 |
இதழ் 334 |
 |
அக்டோபர் 15 2007
|

|
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
 | Home
>> | Politics |
| | | பெட்ரோல் டீசல் விலை மார்ச் மாதம் வரை உயராது.
அப்போ மெய்யாலுமே தேர்தல் மார்ச் மாசத்துக்குள்ள வந்துடுமா?
ஒரு கிசு கிசு
தலைவர் குடும்பத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமென்று எதிரணி சத்ரு சம்ஹார யாகம் நடத்துவதாக "டீக்கடை பென்ச்" செய்தி
- யாகத்திற்குப் பலன் இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். பில்லி சூனியம் வைக்கும் அளவுக்கு அரசியல் தரம் தாழ்ந்துவிட்டதோ என்பதுதான் நம் கவலை. 'இது உண்மையல்ல வதந்திதான்' என்று எதிரணி உண்மையான தகவல் தருமா?
அரசியல் அண்ணாசாமியின் அப்பாவிக் கேள்விகள்
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தில் 70 சதவிகிதம் நிறைவேறிவிட்டதாகச் சொல்கிறார் டி.ஆர். பாலு. சேது சமுத்திரத்தில் கப்பலை ஓட்டுங்கள், நாங்கள் பயணம் செய்கிறோம் - ஜெயலலிதா
இப்படி குண்டக்க மண்டக்க ஏதவது சொல்லியே காலத்தை ஓட்டுங்கள்.
* வரும் தேர்தலில் அண்ணா தி.மு.க.விற்கும் வாய்ப்பில்லை, தி.மு.க.வும் ஜெயிக்க முடியாது - ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி
அப்போ நீங்கதான் அடுத்த முதல்வரா?
* வரும் தேர்தலில் நாங்கள் 40 பார்லிமென்ட் தொகுதிகளிலும் 234 சட்டசபைத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம் - அகில இந்திய சமத்துவக் கட்சித் தலைவர் சரத் குமார்.
நல்ல வேளை ஜெயிக்கிறோம்னு சொல்லல்லையே! நீங்கதான் அகில இந்தியக் கட்சியாயிற்றே! - 540 பார்லிமென்ட் தொகுதியிலேயும் நிக்கலாமே?
* தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கோஷ்டிகளைக் கணக்கிட தில்லியிலிருந்து அருண்குமார் வருகிறார் - செய்தி
இதிலென்ன கஷ்டம்? எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதோட ஒன்னைச் சேத்துக்குங்க.
* பெட்ரோல் டீசல் விலை மார்ச் மாதம் வரை உயராது.
அப்போ மெய்யாலுமே தேர்தல் மார்ச் மாசத்துக்குள்ள வந்துடுமா?
* அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் கங்கிரசின், தேசத்தின் எதிரிகள் - சோனியா காந்தி
நிச்சயமா இதை இடதுசாரிக் கட்சிகளை நினைத்துச் சொல்லவில்லை, நம்புங்க.
* தி.மு.க. அரசைக் கவிழ்க்க வேண்டும் என்று சொல்ல ஜெயலலிதாவிற்கு எந்த தகுதியும் இல்லை. மருத்துவர் ராமதாஸ் - ப.ம.க. நிறுவனர்.
அந்த தகுதி உங்களைத் தவிர வேறு யாருக்கு உண்டு?
* நாத்திகம் பற்றி இரண்டு மணி நேரம் பேசுவேன். ஆனால் ஆஸ்திகம் பற்றி பேசத் தெரியாது - ஆற்காடு வீராசாமி.
தப்பும் தவறுமாகப் பேசுவதற்கு பதில் பேசாமலிருப்பதற்கு நன்றி.
* அந்த இரண்டு பெண்மணிகள், சோனியா காந்தியும், பிரதிபா பாடிலும் இருக்கிற வரையில் எங்களுக்குக் கவலையில்லை. எங்களை யாரும் டிஸ்மிஸ் செய முடியாது. ஆற்காடு வீராசாமி - தமிழக அமைச்சர்.
உங்கள் கவலையெல்லாம் இந்த உள்ளூர்ப் பெண்மணியால்தானே?
* செய்தி ஒன்று - பார்வை இரண்டு
மத்திய அரசில் தி.மு.க. எல்லா மதிப்பையும் இழந்துவிட்ட பிறகு உண்ணாவிரதம் என்பது கோமாளித்தனம். - அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா
காந்தியின் வழிமுறையைத்தான் கருணாநிதி பின்பற்றுகிறார். தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி - காங்கிரஸ் கட்சி
மேலும் பல.....
|
|
|
|
|
Source: suratha.com
|
|