தேவையானவை
இறால் - 1 கப் (இருவருக்கு)
மிளகாய்ப் பொடி - 1 ஸ்பூன்
மல்லிப் பொடி - 1 ஸ்பூன் மஞ்சள் பொடி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - 4 கீற்று
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 3 பல்
எண்ணெய் - தாளிக்க
செய்முறை:
1. முதலில் தேங்காய், சோம்பு, பூண்டு மிக்ஸியில் போட்டு
அரைத்துக் கொள்ளவும்.
2. இறாலைக் கழுவி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் பொடி,
உப்பு முதலில் அரைத்த விழுது எல்லாவற்றையும் கலந்து வைத்து
கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டு, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத்
தாளித்துக் இறால கலவையை கொட்டி, தண்ணீர் விட்டு, இறால் வெந்து
எண்ணெய் திரண்டவுடன் இறக்கவும்.
4.கொத்தமல்லி தூவி, சூடாகப் பறிமாறவும்
*******