பச்சைக் கடலைப்பருப்பு,பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட்,காலி ப்ளவர் ...
தேவையான பொருட்கள் :
பச்சைக் கடலைப்பருப்பு - 250
gms அரிசி - 150
gms பாசிப்பருப்பு - 200
gms உளுத்தம்பருப்பு - 100 gms பீன்ஸ் - 50 gms
முட்டைக்கோஸ் - 25 gms கேரட் - 50
gms காலி ப்ளவர் - ஒரு கப் (உதிர்த்த பூக்கள்) வெங்காயம் - இரண்டு தக்காளி - 2 பச்சை மிளகாய் - 5 தயிர் - தேவைக்கேற்ப வேர்க்கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி தேங்காய்த்துருவல்- ஒரு மேசைக்கரண்டி சமையல் சோடா - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
அரிசி, பருப்பு வகைகளை உலர்த்தி சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து ரவை போல் உடைத்துக்கொள்ளவும். முதல் நாள் இரவே உப்பு சேர்த்து, நீர் சேர்த்து, கெட்டியாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். மறுநாள் காய்கறிகளைப் பொடியாக நறுக்கி சிறிது எண்ணெய் சேர்த்து சூடாக்கி சுருள வதக்கி மாவில் சேர்க்கவும். மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் முதலியவற்றை சற்று சிவக்க வறுத்து சேர்க்கவும். தயிரில் தேவையான நீர் சேர்த்து, மாவுடன் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து வைக்கவும். அதனுடன், வறுத்த நிலக்கடலைப் பருப்பை பொடித்துப் போட்டு, சிறிதளவு சோடா சேர்த்து, அகலமான தட்டுகளில் ஊற்றி வேக வைக்கவும். முடிவில் சுவையான காய்கறி பருப்பு இட்லி தயார். தேங்காய் சட்னி அல்லது தக்காளிக் குருமாவுடன் சுவைக்கலாம்.
மேலும் பல..... |