Home  
இதழ் 334

அக்டோபர் 15 2007

Login

 

Username

Password

Click Here to Login

New Members!
Register Here..
 

Your Advertisement Here

 
  add nilacharal to your favourites nilacharal as your homepage  
Home >>Suvadugal

சிங் (1)
- சீனு

உங்கள் கருத்துகள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க

சிவன் ஒரு சமயம் மிகக் கோபத்துடன் கால பைரவராகத் தோற்றமெடுத்தார் என்று நான் படித்ததுண்டு. ஒரு நாயும் அந்தக் கால பைரவருடன் கூடச் சென்றதால் நாயைக் கூட 'பைரவர்' எனச் சிலேடையாகக் கூப்பிடுவதுண்டு.


மனிதர்கள் பற்றி எப்படி கணக்கிலா கூற்றுகள், பழமொழிகள் இருக்கின்றனவோ அத்தனை மடங்கு நாய்கள் பற்றியும் இருக்கின்றனவென்று எல்லோருக்கும் தெரியும். நான் ஒன்றும் புதிதாய்ச் சொல்லுவதற்கில்லை. எனினும் என் மனதில் அடிக்கடி நினைவுக்கு வரும் ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன்.

மிலான் குண்டெரா (Mila Kundera) எனும் செக்கோஸ்லவாக்கிய எழுத்தாளர் கூறுகிறார்:


"நாய்கள், தேவலோகத்திற்கும் நமக்கும் உள்ள ஒரு இணைப்பு. அவைகளுக்கப் பெரும் தீய செயல், தீய எண்ணங்கள், பொறாமை, போராண்மைத்தனம் இவைகளைப் பற்றிச் சிறிதும் தெரியாது. ஒரு நாயுடன் ஒரு மலைப்பகுதியில் உட்கார்ந்திருப்பது தெய்விகப் பூங்காவில் இருப்பது போலாகும். அங்கு ஒன்றுமே செய்யாது சும்மாயிருப்பினும் சலிப்புத் தட்டாது. அங்கே ஒரு அமைதி நிலவும்".


சிவன் ஒரு சமயம் மிகக் கோபத்துடன் கால பைரவராகத் தோற்றமெடுத்தார் என்று நான் படித்ததுண்டு. ஒரு நாயும் அந்தக் கால பைரவருடன் கூடச் சென்றதால் நாயைக் கூட 'பைரவர்' எனச் சிலேடையாகக் கூப்பிடுவதுண்டு.

நான் பிறந்த புகளூருக்குப் பக்கத்தில் இருக்கும் மிகப் புராதனமான புகழி மலையில் முருகனது சன்னதிக்குச் சற்றே கீழே இருக்கும் ஒரு சிறு கோவிலில் பரமசிவன் ஒரு நாயுடன் பைரவராகக் காட்சி கொடுக்கிறார்.
கால பைரவரான பொழுது சிவனுக்கு நாய் வாகனம்.

பிராணிகளின் அபிமானியாய்ப் பிறந்த எனக்கும் வாயில்லா ஜீவன்களுக்குமுள்ள தொடர்பைப் பற்றி ஒரு சீனாயனமாக (சீ+நாய் இல்லை! சீனு+நாய்) பிறகு எழுதுகிறேன். இப்பொழுது எனது சிங்கைப் பற்றி மட்டும் எழுதுகிறேன்.

1973ம் வருடம் ஜனவரி 16ம் தேதியன்று, எங்களுடைய ஃபெம்மி2 (Femme2) முதல் தடவையாக நாங்கள் அதிசயமும் ஒரு விதத்தில் மகிழ்ச்சியுமடையும்படி நான்கே குட்டிகளைப் பெற்றது (ஒரு பெண் குட்டி மூன்று ஆண் குட்டி). பொதுவாக நாய்கள் ஒரே சமயத்தில் ஆறு குட்டிகளுக்குக் குறையாமல் பெற்றுக் கொடுப்பது தான் வழக்கம். ஒவ்வொரு குட்டியையும் அதனை விரும்பி எடுத்துக் கொண்டு அதனைக் கவனமாகவும் அன்புடனும் வளர்க்கத் தயாராக இருப்பவராகப் பார்த்துக் கொடுக்க வேண்டும் (இந்த விஷயத்தில் நான் மிகவும் கண்டிப்பானவன்). எண்ணிக்கையின் குறைவு எங்களுக்குச் சிறிது ஆறுதல் கொடுத்தது.

ஃபெம்மி2 வீட்டில் வளர்க்கப் பட்ட ஒரு கலப்பின நாய் (home-bred hybrid) குட்டிகளின் தந்தையோ குழந்தைப் பேறேயில்லாத எனது நண்பர் ஒருவர் அவருடைய மனைவியுடன் அவர்களது சொந்தக் குழந்தை மாதிரி வளர்த்து வந்த ட்ரிகர் (Trigger) எனவழைக்கப் பட்ட, அதிசியமாக ஒரு டாஷ்ஷண்டிற்கும் (dachshund) அல்சேஷியனுக்கும் (Alsatian) பிறந்த, எந்த நாயுடனும் உறவு கொள்ள இச்சையேயில்லாமிருந்த ஒரு அற்புதமான நாய்.

