தேவையான பொருட்கள்:
ராகி மாவு : 2 கப்
கோதுமை மாவு: 1 கப்
பாசிப்பருப்பு : 50
gms
ஜவ்வரிசி: 100
gms
ஏலக்காய் : 5
செய்முறை
:
முதலில் ராகி மாவு, கோதுமை மாவு இரண்டையும் சலித்து
இரண்டையும் வாணலியில் வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பு, ஜவ்வரிசி இரண்டையும் தனிதனியே வறுத்தெடுத்துக்
கொண்டு ஏலக்காயுடன் சேர்த்து மிக்சியில் பொடி செய்து
கொள்ளவும். (இதைச் சலிக்கத் தேவையில்லை). எல்லாவற்றையும்
ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும். இதுவே கீர் தயாரிக்கத்
தேவையான பொடியாகும். தயாரித்து வைத்துக் கொண்டால் தேவையான
பொழுது பயன்படுத்தலாம்.
ஐந்து பேருக்கு கீரைத் தயாரிக்க இரண்டு கப் தண்ணீரில்
பொடியைக் கரைத்துக் கொண்டு அடுப்பின் மீது வைத்து வேக
விடவும். வெந்து கஞ்சி போன்றானதும் தேவையான பாலை ஊற்றி
சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். சிறிது நேரம்
கொதித்த பின்னர் இறக்கி வைக்கவும். இதை ஆறவிட்டு ரோஸ்
எஸ்ஸென்ஸ் கலந்து ஃப்ரிஜ்ஜில் வைத்து விடவும். தேவையான
பொழுது முந்திரி, பாதாமிப் பருப்பை வறுத்து சேர்த்து சூடாகவோ,
குளிரவைத்தோ குடிக்கலாம்.
*******