காரட், பீன்ஸ், வாழைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு ....
தேவையான பொருட்கள் :
காரட் - 1 பீன்ஸ் - 8 வாழைக்காய் - 1/2 கொத்தவரங்காய் - 8 முருங்கைக்காய் - 1 பூசணிக்காய் - 1 துண்டு பரங்கிக்காய் - 1 துண்டு சேனைக்கிழங்கு - 1 துண்டு கத்தரிக்காய் - 2 உருளைக்கிழங்கு - 1 பச்சைப்பட்டானி - 1 கப் (ஊரவைத்தது) நிலக்கடலை - 1 கப் (ஊரவைத்தது) தேங்காய் - 1/2 மூடி சீரகம் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 6 தயிர் - 2 கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு தேங்காயெண்ணெய் - 1 கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
* எல்லாக் காய்கறிகளையும் 1 அங்குல நீளத் துண்டுகளாக நறுக்கவும். * காய்கறிகளுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும். * சீரகம், பச்சை மிளகாய், தேங்காய் இவற்றை ஒன்றாக அரைக்கவும். * காய்கறிகள் வெந்தவுடன் அரவையை அவற்றுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும். * கெட்டியானதும் இறக்கி வைக்கவும். * ஆறிய பிறகு தயிர் சேர்க்கவும். * தேங்காய் எண்ணெய் காய்ச்சி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
மேலும் பல.....
|