Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map
contest | egreetings | Downloads | Business directory | games | free ads | events | work smart | Picture Gallery
magazine,news Pictures Tamil magazine

Updated Every Monday

 
Subscribe for weekly newsletter
India news India cinema Recipes & Health Tamilnadu tamil poems & stories Tamil movie

தமிழ்ச் சுவை

அரசியல்
அறிவியல்
ராசிபலன்
உலகநடப்பு
நகைச்சுவை
லேடீஸ் ஸ்பெஷல்

Help

news படைப்புகளை அனுப்ப
news Tamil Font
news Like to contribute?
news Volunteer
news Nilacharal as your homepage

அரசியல் அலசல்
-
ஜ.ப.ர

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

சாரல் 330

17 செப்டம்பர் 2007


Astrology
BHARATANATYAM YOGA DEVOTIONAL TELEFILMS

B
U
Y

D
V
D

V
C
D

A
N
D

E
B
O
O
K

O
N
L
I
N
E

N
O
W
Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Visit Nilashop

visit nilashop

Enemy Vs Adversary

அரசியலில் enemies என்பது கிடையாது, adversaries தான் உண்டு என்று சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அமர்சிங் சொல்லியிருக்கிறார். நமது சொல்பப் படிப்பினால் இது இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை, Concise Oxford Dictionery யைப் புரட்டிப் பார்த்தோம். Adversary என்பதற்கு enemy என்றுதான் அர்த்தம் போட்டிருக்கிறது. அமர்சிங் எந்த டிக்ஷனரி உபயோகிக்கிறார் என்று தெரிந்தால் தேவலை.

******

அர்த்தமே வேறுதான்?

விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வந்து விடும் போலத்தான் தெரிகிறது. இப்போது தேர்தல் நடந்தால் காங்கிரஸுக்குக் கூடுதல் சீட்டுகள் வர வாய்ப்புகள் இருக்கின்றன, கம்யூனிஸ்ட்கள் நிலை மோசம், பா.ஜ.க. சீட்டுகள் குறையும் என்று சில நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த நோக்கர்கள் சொல்வதில் (உள்) நோக்கம் இருக்குமோ? காங்கிரஸை உசுப்பி தேர்தல் வரவைத்து விட்டு, கடைசியில்..?

******

சொன்னது நீதானா, சொல், சொல்

செப்டம்பர் 18ம் தேதி ஜெயலலிதா வீட்டில் அத்வானிக்கு விருந்து. கூட்டணி உருவாவதின் இறுதிக் கட்டம் என்று பேசிக்கொள்கிறார்கள். செலெக்டிவ் அம்னீஷியா பற்றி இருவரும் செலெக்டிவ் ஆக மறந்து விட்டார்கள் போலும் . அதுதான் இருக்கவே இருக்கிறது, வழக்கமான டயலாக், "அரசியலில் நிரந்தரப் பகைவர்களும் கிடையாது , நிரந்தர நண்பர்களும் கிடையாது". இன்னும் கேட்டால், ஜெ.யும், "பா.ஜ.க . எனக்கு adversary தானே தவிர enemy கிடையாது" என்று சொல்லக்கூடும்.

******

ஏங்குகிறாரோ அன்பழகன்?

சென்னை விவேகானந்தா கல்லூரி வைர விழாவில் தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ஒரு கேள்வி கேட்டார்கள், " விவேகானந்தரைப் பாராட்டிப் பேசும் நீங்கள் ஏன் நாத்திகராய் இருக்கிறீர்கள் ?" அதற்கு அவர் சொன்ன பதில், "என்ன செய்வது ? விவேகானந்தருக்கு ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கிடைத்தது போல் எனக்கு ஒரு குரு கிடைக்கவில்லையே?" யார் மனத்தையும் புண்படுத்தாமல், அதே நேரத்தில் சமத்காரமாகவும் சொன்ன பதில். நன்றாகச் சமாளித்து விட்டார். பாராட்டுகிறோம்.

