தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த கொள்ளு
–
20
gms
தனியா
–
ஒரு
tsp,
சீரகம்
–
1
tsp,
மிளகு
–
1
tsp,
பூண்டு
–
6 பற்கள்,
வற்றல் மிளகாய்
–
4,
புளி –
பெரிய நெல்லிக்காயளவு,
பெருங்காயம் –
சிறிது,
தக்காளிப்பழம் –
4,
உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தேவையான அளவு.
செய்முறை:
புளியை
ஊற வைத்துக் கரைத்து வைத்துக் கொள்ளவும். தக்காளியைச் சற்று
வேகவைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். புளிக் கரைசலுடன்
தக்காளிச் சாற்றை சேர்த்துத் தண்ணீர், பெருங்காயம் சேர்த்துக்
கலந்து வைத்துக் கொள்ளவும். கொள்ளை மிக்சியில் பொடி செய்து
கொள்ளவும். தனியா, ஜீரகம், மிளகு, மிளகாய் வற்றலை பொடித்து
வைத்துக் கொள்ளவும். பூண்டைத் தட்டிக் கொள்ளவும்.
தக்காளி, புளிக் கரைசலில் பொடித்த கொள்ளையும்,
மற்றவற்றையும் போட்டுக் கரண்டியால் கலந்து அடுப்பில் வைத்து
நுரை கட்டி வரும் பொழுது இறக்கி விடவும். கொதிக்க விட
வேண்டாம்.
பயன்கள் :
இந்த ரசம் நெஞ்சில் கபம், சளி கட்டி
கொண்டவர்களுக்கு கை கொடுக்கும் மருந்து. செய்வதும் எளிது.
சாதத்துடன் உண்ணலாம். டம்ளரில் ஊற்றிக் குடித்தால் தொண்டைப்
புண், சளியினால் அவதியுறுவோருக்கு இதமாக இருக்கும்.
*******