தேவையான
பொருட்கள்:
பழைய புளி : பெரிய எலுமிச்சம்பழ அளவு
பெருங்காயம் : 1/2 தேக்கரண்டி
துவரம்பருப்பு : 1 தேக்கரண்டி
கடுகு : 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் : 3
வெந்தயம் : 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை : 2 கொத்து
நல்லெண்ணெய் : தேவையான அளவு
சாம்பார் பொடி : 2 1/2 மேசைக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
வெல்லம் (விருப்பமென்றால்)
சுண்டைக்காய் வற்றல் : தேவையான அளவு.
வெல்லம் (விருப்பமென்றால்)
செய்முறை:
முதலில் புளியை வெந்நீரில் ஊற வைத்துக் கெட்டியாகக்
கரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி பெருங்காயத்தைப்
பொறித்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு சுண்டைக்காய்
வற்றலை வறுத்து எண்ணெயில் போட்டு பொறித்தெடுத்து தனியாக
வைத்துக்கொள்ளவும்.
பின்னர் கடுகை வெடிக்க விட்டு, துவரம்பருப்பு, வெந்தயம், மிளகாய்த் துண்டுகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப்
போட்டு ஒவ்வொன்றாக நன்கு வறுக்க வேண்டும். லேசாகப் பொன்
நிறம் வந்தவுடன் சாம்பார் பொடியைப் போட்டு மேலும்
வறுக்கவும். (அதிகம் வறுத்தால் மணமும், சுவையும் வேறுபடக்
கூடும்).
இப்பொழுது கரைத்த புளித் தண்ணீரை அதில் விடவும். வறுத்து
வைத்துள்ள சுண்டைக்காய் வற்றலையும் அதனுடன் சேர்த்து, தேவையான
அளவு உப்பு போடவும். பெருங்காயத்தைச் சேர்த்து மட்டான தழலில்
கொதிக்க விடவும். கொதித்ததும் ஒரு ஸ்பூன் அரிசி மாவை நீரில்
கரைத்து சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
சுவைக்கு
சுவை. உடலுக்கும் நன்மை.
*******