"ராமர் என்ற பெயரை நான் வெறுப்பவன் அல்ல, இந்த உண்மையை ரஜினிகாந்த் சாமியார்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" - கலைஞர்.
பெண்ணரசி(யல்)
முழுக்க முழுக்கப் பெண்களாலேயே பெண்களுக்காக ஒரு புதிய அரசியல்
கட்சி United women’s front என்ற
பெயரில் முன்னாள் துணைக் குடியரசுத்தலைவர் கிருஷ்ன காந்த் அவர்களின்
துணைவி சுமன் கிருஷ்ணகாந்த் அவர்களால் தில்லியில் துவங்கப்பட்டு
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. "மொத்த மக்கள்
தொகையில் 50 சதவிகிதம் பெண்கள் இருந்தும் மக்கள் அவையில் 8.8
சதவிகிதமே பெண்கள் இருக்கிறார்கள். பெண்கள் அரசியலில் பின்னுக்குத்
தள்ளப்படுவதைத் தடுத்து அவர்களை முன்னணிக்குக் கொண்டு வருவது இந்தக்
கட்சியின் குறிக்கோள்" என சுமன் கூறுகிறார். (ஆமாம், அடிக்கடி
பெண்களுக்கு 33.33 சதவிகித ஒதுக்கீடு பற்றிப் பேசுவோமே. அது என்ன
ஆச்சு?)
மங்கையரில் சிறந்த மாயாவதி(?) - எண்மரோடு ஒருவரானார்
உத்தர் பிரதேசத்தின் முதல்வி மாயாவதி உலகத்தின் மிகச்சிறந்த எட்டு
பெண்மணிகளில் ஒருவராக அமெரிக்க பிரபல பத்திரிகையான நியூஸ்
வீக்கினால் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பல
இன்னல்களையும்தடைகளையும் மீறி, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்துவதற்காகத் தான் பட்ட பாடுகளை விவரித்திருக்கிறார்
மாயாவதி. உத்தர் பிரதேசத்தில் தான் செய்த சாதனையை மற்ற
மாநிலங்களிலும் செய்து காட்டி மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதுதான்
தன் லட்சியம் என்று மாயாவதி தனது பேட்டியில் சொல்லியிருக்கிறார் (யார்
யாருடன் எவ்வப்போது கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும், யாரைக் காலை
வாரிவிட வேண்டும் என்பது பற்றி மட்டும் சொல்லவில்லை).
பா.ஜ.க.வுக்கு பிரதமர் சொன்ன ஆறுதல்
அணு சக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பின்னடைவு பற்றி மன்மோகன் சிங்: "வாழ்க்கையில்
சில ஏமாற்றங்களை ஏற்றுக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்!"
ஆட்சி கவிழும் என்று நம்பிக்கொண்டிருந்த பா.ஜ.க.வுக்கும் இந்த
ஆறுதல் வார்த்தை பொருந்தும்!
இது கொஞ்சம் ஓவர்!
"என்னைக் கொல்ல சதி" என்கிறார், ஜெ. அவருக்குத் தீவிரமான பாதுகாப்பு
தேவை என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
என்றாலும் ஸ்டாலின் ஏதோ அப்பாவிடம் சொல்லி இவரைக் கொலை செய்ய
முயற்சி செய்வதாகக் கதை விடுவது கொஞ்சம் ஓவர். "மோரில் விஷம், லாரி
மோதிக் கொல்ல சதி, சென்னா ரெட்டி தகாத முறையில் நடந்து கொண்டார்"
வரிசையில் சேர்க்கத் தக்கது. (You are making
a good case, - if all would agree it is really good- appear bad,
madam!)
சோமாசி மாற நாயனார் (சோமயாஜியால் மாறிய நாயனார்)
கர்நாடகா குமரஸ்வாமியை எல்லாரும் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டோம்,
பாவம். சோதிடர் சோமயாஜி என்பவர்தான், "பா.ஜ.க.விடம் முதல்வர் பதவியை
ஒப்படைக்காதீர்கள். உங்கள் செல்வாக்கு மங்கி விடும்" என்று
வலியுறுத்தியிருக்கிறார். குமாரஸ்வாமி, பாவம், "அது தப்பில்லையா?
பாவமாச்சே?" என்றெல்லாம் கேட்டிருக்கிறார். சோதிடர்தான் "அதெல்லாம்
தப்பில்லை, பரிகாரம் செய்து விட்டால் போச்சு" என்று
சொல்லியிருக்கிறார். குடும்ப சோதிடர் பேச்சைத் தட்ட முடியுமா?
அதிகப்பிரசங்கி அண்ணாசாமி
அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் ரகளை- சபாநாயகர் மீது
தாக்குதல். கூண்டோடு கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம்
அ.அ: அப்பாடா,
தொல்லை ஒழிந்தது! இனிமேலாவது சட்டசபை ஒழுங்கா நடக்குமென ஆளும் கட்சி
நிம்மதிப் பெருமூச்சு விடலாம்!
என் வீட்டுக்குள் வந்த நபருக்கு மாடிக்கு வருவதற்கு வழி எப்படித்
தெரியும்? மாடியில் உள்ள லைப்ரரி வரை செல்வதற்கு அவரால் எப்படி
முடிந்தது? - ஜெயலலிதா
அ.அ:
அப்படின்னா உங்க வீட்டுக்குப் பழக்கப்பட்டவராத்தானே இருக்கும் -
நிச்சயமா ஸ்டாலினும் கருணாநிதியும் நீங்க இருக்கும் திக்குப் பக்கம்
கூடக் கண்ணெடுத்துப்பாக்க மாட்டாங்க!
சேது சமுத்திரத் திட்டத்தை உங்கள் கூட்டணியிலுள்ள வை.கோ.வே
ஆதரிக்கிறாரே என்ற கேள்விக்கு, 'ந்¡ன் கூடாது என்று சொல்வதற்கான
காரணங்களைச் சொல்லி அவரிடமே கேளுங்கள்' என்றார் ஜெயலலிதா!!
அ.அ:
அம்மா எது சொன்னாலும் அதுதான் சரி - வேறே பேச்சே கிடையாது - ஆமாம்,
அம்மா என்ன சொன்னாங்க? என்பாரோ வை.கோ.
காங்கிரஸ் அணியின் சுறு சுறுப்பிற்கும் மத்தியில் தேர்தல் வரும்
என்ற யூகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
அ.அ:
காங்கிரசுக்கும் சுறு சுறுப்புக்குமே சம்பந்தமில்லை என்பது
எங்களுக்குத் தெரியாதா?
தொப்புளில் பம்பரம் விட்டவர்கள் எல்லாம் இன்று முதல்வர் கனவு
காண்கிறார்கள் - சரத்குமார்
அ.அ:
முதல்வர் கனவு உங்களுக்கு மட்டும் சொந்தமா? பம்பரம் ஏந்திய
தொப்புளுக்கு உரியவர் கூட முதல்வர் கனவு காணலாம். உங்களுக்கென்ன? (ஏதோ,
நம்மாலானது, கொளுத்திப் போட்டு விட்டோம்!)
செய்தி மட்டும் - No comments
'செண்டிமெண்ட்' ஆக ஒரு விஷயம் பூதாகரமாகப் பேசப்படுகிறது. அதன் 'சீரியஸ்னஸ்'
இன்னும் தமிழ்நாட்டுக்குத் தெரியவில்லை. வட மாநிலங்களில் உள்ளவர்கள்
புரிந்துகொண்டிருக்கிறார்கள். நமக்குக் காரியம் நடக்கணும். வட
இந்தியாவில் உள்ள தலைவர்கள் எல்லோரும் கலைஞரின் நண்பர்கள்தான்.
அவர்களிடம் பேசி, கலைஞர் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறேன் - ரஜினி காந்த்
ராமர் என்ற பெயரை நான் வெறுப்பவன் அல்ல, இந்த உண்மையை ரஜினிகாந்த்
சாமியார்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்" - கலைஞர்
மது இல்லாத இந்தியாவை உருவாக்கிட வேண்டும் - கலைஞர், முதல்வர்-
காந்தி ஜெயந்தி விழாவில்
டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்காக ஆள் எடுக்கப்படும் - தமிழக அரசின்
அறிவிப்பு
மேலும் பல... |