 |
இதழ் 335 |
 |
அக்டோபர் 22 2007
|

|
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
 | Home
>> | Suvadugal |
| | | எக்காலும் வீட்டினுள்ளே சிறிதளவு கூட அசுத்தம் செய்யாத சிங்கைப் போல் ஒரு நாயை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.
<<<சென்ற வாரம்
நான் சிங்கைக் கைகளில் எடுத்துக் கொண்டு அவன் பொறுக்க முடியாத வலியால் என்னைக் கடித்துக் கொண்டிருப்பதை லட்சியம் செய்யாமல் சாலையில் ஓடிக் கொண்டே தற்செயலாக அங்கு வந்த ஒரு காலி ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி நேரே பங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திற்கு முன்னேயிருந்த கால்நடைகள் மருத்துவமனைக்கு விரைந்தேன். எனக்கு முன்பே நன்கு பரிச்சயமான நாயர் என்ற பெயர் கொண்ட அந்த வெடெர்னரி டாக்டர் உடனே குட்டியை அறுவைச் சிகிச்சை அறைக்கு எடுத்து வரச் சொல்லி, கூட வந்தார். வலியைக் குறைப்பதறகாக சிங்கிற்கு ஊசி போட்டு விட்டு, "குட்டி கடித்துக் கொண்டிருப்பதைக் கூடப் பொறுத்துக் கொண்டு உடனே தூக்கிக் கொண்டு வந்ததினால் உங்களது குட்டி பிழைத்து விடும் இல்லாவிடில் மிக இரத்தச்சேதம் ஆகி இறந்து போயிருக்கும்" என்று சொல்லி தன் உதவியாளர்களில் ஒருவரை அழைத்து என் இரண்டு கைகளிலும் ஏற்பட்டிருந்த காயங்களுக்கத் தக்கபடி சிகிச்சை செய்யச் சொல்லி அவருடன் என்னை அனுப்பினார்.
சிங்கின் பின்புறத்து இடது காலில் ஏற்பட்டிருந்த எலும்புப் பிளவுகளுக்கு தையல்கள் போட்டு, இரு பக்கமும் மரத்தகடுகள் இட்டு ஃப்ரென்ச் சாக்குப் பொடியான கலவையை வேண்டிய அளவிற்கு நன்கு பூசிய பின் எலெக்ட்ரிக் ட்ரையரால் காய வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து நாயர் அவர்கள் என்னிடம் அவனை ஜாக்கிரதையாக் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போய் நன்கு கவனித்துக் கொண்டு மூன்று வாரம் கழித்து மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு வருமாறு சொல்லியனுப்பினார். அந்தக் கால்நடை வைத்தியர் நாயர் அவர்களை நான் என்றும் மறவேன்.
இரவில் என் காலடியில்தான் படுப்பான். இயற்கை அழைப்புகள் வரும் பொழுதெல்லாம் ஈனக் குரலில் அழத்தொடங்கி (whining) என்னை எழுப்பி விடுவான். நான் அவனைத் தூக்கிக் கொண்டு வெளியிலே தோட்டத்தில் விட்டு பின் எடுத்துக் கொண்டு வந்து படுக்க வைப்பேன். தினமும் இரு வேளை நான் மிருதுவாக அவனைத் தூக்கிப் பிடித்துக்கொள்வேன் என் மனைவி அவனைப் பால் அருந்த வைப்பாள். எக்காலும் வீட்டினுள்ளே சிறிதளவு கூட அசுத்தம் செய்யாத சிங்கைப் போல் ஒரு நாயை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.
பிறகு சுமார் 20 நாட்கள் கழித்து சிங்கத்தை நாயரிடம் எடுத்துச் சென்றோம். சிங்கத்தை அறுவைச் சிகிச்சை அறைக்குள் எடுத்துக் கொண்டு போய் அவன் காலிலிருந்து கெட்டியாக ஒட்டிக்கொண்டிருந்த கட்டை முறைப்படி மெதுவாக அறுத்து விலக்கியெடுத்து விட்டு, கொண்டு வந்து எங்களிடம் கொடுத்தார். அவனது நான்கு கால்களையும் பார்த்துப் பெரும் நிம்மதியடைந்தோம். நல்ல வேள, அவன் காலை இழக்கவில்லை. ஆனால் பின்புறத்து இடது கால் சற்று ஊனமாய்ப் போன படியால் நடப்பதற்குச் சிறிது சிரமப் படுவான், ஆனால் போகப் போகப் பழக்கமாகிவிடும், கவலைப் படாதீர் எனக்கூறி என்னை அனுப்பி வைத்தார். அவருக்கும் கடவுளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு சிங்கத்தை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
அப்பொழுது தான், அடிப்பட்ட சிங்கத்தை சற்றும் நெருங்காதிருந்த எங்களது ஃபெம்மி அவனிடம் சென்று மோப்பம் செய்து அவனை நக்கிக் கொடுத்தது! கோடை விடுமுறைக்குச் சென்னை சென்றிருந்த குழந்தைகள் திரும்பி வந்தவுடனே எனது குழந்தைகள் முதலில் ஒவ்வொருவராக அவனைத் தூக்கியெடுத்தக் கொஞ்சத் தொடங்கினார்கள். வீட்டிலுள்ளோர் எல்லோரிடமும் செல்லமாக வாலைக் குழைத்துக் கொண்டு ஒட்டிக் கொள்வான். அவனிடம் எல்லாரையும் விட மிகவும் அன்பு செலுத்த ஆரம்பித்தது என் மகன, ஒரே மகன் ஜவஹர் தான் (கிடைசியாகப் பிறந்தவன்). ஆயினும், சிங் என்னை விடாமல் நான் எங்கு சென்றாலும் பின்னால் நொண்டிக் காலுடன் ஓடோடி வந்துவிடுவான். வெளியே எங்கேயாவது போக வேண்டுமென்றால் அவனுக்குத் தெரியாமல் என் மனைவியுடன் அவனை வேரொரு அறையில் வைத்துவிட்டு, பிறகு கிளம்பிச் செல்வேன்.
(தொடரும்)
மேலும் பல..... |
|
|
|
|
Source: suratha.com
|
|