அச்சமயம், இந்திரா நகரில் நாங்கள் குடியிருந்த விட்டிற்கு நாலாவது வீட்டிலிருந்த சிங்க் என்பவரின் மகனும் மகளும் என் மனைவியை மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்ததினால் ஒரு குட்டியை என் மனைவி அவர்களுக்குக் கொடுத்து விட்டாள். குழந்தைகளின் பெற்றோர்கள் குட்டியைச் செல்லமாக வளர்ப்ப்பதற்கு வாக்குறுதியுமளித்தனர். மற்ற மூன்று குட்டிகளும் செல்லப் பிராணிகளை நன்கு வளர்ப்பவர்களிடம் கொடுக்கப் பெற்றன. எல்லாக் குட்டிகளையும் கொடுத்தபின் நாங்கள் நிம்மதியுடன் பெருமூச்சு விட்டோம். ஏனென்றால் மிகச் செலவாளியான நான் எவ்வளவுதான் நாய் வளர்ப்பதில் ஆசையுள்ளவனாயினும், ஒரு நாய்க்கு மேல் வளர்க்கக் கட்டுப்படியாகாது என்று எனது மனைவி கண்டிப்பாகக் கூறிவிட்டாள்.

நாய்குட்டிகளை யெல்லாம் கொடுத்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. நாங்கள் சற்றும் எதிர்பாரமல் சிங்கின் பையன் நாங்கள் கொடுத்த குட்டியை தனது அப்பா திருப்பிக் கொடுத்துவிடச் சொன்னாரெனக் கூறிவிட்டுச் சென்று விட்டான். நான் மறு நாள் அந்தப் பையன் வீட்டிற்குச் சென்று விசாரித்த பொழுதுதான் அவன் தந்தை, டெல்லிக்கு மாற்றலாகப் போகிறதென்றும் அவர்கள் கூட நாய்க்குட்டியை எடுத்துச் செல்ல இயலாதென்றும் கூறினார். பிராணிகள் மீது உண்மையான அன்புள்ளவர்கள் வேலை மாற்றமென்றால் தன் வளர்ப்புப் பிராணிகளை அப்படியே விட்டு விட்டுச் செல்வார்களா? எனக்குண்டான வருத்தத்தையும் கோபத்தையும் அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து என் மனைவியிடம் தகவலைச் சொன்னேன். என்னைவிடப் பன்மடங்கு கோபமும் விரக்தியுமடைந்த என் மனைவி திரும்பி வந்த நாய்க்குட்டியை சிங்க் என்ற பெயரிட்டே அழைக்கலானார்.

ஒரு நாள் விடிகாலையில் பலத்தக் கூக்குறலுடன் என்னை எழுப்பிய என் மனைவி "ஆட்டோரிக்ஷாக்காரன் சிங்க் மேலே ஏற்றிவிட்டு ஓடிவிட்டான். ஐயோ சிங்க் அநியாயமாய்ப் போய்விட்டானே" எனக் கதறலானாள்.
மிகப் பதற்றத்துடன் எழுந்த நான் உடனே ஒரு சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே ஓடி வந்தேன். எங்களது சிங்க் இரத்தப் பெருக்குடன் கீழே விழுந்து கிடந்தான். சுற்றிலும் இருந்த மக்கள் ஒரே குரலில் "குட்டி பிழைப்பது சந்தேகம தான். எடுக்கலாமென்று போனால் கடிக்க வருகிறது" எனக் கூறலானார்கள்.

(தொடரும்)
மேலும் பல.....


YOUR FEEDBACK HERE - உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்

Name *

Country *

Email-Id *

Note: Email-Id will not be published
 

'அம்மா' can be typed as 'ammaa' in english

உங்கள் கருத்துக்களை ஆங்கில வடிவில் தட்டச்சு செய்யுங்கள்
(
Type your feedback in English)


(உதாரணம்: 'அம்மா' என்பதை
'ammaa' என தட்டச்சு செய்யவும்)

நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ததை தமிழில் இங்கு காணலாம்
(See your feedback in Tamil
)

Weekly Newsletter

Yes, I would like to receive it.
Maybe later

 

 

Source: suratha.com

About us | Team | Contact Us | Press | Feedback | Favourites | Communities | Shopping | Services | Site map

tamil magazines, Hindu devotional songs, tamil links, tamil movies, tamil songs, tamil dvd, tamil news, tamil, tamil comedy, tamil movie, tamil music DVDs, bharatanatyam, Yoga DVDs, carnatic music, tamil cinema, sivaji movie, cricket world cup, tamil ebooks, web design, web design resources, global warming, outsourcing, mutual funds, India Pakistan cricket series, Kuselan, India Cricket, Sultan The Warrior

A web magazine from Nilacharal Ltd
Privacy Policy|Terms of use|Disclaimer| Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide

We use cookies on this website. By using this site, you agree that we may store and access cookies on your device. Find out more and set your preferences here . X