சந்திப்பு
சோனியா காந்தியை லாலு பிரசாத் யாதவ் சந்தித்துப் பேசினர்.
அணுசக்தி ஒப்பந்தம் பற்றியும் 23ம் தேதி சி.பி.ஐ. தனி
கோர்ட்டில் வர இருக்கும் மாட்டுத் தீவன வழக்கு பற்றியும்
பேசினார்கள் என்று சொல்லப்படுகிறது.
தன்னை ஊழல் வழக்கிலிருந்து விடுவித்தால் அணு சக்தி
ஒப்பந்தத்திற்கு ஆதரவு தருவதாக ஒரு ஒப்பந்தம் போட்டிருப்பாரோ
லாலு?
கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள்
"எனக்கு தமிழுக்கு சேவை செய்வதற்காக நீண்ட ஆயுளைக்
கொடுக்கும்படி இறைநம்பிக்கை இல்லாததால் இயற்கையிடம்
கேட்கிறேன்"
"ராமர் என்ன கட்டிடப் பொறியாளரா ராமர் பாலம் கட்டுவதற்கு?"
"ராமர் என்று ஒருவர் இருந்ததாக சரித்திரமே இல்லை''
"ராமாயணம் என்று ஒன்று உண்மையில் கிடையாது. இது ஆரியரான
ராமருக்கும் திராவிடரான ராவணனுக்கும் நடந்த போரில் திராவிடன்
இறந்ததாகக் குறிப்பிடும் கற்பனைக் கதை"
செய்தி
கலைஞர் டி.வி.
விநாயக சதுர்த்தியன்று கோலாகலமாக இன்ப விநாயகனே என்ற
பகுத்தறிவுப் பாடலுடன் துவங்கியது!!!
'தி.மு.க. ஆட்சியில் தனக்கு ஏதும் சலுகை கிடைக்கவில்லையே, இனி
யாருக்கும் பல்லக்கு தூக்க மாட்டேன்' என்று விஜய டி.
ராஜேந்தர் மனம் குமுறியதற்குக் கைமேல் பலன். சிறுசேமிப்பு
துணை நிர்வாக அதிகாரியாகப் பதவி.
பட்டாலாவது
புரியுமா?
அ.தி.மு.க.வுடன் கூட்டணி, அத்வானிக்கு ஜெயலலிதா வீட்டில்
விருந்து என பா.ஜ.க.வினர் சப்புக் கொட்டிக் கொண்டிருந்த
வேளையில் ஜெயலலிதா வழக்கம்போல் எல்லாரையும்
இளிச்சவாயர்களாகிவிட்டு கொடநாடு போய்விட்டார். சிலபேருக்கு
சொன்னால் புரியும், சிலருக்குப் பட்டால் புரியும், ஆனால்
சிலருக்கு எப்படியும் புரியாது. இதில் பா.ஜ.க. மூன்றாவது ரகம்.
உறுதியான உப்தேசம்
அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்துளே பேதா பேதம் வஞ்சம், பொய், களவு, சூது
சினத்தையும் தவிர்ப்பாயாகில்
செய்தவம் வேரொன்றுண்டோ?
உனக்கிது உறுதியான உபதேசம் ஆகும்தானே!
மேற்கூறிய இந்தப்பாடலைத் தந்தை பெரியார் அவர்கள் குடியரசு
இதழில் 2/5/1925 முதல் 1/5/1927 வரை தொடர்ந்து வெளியிட்டு
வந்தார்
மேற்கூறிய உபதேசம் எந்த இயக்கத்திற்கும் எந்தக் காலத்திற்கும்
பொருந்தும்.
மனுதர்மம்
மனு தர்மத்தைத்தான் ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று
பேசுவார்கள். இப்போதும் இந்த வித்யாச நீதி இருக்கிறது.
அரசியல்வாதிகள் ஒரு குலம். ஏனையோர் ஒரு குலம். ராஜஸ்தான்
கனிம வள அமைச்சர் கிரிமினல் குற்றத்துக்காக சிறை தண்டனை
அனுபவித்தார். அவர் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை என்று
அடித்துச் சொல்கிறார், ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. தலைவர் மகேஷ்
சர்மா. அதே நேரத்தில் மதுரை உயர் நீதிமன்றம், சிறை தண்டனை
பெற்ற அரசு ஊழியர் மீது வேலை நீக்கத்துக்கான இலாகா நடவடிக்கை
எடுத்தது சரிதான் என்று விட்டது.
சுட்ட பழம்
கேள்வி: சிரிப்பில் எத்தனை வகை உண்டு?
டாக்டர் ராம்தாஸ் கலைஞரைப் பார்த்து சிரிப்பது டார்ச்சர்
சிரிப்பு. கம்யூனிஸ்டுகளைப் பார்த்து மன்மோகன் சிரிப்பது
நக்கல் சிரிப்பு. மிருக வதைச் சட்டத்தைப் பார்த்து
சல்மான்கான் சிரிப்பது கேலிச் சிரிப்பு. டால்மியா
வகையறாக்களைப் பார்த்து கங்குலி சிரிப்பது எக்காளச் சிரிப்பு.
சன் டி.வி.யைப் பார்த்துக் கருணாநிதி சிரிப்பது சவால்
சிரிப்பு. சிம்புவைப் பார்த்து நயன்தாரா சிரிப்பது எஸ்கேப்
சிரிப்பு. இப்படி சிரிப்பில், பல வகைகள்.
(நன்றி : அரசு பதில்கள்)
*******