தேவையான
பொருட்கள்:
பச்சைப் பட்டாணி, வெள்ளைப் பட்டாணி, மொச்சை, துவரை, காராமணி,
வேர்க்கடலை,பயறு,கோதுமை,சிறிய சிறிய கொண்டைக்கடலை வகைக்கு
ஒரு மேசைக்கரண்டி, துருவிய தேங்காய் – இரண்டு மேசைக்கரண்டி,
உப்பு ருசிக்கேற்ப, மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, (பச்சை
மிளகாய் – 2, இஞ்சி- சிறு துண்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்),
வறுத்துப் பொடிக்க:
சிகப்பு மிளகாய் -3, தனியா – 2
tsp,
தாளிக்க:
எண்ணெய் – 1
tsp,கடுகு
– ½
tsp,
உ.பருப்பு – 1
tsp,
கடலைப்பருப்பு – 1
tsp,
கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயத்தூள் – சிறிது.
செய்முறை:
1 எல்லா வகை சுண்டல் வகைகளையும் ஒன்றாக எட்டு மணி நேரம் ஊற
வைக்க வேண்டும்.
2. அவற்றோடு மஞ்சள் தூள் சேர்த்துப் பதமாக வேக வைத்துக்
கொள்ளவும்.
3. தண்ணீரை வடித்து விடவும்.
4.மிளகாய், தனியாவை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக்
கொள்ளவும்.
5.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு,
கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்துக்
கொள்ளவும்.
6. அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து, வேக
வைத்த சுண்டலையும் சேர்த்து நன்றாகக் கிளறிவிடவும். வறுத்துப்
பொடித்த பொடியையும் சேர்த்தவுடன், உப்பு, கொத்துமல்லி,
தேங்காய்த் துருவலையும் கலந்து பரிமாறவும்.
******* |