகும் நிகழ்ச்சிபோல் பெரிது படுத்தினார்கள். இங்கு வந்திருக்கும் திரளான(?) கூட்டத்தைப்பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று வஞ்சப்புகழ்ச்சி அணியாக கூறினார். காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் வேண்டுகோளை ஏற்று பழைய மகாபலிபுரம் சாலைக்கு 'ராஜிவ் காந்தி சாலை' என்று பெயர் சூட்டச் சம்மதித்தவர், "பாதைகளின் பெயர் மாறலாம், ஆனால் பாதை மாறாதீர்கள்" என்று ஒரு குட்டும் வைத்தார். கருணாநிதியின் சிலேடை நயம் இன்னும் அப்படியே இருக்கிறது.

மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் விழாவில் பேசிய அவர், விழா என்றால் கொண்டாட்டம் என்று பொருள். இன்னொரு பொருள் விழாது என்பது. இந்த ஐக்கிய முற்போக்கு அணியின் ஆட்சியும் விழாது (கம்யூனிஸ்டுகள் கவிழ்க்க மாட்டார்கள்) என இருபொருள் படக் கூறியது ரசிக்கும்படியிருந்தது.

மேற்கே உதிக்கும் சூரியன்

சூரியன் திசை மாறி உதிப்பது போல் தோன்றுகிறது. சன் டி.வி யில் ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் செய்திகள் தாராளமாக வருகின்றன. எப்போதும், பேட்டியாளரை மடக்கி தி.மு.க தரப்பு நியாயத்தை வெளிக்கொண்டு வரும் "நேருக்கு நேர்" வீரபாண்டியன் இப்போது அடக்கி வாசிக்கிறார். எதிர்க் கட்சிக்காரர்கள் தங்கள் கருத்துக்களை அவிழ்த்து விட முழு சான்ஸ் கொடுக்கிறார்.

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews