'பச்சி சாரு' ரசம்
கர்நாடக மாநிலத்தில் புளியை நீர்க்கக் கரைத்துக் கொண்டு அதில்
ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து ஒரு பச்சை
மிளகாயை நசுக்கிச் சேர்த்து உப்பும், வெல்லமும் சேர்த்துக்
கொதிக்க வைக்காமல் சாதத்தில் கலந்து உண்பார்கள். இதை
அடுப்பில் வைக்காத காரணத்தினால் 'பச்சி சாரு' என்பார்கள்.
*****
'சிட்ல
சாறு' ரசம் :
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு - ஒரு அரைக்கால்,
பெருங்காயம் - 1
tsp
அளவு,
சீரகம் - 1 1/2
tsp
அளவு,
நெய் - ஒரு மேஜைக்கரண்டி,
புளி - ஒரு பெரிய எலுமிச்சம்பழ அளவு,
உப்பு - 1
tbsp,
ரசமிளகாய்த்தூள் - 3
tsps,
கொத்துமல்லித்தழை - ஒரு பெரிய கட்டு,
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை :
ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் துவரம்பருப்பு, பெருங்காயம்,
சீரகம் முதலியவற்றை ஒன்றாகப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
புளியைச் சுட வைத்து நீராகக் கரைத்து வைத்துக் கொள்ளவும். அதை
ஒரு பாத்திரத்தில் ஊற்றி வறுத்த பருப்பைப் போட்டு
வேகவைக்கவும். அதனுடன் ரச மிளகாய்த்தூளையும், உப்பையும்
போட்டுக் கொதிக்க வைத்து, கொத்துமல்லித் தழையை நன்றாக அலசிக்
கழுவிப் பொடியாக நறுக்கிக் கொதிக்கும் பொழுதே ரசத்தில்
சேர்த்துக் கொதிக்க விடவும்.
N.B:
இந்த ரசத்தில் பருப்பு குழைய வேகாது. கடித்து உண்ணும்
பதத்தில் இருக்கும். சுவையில் மாறுபட்டுள்ள இந்த ரசம்
கொத்துமல்லி பெருங்காய மணத்துடன் சுவையாக இருக்கும்.
பெரிய கத்தரிக்காயைச் சுட்டு உப்பும் பாலும் பாலாடையும்
சேர்த்து கத்தரிக்காய் பால் பஜ்ஜி செய்தால் இந்த ரசத்துடன்
உண்ணப் பொருத்தமாக இருக்கும்.
*****