தேவையான பொருட்கள்:
முளை கட்டிய கொள்ளு – 200
gms
பொடியாக நறுக்கிய வெங்காயத்துண்டுகள் - 200
gms
பொடியாக நறுக்கிய தக்காளித்துண்டுகள் – 200
gms
பூண்டு – 4 பற்கள்
சிகப்பு மிளகாய் - 3
பொடியாக அரிந்த இஞ்சி – சிறு துண்டு
கறிவேப்பிலை கொத்துமல்லித் தழை – சிறிது
கடுகு – ஒரு தேக்கரணடி
புளி – எலுமிச்சையளவு
சிகப்பு மிளகாய்த்தூள் – 3
tsps
தனியாத்தூள் – 2
tsps
மஞ்சள் பொடி – 1/4
tsp
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு .
செய்முறை:
கொள்ளை முன் தினமே ஊற வைத்து முளை கட்டி தயாரித்துக்
கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சிகப்பு மிளகாய்
கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு வெங்காயத் துண்டுகளையும்
நறுக்கிய பூண்டையும் இஞ்சித்துண்டுகளையும் வதக்கிக் கொண்டு
தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பிறகு தனியாத்தூள் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து
வதக்கிக் கொள்ளவும். முளை கட்டிய கொள்ளை சற்று வதக்கி
விட்டு புளிக் கரைசலை சேர்த்து உப்பு சேர்த்துவேக வைத்துக்
கொள்ளவும். பின்னர் கொத்துமல்லித் தழை பொடியாகத் தூவி
இட்லி தோசை அல்லது சாதத்துடன் சேர்த்து உண்ண சுவையாக
இருக்கும். முளை கட்டிய வெந்தயத்தை உபயோகித்தும் இந்தக்
குருமாவை செய்து அசத்தலாம்.
******