(தாம் சேர்ந்து விட்ட கூடாரத்தைப் பற்றி நிஜமாகவே வருந்துகிறாரோ அன்பழகன்?)

******

பொய் சொல்லப் போறேன், பொய் சொல்லப் போறேன்

நவாஸ் ஷரீஃப் நாடு கடத்தப் பட்டது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படி அரசாங்கத்தால் எடுக்கப் பட்டவையே. எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்கிறார் முஷாரஃப்.

நிஜம்தான். நம்புகிறோம். (இந்த வார சிறந்த பொய்க்கான பரிசு முஷாரஃபுக்கா, நமக்கா?)

******

ஹிந்தி தமிழ் பாய் பாய்

ஹிந்தி எதிர்ப்பு இயக்கத்திலேயே வளர்ந்த திராவிட இயக்கத் தலைவரின் புதல்வி கனிமொழி இப்போது தில்லியில் சுறுசுறுப்பாக ஹிந்தி கற்றுவருகிறாராம். அமைச்சரானால் தேவையிருக்குமே! அவர் தி.மு.க. அமைச்சர்களுடனோ எம்.பி.க்களுடனோ அதிகம் பேசுவதில்லையாம். மற்ற எல்லாத் தலைவர்களிடமும் தேடிப்பிடித்துப் பேசுகிறாராம். பிழைக்கத் தெரிந்தவர்!

******

சிரிப்பதற்காகத்தான், சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

ராமர் சேது பாலம் மனிதர்களால் கட்டப் பட்டது அல்ல. என்று மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். அது வானரங்களால் கட்டப்பட்டது என்று சேது சமுத்திர எதிர்ப்பாளர்கள் சொல்லக் கூடும்.

******

சொன்னார்கள்

அ.தி.மு.க. மூன்றாவது அணியில் உள்ளதா? மூன்றாவது அணியே முழுமையாக உள்ளதா என்று சந்தேகமாக இருக்கிறது. - ஜெயலலிதா

இதிலென்ன சந்தேகம்? நீங்கள் சேர்ந்த எந்த அணியாவது இதுவரை உருப்பட்டதுண்டா? - அரசியல் அண்ணாசாமி (சற்று பயத்துடன்தான்)

ராமாயணம் முழுவதும் படித்துவிட்டு சீதைக்கு ராமன் என்ன உறவு என்று கேட்பதைப்போல இருக்கிறது. நானே சீதாராமன் தான்! - சீதாரம் எச்சூரி அணுசக்தி ஒப்பந்தம் பற்றி பத்திரிகையாளர்களிடம்

சீதையை அசோகவனத்திலேயே வச்சுருக்கீங்களே, மீட்கப்போறிங்களா அல்லது கைகழுவப்போறிங்களா? - அரசியல் அண்ணாசாமி

லஞ்சமற்ற ஜாதி மத பேதமில்லாத கட்சிகளுடன் கூட்டுச் சேரலாம். - விஜயகாந்த்

அப்படி ஒரு கட்சி இருக்கா? யாரோடும் கூட்டுச் சேர மாட்டோம் என்று சொல்லி விடுவதுதானே? - அரசியல் அண்ணாசாமி

ஜெயலலிதாவிற்கு யானைக்கால் ராசி. பயங்கரவாதத்திற்கு ஆதரவாக, புலிகளுக்கு ஆதரவாக யாராவது செயல்பட நினைத்தால் யானை தன் காலால் மிதிப்பதுபோல் அவர் மிதித்துவிடுவார். -  பத்திரிகை ஆசிரியர் சோ

ஆனாலும் உங்களுக்கு ரொம்பக் குசும்பு, ஜெயலலிதா குண்டாக இருக்கார் என்பதற்காக இப்படியா சொல்வது? - அரசியல் அண்ணாசாமி

*******

           
New Page 1

 மேலும் பல.....  


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

உங்கள் கருத்துகள்

நண்பருக்கு அனுப்ப

பிரதி எடுக்க

 top

Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews

Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide